Thottal Thodarum

Jul 20, 2015

கொத்து பரோட்டா - 20/07/15

என் ட்வீட்டிலிருந்து
ஏசுவே உண்மையான தேவன். அடப்பாவிகளா அவரையும் தேவராக்கிட்டாங்களே..‪#‎கார்பின்புறவாசகம்‬

mmm... ம்ம்ம்ம்ம்... மா.....ம்ம்ம்ம்ம்மா..

உழைப்பால் உயர்ந்த உத்தமரேன்னு பாட்டு பாடிச்சி ரோடெல்லாம். யாருடா அதுன்னு பார்த்தேன் காமராஜர் பர்த்டே. அப்ப சரியாத்தான் பாடியிருக்காங்க

துரோகங்கள் நமக்கு வலிமையலிக்க வந்த தந்திருஷ்ட்டி லேகியம்

பிதற்றல் உலகில் முட்டாளின் தீர்க்க தரிசனம்

எல்லோரும் நலம் வாழ நலம் வாழ்த்துக்கள் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ப்ளான் செய்யாமல் புறப்பட்டாயிற்று ஸ்ரீசைலத்திற்கு. திடீர் திடீரெனத்தான் கடவுள் என்னை அழைப்பார். இம்முறை நண்பர் தயாரிப்பாளர் சி.வி.குமார் மூலமாய்.  நிரம்ப நாட்களாய் ப்ளான் செய்து தட்டிக் கொண்டேயிருந்ததாம். கிளம்பிவிட்டோம். சென்னையைத் தாண்டும் வரை ட்ராபிக் அதிகமாகவேயிருந்தது. தமிழ் நாட்டின் எல்லை வரை கான்கிரீட் ராட்ஸசர்கள் முளைத்திருக்க, பச்சையை பார்க்கவே முடியவில்லை. தடா தாண்டி காலை டிபன் முடிக்க, ரோட்டோர கடை ஒன்றை தேர்தெடுத்து, சாப்பிட அமர்ந்த போது, “தோசை மாவு புதுசு. பரவாயில்லையா?’ என்றார் தெலுங்கில். புது மாவு புளிக்காமல் இருப்பதால் அப்படி சொல்கிறார் என்று யோசித்து, முதல்ல ஒரு தோசை கொடுங்க என்று ஆர்டர் செய்தோம். புதுசாய் எல்லாம் இல்லை கிட்டத்தட்ட இன்னும் ரெண்டொரு மணி நேரத்தில் புளிப்பாய் புளித்திருக்கும். பட்.. உடன் கொடுத்த காரமான சட்னிக்கு அட்டகாசமாய் இருந்தது.  வழி நெடுக கதைகளாய் பேசிக் கொண்டு வர, ஓங்கோலுக்கு திரும்பும் இடத்தில் சிறிது நேரம் ஊர் வழியே சென்ற போது சந்திரபாபு நாயுடுவின் போட்டோ போட்டு, நிறைய டிஜிட்டல் பேனர் கட்டியிருந்தார்கள். கிட்டத்தட்ட மகளிர் சுய உதவிக் குழுப் போல ஏதோ மகளிர் குழு ஆரம்பித்திருக்கிறார்கள் போல இருந்த ஒரே ஒரு இண்டர்நெட் செண்டரில் ஜெராக்ஸ் எடுக்க கும்பலாய் கும்மியிருந்தார்கள். அனைவரும் யூனிபார்ம் போல ஒரே டிசைன் புடைவை, ஜாக்கெட்டோடு இருந்தார்கள்.  ஓங்கோலிருந்து ஸ்ரீலைசத்திற்கு போகும் பாதி வழி கரடு முரடாய் இருந்தது. ப்ரகாசம் டிஸ்ட்ரிக்ட் என்று நக்சலைட்டுக்களூக்கு பேர் போன காட் வழி. கிட்டத்தட்ட ஆள் அரவமில்லாமல் பகலிலேயே கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது. போகப் போக, டபுள் ரோடு போட வேலை செய்யப்பட்டிருக்க, ஊர்ந்துதான் போக முடிந்தது. க்ராஸ் செய்யும் ஊர்களில் எல்லாம் பாகுபலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சமரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் கண்ட க்ரானைட் மலைகள், வரண்ட பரந்த நிலங்கள் எல்லாம் டெரர் தெலுங்கு படங்களை நியாபகப்படுத்தியது.

