இயக்குனர் மணிகண்டனை ஒளிப்பதிவாளராய் கேள்விப்பட்டிருந்தேன். முதல் முறையாக நான்கைந்து வருடங்களுக்கு முன் இயக்குனர் அருண் வைத்யநாதன், கார்த்திக் சுப்பாராஜுடன், மணிகண்டனின் அலுவலகமான கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடி அறையில் சந்தித்ததாய் நியாபகம்.. கார்த்திக் சுப்புராஜின் பல குறும்படங்களுக்கு அவர் தான் ஒளிப்பதிவாளர். அப்போது அவர் விண்ட் என்ற ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார்.
பார்த்த மாத்திரத்தில் அஹா.. என்று இருக்க, விஜய் சேதுபதியும் ஒரு நாயும் மட்டுமே நடித்திருந்த அப்படத்தில் பிணமாய் தொங்கியவர் நம்ம பாபி சிம்ஹா. அவரை அழைத்து பாராட்டினேன். அதன் பின் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது மட்டும் நடக்கும். இனிமையான நண்பரானார். பின்பு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து ஒரு குறும்பட வெளியீட்டிற்கான அழைப்பு வந்தது. “மீண்டும் ஒரு புன்னகை” என்ற அரை மணி நேரக் குறும்படம். அப்படத்திற்கு வசனம் நலன் குமாரசாமியும், இன்னொருவரும் எழுதியிருந்தார்கள். அரை மணி நேரத்தில் பத்து இடத்திலாவது சிரிக்கும்படியான வசனங்கள். அற்புதமான ஒளிப்பதிவு, மிக இயல்பான மேக்கிங் கிட்டத்தட்ட கெளதம், மணி ரத்ன பட ரேஞ்சுக்கு விஷுவல்களும், மேக்கிங்கும். கொண்ட இளைமையான படம். இது அத்தனையும் வெறும் 5டியில். படம் பார்த்து முடித்து அடுத்த ஸ்கீரினிங்கும் பார்த்துவிட்டு, அரை மணி நேரம் பாராட்டிவிட்டுத்தான் வந்தேன். அதன் பிறகு நானும் அவரும் அடிக்கடி பேசவில்லையென்றாலும், கலகலப்பு படத்தில் வேலை செய்யும் போது அவரை சந்தித்தேன். விரைவில் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பார்த்த மாத்திரத்தில் அஹா.. என்று இருக்க, விஜய் சேதுபதியும் ஒரு நாயும் மட்டுமே நடித்திருந்த அப்படத்தில் பிணமாய் தொங்கியவர் நம்ம பாபி சிம்ஹா. அவரை அழைத்து பாராட்டினேன். அதன் பின் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது மட்டும் நடக்கும். இனிமையான நண்பரானார். பின்பு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து ஒரு குறும்பட வெளியீட்டிற்கான அழைப்பு வந்தது. “மீண்டும் ஒரு புன்னகை” என்ற அரை மணி நேரக் குறும்படம். அப்படத்திற்கு வசனம் நலன் குமாரசாமியும், இன்னொருவரும் எழுதியிருந்தார்கள். அரை மணி நேரத்தில் பத்து இடத்திலாவது சிரிக்கும்படியான வசனங்கள். அற்புதமான ஒளிப்பதிவு, மிக இயல்பான மேக்கிங் கிட்டத்தட்ட கெளதம், மணி ரத்ன பட ரேஞ்சுக்கு விஷுவல்களும், மேக்கிங்கும். கொண்ட இளைமையான படம். இது அத்தனையும் வெறும் 5டியில். படம் பார்த்து முடித்து அடுத்த ஸ்கீரினிங்கும் பார்த்துவிட்டு, அரை மணி நேரம் பாராட்டிவிட்டுத்தான் வந்தேன். அதன் பிறகு நானும் அவரும் அடிக்கடி பேசவில்லையென்றாலும், கலகலப்பு படத்தில் வேலை செய்யும் போது அவரை சந்தித்தேன். விரைவில் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது நான் எழுதிய “முத்தம்” என்ற சிறுகதையை அவரிடம் அனுப்பி இதை குறும்படமாய் பண்ணலாமா? என்று படிக்க சொன்னேன். படித்துவிட்டு நிச்சயம் செய்யலாம் என்று சொல்ல, அதற்கான முயற்சியில் இருந்தபோது ஏனோ தெரியவில்லை அதற்கான சாத்தியங்கள் ஏனோ ஏற்படவில்லை. பின்பு ஒர் நாளில் பேப்பரில் காக்கமுட்டை விளம்பரம் பார்த்து மணியிடம் போனில் உங்க படம் தானா? என்று கேட்டேன். ஆமாம் என்றதும் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. மணிகண்டனின் குறும்படங்கள் எல்லாவற்றையும் பார்த்தபின் ஒரு சந்தோஷம் மனதினுள் வரும். கூடவே கொஞ்சம் பொறாமையும் வரும். அட.. இவ்வளவு அழகாய் எடுக்குறாரே என்று. இன்று காக்காமுட்டை பார்த்துவிட்டு, வெளியே வந்த கணத்தில் உடனே மணிகண்டனுக்கு போன் செய்தேன். “மணி அட்டகாசம். ரொம்ப. ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. கொஞ்சம் எக்ஸைட்டாவும் இருக்கு. அத்தோட எப்பவும் ஏற்படற லைட்டான பொறாமையும் இருக்கு” என்றேன். சிரித்தபடி.. ”இருக்கட்டும் சார் நல்லது தானே? “ என்றார். காக்காமுட்டை தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமா ஆட்களுக்கே மேற்சொன்ன லைட்டான பொறாமை ஏற்பட வைக்கும் சினிமாகவும், ரசிகனை கர்வமடையவைக்கும் சினிமாவாக வந்திருக்கிறது.
காக்கா முட்டை சகோதரர்களின் அந்த கேஷுவல் வாக், சின்னவனின் முகத்தில் தெரியும் ஆர்வம் கலந்த இன்னொசென்ஸ். பெரியவனின் ஆர்வம், அதற்கான முயற்சி, பேசும் பேச்சுக்கள், அவ்வளவு இயல்பு. அவ்வயது பசங்களின் பேச்சை மீறி ஒரு இன்சு கூட இல்லை. அந்த பசஙக் நடிச்சிருக்காங்களா? இல்லை வாழ்ந்திருக்காங்களா? என்றே தெரியவில்லை. அவ்வளவு இயல்பு. இவர்கள் மட்டுமில்லாமல், அம்மா ஐஸ்வர்யா, பொக்கைவாய்ப் பாட்டி, லோக்கல் எம்.எல்.ஏ, அவருக்கு அல்லைக்கையாய் இருந்து அடுத்த நிலைக்கு வரத்துடிக்கும், சூது கவ்வும் ரமேஷ், பன்னி மூச்சி வாயன். பிட்சாக்கடை ஓனர் நண்பரான கிருஷ்ணமூர்த்தி என யோசித்துப் பார்த்தால் க்ராஸ் செய்யும் சின்னச் சின்ன கேரக்டர் கூட அவ்வளவு இயல்பாய் நடித்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
படத்தின் மேக்கிங் இயல்பென்றால் நடிக்கும் கேரக்டர்கள் பேசும் வசனங்கள் அத்துனை இயல்பு. ஐஸ்வர்யாவின் பேச்சில் மட்டுமில்லாமல் பல கேரக்டர்களின் பேச்சில் ஆங்காங்கே இயல்பாய் வந்து விழும், ஆங்கில வார்த்தைகள், இவர்களின் ஏழ்மையை எங்கேயும் மிகைப்படுத்திக் காட்டாத அவர்களின் வாழ்க்கை. இவர்களின் வாழ்க்கையை, இன்னொசென்ஸை பயன்படுத்தி, அதையும் காசாக்கி வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏவாய் திரியும் அரசியல் வாதி. அடுத்த தலைவனாக ஆசைப்படும் ரமேஷ் க்ரூப். லைன் மேன் ஜோ மல்லூரி. காணாமல் போன சிறுவர்களைப் பற்றி டிவி சேனலில் அவர்களது வாழ்க்கையைப் பற்றி, அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் காம்பேரர் முன் நிஜமாகவே பசங்கள் க்ராஸ் செய்ய, அதை யாரும் பார்க்காமல் இருக்கும் சர்காஸ கிண்டல். என படம் நெடுக இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், எழுதியவரும் பின்னி பெடலெடுக்கிறார்கள். இப்படத்தில் தேடிக் கண்டுபிடித்து குறை சொல்வதை விட, நல்ல சினிமா வேண்டுமென்ற ஆசையுள்ள அத்தனை பேரும், நல்ல சினிமானா மொக்கையா மொள்ள நவுருமே அதா? என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களாகட்டும் எதைப் பத்தியும் யோசிக்காம ஒரு நடை போய்ட்டு வந்திருங்க.. YOU ARE NOT SUPPOSED TO MISS THIS FILM. வாழ்த்துக்கள் மணிகண்டன்.
