கொத்து பரோட்டா - 13/07/16
பாகுபலி
ராஜமெளலி தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் இயக்குனர். நான் ஈ மூலம் தமிழ் நாட்டிலும் தன் கால் பதித்தவர். இன்று இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் தன் தடத்தை பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சரித்திர பின்னணி கொண்ட பேண்டஸி கதை. அதற்கு ஏற்றார்ப் போல பார்த்து பழகிய இளவரசன், நல்ல அரசன், வஞ்சகர்கள், துரோகம், கொலை, பழிவாங்கல் என்ற அரைத்தமாவுதான் ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா பின்பு பிரபாஸ் என வரிசைக்கிரமப்படி நடித்து தள்ளியிருக்கிறார்கள். முதல் பாதியில் எல்லா கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களது உறவு முறைகளை சொல்லி, கொஞ்சம் நேரம் காதல், பாட்டெல்லாம் போட்டு, எல்லாம் செட்டில் ஆனப் பிற்பாடு, இரண்டாம் பாதியில் வரும் போர்க் காட்சிகள் படத்தை பட்டாசாக்குகிறது. அனுஷ்காவை இளமையாய் பார்க்க காத்திருந்தவர்கள் எண்ணங்களில் மண்ணை வாரிப் போட்டாலும், அடுத்த பாகத்தில் கலக்குவார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ராஜமெளலியின் படத்தின் கதைகள் ஏதும் ஆவுட் ஆப் த பாக்ஸாய் இருந்ததில்லை. அதை சிறப்பான வெகுஜன ப்ரசண்டேஷனில் கொடுத்து அசத்திவிடுவார். இதிலும் அதையே பின்பற்றியிருப்பதும், ஒரிஜினல் கதையின் இடைவேளை பாயிண்டைத்தான் இப்படத்தின் முடிவாய் கொடுத்திருப்பதும், நிறைய பேருக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. But I Enjoyed The Movie.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சில நண்பர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்கள், படங்கள், அல்லது மனிதர்களைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களை ஏற்பதில்லை. உதாரணமாய் தாங்கள் மாபெரும் வெற்றி என்று கருதிய படத்தின் வசூல், இல்லையென்றால் அவர் நம்பும் ஒருவர் ஜீனியஸ் இவரை விட்டால் யாருமில்லை என்று அவர் போற்றும் மனிதர்களை பற்றிய வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் போன்றவைகள். ஆனால் அதை சொல்லும் எனக்கே அவர்கள் பிடித்தவர்களாகவும், பிடித்த படமாகவும் இருக்கும் பட்சத்தில் அதை சொல்வதில் உள்ள உண்மை வலித்தே சொல்கிறேன். அதை விட அத்தகவல் எனக்கு தெரியவரும் காரணம். சம்பந்தப்பட்டவர்களின் நெருக்கம். அதை மறுத்தலிப்பதற்கு எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. அதே போல நம் பக்க விளக்கங்களை கேட்கவும் வேண்டும். ஆனால் அப்படி சொல்லாமல் நம்மை காயப்படுத்தும் முயற்சி செய்வதுதான் நட்பினிடையே ஆச்சர்யமாய் இருக்கிறது. இதில் உன் நண்பனாய் நீ வெற்றி பெற வேண்டுமென்று சொல்கிறேன் என்ற ஒரு வரியை வேறு சேர்த்துச் சொல்வதுதான் உட்சபட்ச காமெடி.
@@@@@@@@@@@@@@@@@@
எப்போதும் குறும்பட இயக்குனர்கள் என் இனிய நண்பர்கள். சமீபத்தில் ஆக்ஸென்சர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களிடையே நடந்த குறும்பட போட்டிக்கு நடுவராக செயல்பட அழைத்திருந்தார்கள். அவரவர் வேலைகளுக்கிடையே கிடைத்த நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தார்கள். பார்த்த எல்லா படங்களைப் பற்றியும் டீடெயிலான விமர்சனங்களை முடிந்தவரை நகைச்சுவையாய் சொல்லி, அதில் சிறந்த குறும்படங்களை தெரிவு செய்தோம். தமிழ் சினிமா மட்டுமல்ல, குறும்பட உலகத்தையும் பேய் பிடித்திருக்கிறது என்பது கலந்து கொண்ட படங்களில் கிட்டத்தட்ட ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் பேய்ப் படங்களே. மேலும் சில இளம் இயக்குனர்களின் குறும்படங்களைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலான குறும்படங்கள் அவர்கள் பார்த்த சினிமாவின் தாக்கமாகவே இருக்கிறது. ஷாட்களில் காட்டும் ஆர்வம் எழுதும் திரைக்கதையில் இருப்பது குறைவாகவும் இருக்கிறது. அதையெல்லாம் மீறி அவர்களிடம் இருக்கும் எனர்ஜி அது கடத்தும், நமக்கு கொடுக்கும் நம்பிக்கை, அபாரம். வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
People may have some different opinion about climax. But excellent cg, performance, making. Output #Bahubali
என்னா வெய்யில் கொளுத்துது. பேசாம நாம ஹைதையிலேயே இருந்திருக்கலாம் சிலுசிலுன்னு லேசா தூறல் போட்டுட்டு..ம்ஹும்.