ஸ்ரீசைலத்தின் அடிவாரத்தில் மதிய பசிக்கு, வாசலிலேயே இருந்த கடையில் இறங்கினோம். சுடச் சுட பரோட்டா போடப்பட்டிருக்க, பேலியோவை கைவிட வேண்டிய நிலையில் ரெண்டு பேர் சாப்பாடு சாப்பிட, வழக்கம் போல பப்பு டமாட்டர், வெண்டைக்காய் பொரியல் ஒரு கூட்டோடு,  ஆந்திர முழுவதும் பேப்பர் தட்டை விட மிக மெல்லியதான பேப்பரில் டிசைனர் தட்டுக்களை உருவாக்கியிருக்கிறார்கள். சாப்பிட்ட மாத்திரத்தில் கசக்கி தூக்கியெறிந்து விடலாம். அதில் சுடச் சுட சோற்றைப் போட்டார்கள். வெண்டைக்காய் பொரியலை கையில் எடுத்த மாத்திரத்தில் காரம் தெரிந்தது அதன் கலரில். இருந்தாலும் தைரியமாய் எடுத்து சாப்பிட்டேன். நன்றாகவே இருந்தது. நான்கைந்து முறை கேட்டு வாங்கி சாப்பிட்டேன். உடன் நண்பர் சாப்பிட்ட பரோட்டாவில் பாதியை பிய்த்து கொடுக்கப் பட்டிருந்த சைட்டிஷ்ஷில் தோய்த்தேன். அதன் கலரும் டிபிக்கல் ஆந்திரக் கலர். காரம் என்னைப் பொறுத்தவரை மிக லேசாக அதிகமிருந்தது. பட் அருமையாய் இருந்தது. 

சாப்பிட்டு கிளம்பிய் மாத்திரத்தில் வழியெங்கும் அருமையான மலைபாதை. டபுள்ரோட்டுடன், வழுக்கிக் கொண்டு சென்றது பாதை. குரங்குகள் அநாயசமாய் ரோட் கிராஸ் செய்தது. புலியும் க்ராஸ் செய்யும் பார்த்து மெதுவாக செலல்வும் என்று போட்டிருந்தார்கள். புலி க்ராஸ் செய்தால் எங்கிட்டு மெதுவா..என்ற யோசனையில் இருந்த போது எதிர்பக்கம் நடந்தே செல்லும் நண்பர்கள் நால்வர், கையில் ஒரு பெரும் கழியோடு, நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கழி புலிக்காகவோ, கரடிக்காகவோ இருக்கலாம். மலையிலிருந்த, லிங்காயத் தங்கும் விடுதியில் அறை எடுத்து சிரம பரிகாரம் செய்து கொண்டு, மாலையே கோயிலுக்கு விசிட்டடித்தோம். நண்பருக்கு தெரிந்தவர் உமா சாமி என்பவர் அங்கே கோயிலில் இருக்க, அற்புதமான லிங்க அபிஷேகம் ஏற்பாடாகியிருந்தது. நம்மூர் கோயில் போல் இல்லாமல் நாமே லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கும்பிட முடியும். தரையிலிருந்து ஒரு அடிக்கு உயர்ந்திருந்த லிங்கத்திற்கு மேலே மண்டபம் அமைத்திருந்தார்கள். குறுகிய இடமாய் இருந்தாலும் லிங்காபிஷேகம் உடலெங்கும் பாஸிட்டிவான வைபரேஷனை கொடுத்தது. அற்புதமான தரிசனம். கிட்டத்தட்ட அந்தி மயங்கும் வேளையில் முழுக்க முழுக்க நெய், மற்றும் நசுக்கிய மிளகோடு செய்யப்பட்ட வெண் பொங்கல் அதி அற்புத டிவைன் அனுபவம். இரவு உணவாய் லிங்காயத் தங்குமிடத்தில் இலவச சாப்பாடு. சிம்பிள் அண்ட் நீட்.