காக்கா முட்டை - பொன்முட்டை -கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
“மீண்டும் ஒரு புன்னகை” என்ற அரை மணி நேரக் குறும்படம். அப்படத்திற்கு வசனம் நலன் குமாரசாமியும், இன்னொருவரும் எழுதியிருந்தார்கள். அரை மணி நேரத்தில் பத்து இடத்திலாவது சிரிக்கும்படியான வசனங்கள். அற்புதமான ஒளிப்பதிவு, மிக இயல்பான மேக்கிங் கிட்டத்தட்ட கெளதம், மணி ரத்ன பட ரேஞ்சுக்கு விஷுவல்களும், மேக்கிங்கும்.
Summa peela vidathe.. antha short film paathi appave blog panni erukalam ela.. summa jalli adikathe 'enaku appave theriyum' nu.. neeyum un review um..
Arun http://www.cablesankaronline.com/2011/08/290811.html எதையும் ஒழுங்கா செய்யுறதேயில்லை :)
//லைன் மேன் ஜோ மல்லூரி//
Only in EB, lineman. In Railways, gang man.
Further, the duty of gang man has nothing to do with electric poles and wires. It is to inspect the railway tract; to look for loose screws to tighten it, to ensure that there is no widening gap anywhere due to nature or by miscreant or any other obstructions anywhere in the tract.
Gang is a group of gangmen and their supervisor is called Gangmate. The group works under the overall supervision of the officer called Permanent Way Inspector of Section engineer.
Malluuri is the gang man. The film shows the children seeing him pushing the tract cart on which the the boss PWI was sitting and they are inspecting the tract. Mallur signed to the children that the boss is on the cart, so, not now darlings.
Malluri is shown to be a jolly good fellow always smiling. But the life of a gang man is tragic: it is a very difficult job because anyone w/o the knowledge of the gang man, can put any obstruction; or divide the rail after the gang man is gone, esp. at nights. Accidents occur. If it occurs for any other reason also, the officers and other fix the gang man of the day and he will be dismissed or jailed.
In spite of this, Malluri is shown to be happy. We can take it that he is a mentally unsound person.
லைன் மேன் ஜோ மல்லூரி
Line man is in EB. In Railways, there are line man and gang man. LM is to check electricity poles and wires, and correct the faults in the line. Gang man is to walk along the rail tract to find if there are any loose screws and tighten them; to ensure that there are no obstructions like boulders (big rock); or if there are any gap in the rail. He is also to sit down when a train passes and watch closely if any thing is wrong in the hot axle box as welll as to see whether the train moves on the tract normally.
It is a very risky job. The officers always fix responsibility on the gang man for any accident so that they can escape. He has to walk on hot days; and during rains. At night, it becomes a great troubles for them. Because they have to be extra careful at night. They may be attacked by wild animals, if the tract runs through forest; or by miscreants who want to derail or stop the train to loot.
In this film, the gang man is shown to be always happy. It is incredible. A gang man is always unhappy. The director wants to shown him slightly mentally unsound.
Post a Comment