Thottal Thodarum

Jun 26, 2015

சாப்பாட்டுக்கடை - Haleem@Charminar

வருடா வருடம் ஹலீம் சாப்பிடுவது என்பது ஒர் வழக்கமாய் போய்விட்டது. சென்ற வருடம் லொக்கேஷன் பார்ப்பதற்காக ஹைதராபாத் போன போது பாரடைஸில் ஹலீம் சாப்பிட்டோம். இந்த வருடம் வழக்கம் போல சார்மினாரில்.  ஆனால் அவர்கள் வழக்கம் போல அவர்களுடய ரெஸ்டாரண்ட் வாசலில் இம்முறை போடாமல் உள்ளேயே வைத்திருந்தார்கள். 


ஹலீம் பற்றி வருடா வருடம் எழுதினாலும் வருடத்திற்கு ஒரு முறை ரம்ஜான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் உணவு என்பதால் ஸ்பெஷல். மட்டன், கோதுமை, பருப்பு வகைகள், குறிப்பிட்ட மூலிகைகள், ரோஜா இதழ்கள், நெய் என கிட்டத்தட்ட ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை ஸ்லோ குக்கிங்கில் சமைக்கப்படுகிறது.  ஹைதராபாத்தில் சிக்கன் ஹலீம், வெஜ் ஹலீமெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்கள். 

சென்னையில் தற்போது நிறைய இடங்களில் ஹலீம் கிடைத்தாலும், ஆத்தண்டிக்கான ஹலீம், சார்மினாரிலும், டான் பாஸ்கோ ஸ்கூலுக்கு எதிரே இருக்கும் பிஷர்மேன் ஃபேர் ரெஸ்ட்ராண்டிலும் தான். 

சர்வ் செய்யும் போது ஹலீமின் மேல் வறுத்த முந்திரி, கொஞ்சம் புதினா, அதன் மேல் துருவிய நெய்யில் பொரிக்கப்பட்ட வெங்காயம் என ஸ்பெர்ட் செய்து தருவார்கள். எல்லாவற்றையும் ஒரு முறை கலக்கி, சாப்பிட்டால், முதலில் நாவில் இடறும் வெங்காயத்தின் சுவையோடும், உடன் வரும் முந்திரி, ஹலீமில் இருக்கும் மூலிகைகள் மற்றும், ஏலக்காய்,  என இடற வாவ்.. வாவ்.. ஹாவ் எ ஹலீம். சார்மினாரில் மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை தான் கிடைக்கும் விலை 175


Post a Comment

2 comments:

Raj said...

சார் நேத்து தான் ஒரு இஸ்லாமிய நண்பர் கொடுத்தார்..

வீட்டுக்கு எடுத்து சென்று மனைவியிடம் கொடுத்த போது எதோ ஸ்வீட் பாயாசம் என்று நினைத்து வாயில் வைத்தவர், என்னங்க இது எதோ பிரியாணிய மிக்சியில அடிச்சி கொடுத்த மாதிரி இருக்குன்னார்..

நான் சாப்பிட்டு விட்டு எதோ காரமான ஓட்ஸ் கஞ்சி அப்படின்னு நினைத்தேன்.

இப்போதான் விவரம் தெரிந்தது.

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்... இது இங்கு ஹரீஸ் என்று சொல்லி ரம்ஜானுக்கு செய்யும் உணவு போல் இருக்கிறது.