எவனோ ஒருத்தன்/ர்/ அனுப்புன ஸ்பேமினால என்னால மூணு நாளைக்கு ஆரோடும் லைக் போட்டு புழங்க முடியாதுன்னு எப்.பி ஓனர் சொல்லிட்டாரு. நியாயமாரே.. இத கேட்க ஆருமில்லையா?
@@@@@@@@@@@@@@@@@@
தீடீரென முடிவு செய்து ரெண்டொரு மணி நேரத்தில் சார்மினாரில் ரயிலேறியாகிவிட்டாயிற்று. அடுத்த திரைப்பட தயாரிப்பாளர் சந்திப்புக்காக. நெடு நாள் கழித்து ரயில் பயணம். அவரவர் சீட்டில் உட்காராமல், கலந்தடித்து உட்கார்திருந்தவர்களைப் பார்த்து சீட்டின் உரிமையாளர் சொத்தில் பாதியை அபகரித்த ஃபீலோடு, சீட் நம்பர் மட்டும் சொல்லி காட்டும் முகபாவங்கள் மாறவேயில்லை. அழகான தெலுங்கு பெண்கள் ஆங்காங்கே ஹெட்போனோடு யாரையும் கவனிக்காதவர்கள் போல நடித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல ஒரு மணி நேரம் லேட்டாய்த்தான் ரயில் போனது. பழைய ஹைதராபாத்தின் அதே க்ளம்சியான கட்டிடங்கள். கவலையே படாத ட்ராபிக். எழுபது கிலோமீட்டர் ஸ்பீடில் போனாலும், குறுக்கு அசால்ட்டாய் பாயும், வயதான ஸ்கூட்டி ஓட்டிகள் என தெலுங்கு திரைப்பட கதை போல நெஞ்சுக்கு பதக், பதக். ரம்ஜான் மாதமாகையால் ஊரெங்கும் ஹலீம் கடை முக்குக்கு முக்கு திறக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல பாரடைஸ், பாவர்சி கடைகளில் கூட்டம். இம்முறையும் ஹைதராபாத்தின் சிறந்த ஹலீமுக்கான ஓட்டெடுப்புகள். எஸ்.எம்.எஸ் போட்டிகள். அற்புதமான தரமான கோல்ட் பியர். அதை விட அற்புதமான பாவர்சி பிரியாணி. அதனுடன் கொடுக்கப்பட்ட கிரேவி. டிவைனின் இன்னொரு வர்ஷன். 50க்கும், 70க்கும் விற்கப்படும் சினிமா டிக்கெட்டுகள். மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாயாம். ஓலாவும் யூபரும், டாக்சி ஃபார் ஷூயூரும் அழுத்தமாய் கால் பதித்திருக்கிறார்கள். சைதாப்பேட்டை டூ மாதவரம் தூரத்துக்கெல்லாம் ஆட்டோவில் மீட்டர் போட்டு வருகிறார்கள். வராதவர்களுக்கு பதில் ஓலா இருக்கவேயிருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே வைக்கவில்லை ஹைதராபாத் ஆட்டோ ட்ரைவர்கள். சென்னையில் பஸ் இறங்கிய மாத்திரத்தில் பையை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொள்ள காத்திருந்த ஆட்டோக்காரர்களிடம் மீட்டர் போடுவீங்களா? என்ற மாத்திரத்தில் ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போனார்கள். ஓலா ஆஃபை எடுத்த மாத்திரத்தில் ரெண்டொரு ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டு பத்து ரூபா ஓலாவுல கொடுக்கிறதே கொடுங்க என்றார்கள். என்னால் மேலும் சில பயணிகள் பயணடைந்தார்கள். இவர்கள் அடிக்கும் பீக் அவர் கொள்ளை பற்றிய மாற்றுக் கருத்து உண்டென்றாலும், ஓலா தெ கிரேட். எல்லாவற்றிக்கும் மேலாக சென்ற சந்திப்பின் பாஸிட்டிவ்னெஸ். அத்தனை பிஸியிலும், என்னை தொடர்ந்து பாலோ செய்து, மாலை சந்தித்து, அருமையான பேலியோ விருந்தளித்த நண்பர் யுவாவிற்கும், நான் இதுவரை உயர்ரக உணவகங்களில் மட்டுமே சுவைத்த அற்புதமான கேபேஜ் சாலட்டும், பேலியோ பிஷ்ஷையும் தயாரித்து அன்பாய் உபசரித்த திருமதி யுவாவின் அன்பிற்கும், விஸ்வஜித்தின் துறுதுறுப்புக்கும், மொத்தமாய் இந்த பயணத்தை சிறப்பாய் அமைத்திட உதவிய கடவுளுக்கும் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

Tiger
இரண்டு நண்பர்கள். சிறுவயது முதல் ஒன்றாய் வளர்ந்தவர்கள். ஒருவன் முரடனாய் வளர, இன்னொருவன் சாப்ட்வேர் இன்ஜினியராகிரான். அவன் காதலிக்கிறான். முரட்டு நண்பன் காதலை ஒத்துக் கொள்ள மறுக்கிறான். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாநாயகி ஓரிடத்தில் சாப்ட்வேர் ஹீரோவினால் ஒளிந்துக் கொள்ள சொல்லப்பட, அந்த ஹீரோவை கார் ஆக்ஸிடெண்டில் தூக்க முயற்சிக்கிறார்கள். அவனை நல்ல மனம் படைத்த ஒருவர் போராடி, ஆஸ்பிட்டலில் சேர்க்க, மயக்கம் ஆகும் முன் ஒரு போன் நம்பரை கொடுத்துவிட்டு மயங்குகிறான். அந்த நம்பர் பிரிந்த நண்பனின் நம்பர். பின்பு எப்படி தன் உயிர் நண்பனை காசி சென்று ஒற்றையாளாய் வில்லன் கும்பலையே எதிர்க்கிறான் என்பது தான் கதை. வழக்கமான ஹீரோ ஒர்ஷிப் கதை தான். இம்முறை சந்தீப். மற்றபடி பெரிய வித்யாசமில்லை. படம் அங்கே ஹிட். இருபத்தைந்தாவது நாளாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
எல்லா தினசரிகளிலும், அன்புமணி முதலமைச்சர் வேட்பாளர் என்ற முழுப்பக்க விளம்பரம். அதைத் தவிர தமிழகமெங்கும் போஸ்டர்கள் உட்பட. அதிமுக, திமுகவிற்கு எதிராய் வேறொரு கட்சி உருவாவதையும், மாற்றாய் ஒரு முதலமைச்சர் கேண்டீடேட் வருவது சந்தோஷமாய் இருந்தாலும், இவ்விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம், என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தால் என்னை சாட்டையால் அடியுங்கள் என்ற டாக்டர் அய்யாவின் குரல் கேட்பதும், ஆட்சியில் ஆங்காங்கே இருந்த நேரங்களை வைத்தே இவர்கள் சேர்த்த சொத்து, இவையெல்லாம் பார்க்கும் போது மாற்றம் மக்களுக்கு வருவதை விட இவர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.அது மட்டுமில்லாமல் ஜாதி அரசியல் ஆட்சியை கொடுக்காது என்பது என் நம்பிக்கை.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three words to ruin a man's ego...?
"Is it in?"
அடல்ட் கார்னர்
Three words to ruin a man's ego...?
"Is it in?"
Comments
உண்மையைச் சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. உங்கள் 'தொட்டால் தொடரும்' (perfect print..like blueray) பார்த்தேன். எப்படி இது நெட்டில் வந்தது ('நீங்கள் வெளினாட்டு உரிமை கொடுக்காதபோதும்)? படம் ஓரளவு நன்றாக இருந்தது. டாக்டர் ரோல் செட்டாகலை. ஏன்னா நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்வதுபோன்று உங்கள் முகம் உள்ளது.