கொத்து பரோட்டா - 27/07/15
சுஜய் கோஷின் அகல்யா நிறைய பேரின் கண்களை, வியாபாரத்தை திறக்கும் விஷயமாகியிருக்கிறது. நெடு நாளாய் நான் சொல்லிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் மீடியாவைப் பற்றிய ப்ராஜெக்டுகள் அதெல்லாம் நடக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அட.. ஆமாமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர ராமாயண அகலிகை கதையை மிக சுவாரஸ்யமான திரில்லராய் மாற்றியதோடல்லாமல், ராதிகா ஆப்தேவின் கண்களையும், உடலையும், மிக அழகாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். முடிவை என்னால் முதலிலேயே உணர முடிந்தாலும், அதை சொன்ன விதத்தில் மேக்கிங்கில் அட்டகாஷ். பல புதிய கதவுகள் திறக்கப் பட இருக்கின்றன.