காலை மீண்டும் லிங்காபிஷேகம் இம்முறை பாலுடன். பின்பு அம்மனுக்கு குங்கும அர்ச்சனை. திவ்ய தரிசனம். திரும்பும் போது ஸ்பெஷல் நெய் லட்டுவுடன் காத்திருந்தார் உமா சாமி. எங்களின் டிவைன் கோயில் டூருக்கான ஆர்கென் ரைஸர். எனக்கு தெலுகு மாட்லாடம் ஒச்சு. எல்லாருக்குமான ட்ராஸ்லேட்டர் வேலை வேறு. சிறப்பாக சென்றது. தரிசனம் முடித்த மாத்திரத்தில் உடன் ரிட்டன்.  கிளம்பும் போது 160கிமீட்டர் ஸ்பீடில் திடீரென ரோடு உயர்ந்திருக்க, கிட்டத்தட்ட ஒரு அடி தூரம் அந்தரத்தில் எகிறி கிழிறங்கி அலுங்காமல் ஜாகுவார் சென்றது. கிட்டத்தட்ட சிவனை தரிசிக்க செய்த மகானுபவம். அதன் பின்பு சுகானுபவம் தான். அதே மலைப் பாதை, வழியெங்கும் மலைத்தேனை கையில் வைத்து நூறில் வரும் வண்டிகளை கை காட்டி மறித்துக் கொண்டிருந்தார்கள். எந்த நம்பிக்கையில் அவர்கள் கைகாட்டி நிறுத்துங்க தேன் என்று சொல்வது எப்படி ஏசி கார்களில் பயணிப்பவர்களுக்கு கேட்கும்? என்று நினைக்கிறாங்க என்றேன். அதான் தலைவரே வாழ்க்கை. என்றார். சி.வி. சர்வம் சிவார்ப்பணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்ரீசைலம் மிகவும் புராதான பெயர் பெற்ற ஸ்தலம். கிருஷ்ணா நதியின் அடிவாரம் வரை ரோப் காரில் போக முடியுமாம். தண்ணீர் மிகவும் அடியில் இருப்பதால் போய் பிரயோஜனமில்லை என்றார்கள். வழி நெடுக, கடைகள். எங்கும் லாகிரி வஸ்துக்கள் கிடைப்பதில்லை. நாமக்கட்டிப் போன்ற ஒரு கட்டியை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருக்கிறார்கள். அதன் மீது கையை ஒரு தேய் தேய்த்தால் கிட்டத்தட்ட விபூதி போல ஒட்டிக் கொள்கிறது. அதுதான் விபூதி. நம்மூர் போல சுத்தமில்லாமல் இல்லை. எங்கும் சுத்தமாய் வைத்திருக்கிறார்கள். கடை வீதிகளில் பக்தி பாடல்கள் விற்கும் கடைகள் கூட அவரவர் கடைகளின் அருகே வரும் போது கேட்கும் படியான ஒலியைத்தான் வைத்திருந்தார்கள். இத்தனை மக்கள் கூட்டம் களேபரங்களுக்கிடையே கோயில் நிர்வாகம் ஒலிபரப்பும் பாடல்கள் துல்லியமாய் ஒலிபரப்பானது.  தேங்காய் உடைக்குமிடத்தில் உடைக்கும் தேங்காயை எல்லாம் பொறுக்கிக் கொண்டு போக ரெண்டு பேர் நின்று கொண்டேயிருக்கிறார்கள். நிச்சயம் ரீ சைக்கிளுக்கானவர்கள். அதையும் மீறி தேங்காய் உடைக்கிறவர்களிடம் பணம் கேட்கிறார்கள் தட்சணையாய்.  
@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாரி
ட்ரைலர் கொடுத்த அதீத எதிர்பார்பு. தனுஷின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ். ரோபோ சங்கரின் ஸ்பாண்டெயினிட்டி. புறா ரேஸ் கான்செப்ட். இப்படி ப்ளஸ்ஸான எல்லாமே வீக்கான கண்டெண்ட்டால் மும்மாரி பொழிய வேண்டியது வறட்சி பூமியாகிப் போனது.
@@@@@@@@@@@@@@@@@@
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, விலையில்லா க்ரைண்டர், மின் விசிறி, மிக்சியை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கம் போல மின் விசிறி பலருக்கு வேலை செய்யவேயில்லை. என் வீட்டில் ஹெட் நிற்கவே மாட்டேனென்கிறது. க்ரைண்டரும் மிக்ஸியும் ஓடுகிறதாம். மனைவியின் முகத்தில் வெற்றி பெருமிதம். இப்படி ஒரு பொருளை கொடுக்காமல் இருக்கலாமே? என்றதுக்கு எங்கங்கையோ அடிக்கிறாங்க அதுல நமக்கு கொஞ்சம் கொடுத்தா பொறுக்காதே என்றார் நண்பர். பின் எப்படி நாட்டில் லஞ்ச லாவண்யம் குறைஞ்சி நல்வாழ்வு ஏற்படும்? ம்ஹும்
@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
போன மாதம் சென்னைபட்டினா ரோட்டரி க்ளப்பிற்காக சவேராவில் கேட்டால் கிடைக்கும் பற்றி பேசினேன். அங்கு பேசியதைப் பற்றி யாரோ சொல்லி நேற்று ராயப்பேட்டை க்ளப்பின் சார்பாய் பிரெசிடென்ஸி க்ளப்பில் பேச அழைத்திருந்தார்கள். அரங்கு நிறைந்திருந்தது. காலையில் போட்ட வடை, இட்லி, மசால் தோசை, பொங்கல் காப்பியை மீறி ஞாயிறு காலையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. மீண்டும் கேட்டால் கிடைக்கும் தலைப்பிலேயே பேசினேன் பேசினேன் என்பதை விட இண்டராக்டிவாய் ஒரு செஷனை அமைத்துக் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். நிகழ்ச்சி முடிந்து நிறைய பேர் இன்ஸ்பிரேஷனாய் அமைந்திருந்தது என் பேச்சு என்றார்கள் சந்தோஷம் நாலு பேருக்கு நல்லதுன்னா நான் பேசுறது தப்பில்லை என்ன சொல்றீங்க?
@@@@@@@@@@@@@@@@@@ 
அடல்ட் கார்னர்
What's the smallest hotel in the world? 
a pussy, because you have to leave the bags outside. 


Post a Comment

No comments: