Thottal Thodarum

Jul 27, 2015

கொத்து பரோட்டா - 27/07/15

சுஜய் கோஷின் அகல்யா நிறைய பேரின் கண்களை, வியாபாரத்தை திறக்கும் விஷயமாகியிருக்கிறது. நெடு நாளாய் நான் சொல்லிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் மீடியாவைப் பற்றிய ப்ராஜெக்டுகள் அதெல்லாம் நடக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அட.. ஆமாமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர ராமாயண அகலிகை கதையை மிக சுவாரஸ்யமான திரில்லராய் மாற்றியதோடல்லாமல், ராதிகா ஆப்தேவின் கண்களையும், உடலையும், மிக அழகாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். முடிவை என்னால் முதலிலேயே உணர முடிந்தாலும், அதை சொன்ன விதத்தில் மேக்கிங்கில் அட்டகாஷ். பல புதிய கதவுகள் திறக்கப் பட இருக்கின்றன.
@@@@@@@@@@@@@@@@@@@@
நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்
ஊரு, உலகத்துக்கே உதாரணமா இருந்த ஊரை தங்கள் சுயநலத்துக்காக, செய்த சிறு பிழை எப்படி சூறையாக்கியது என்பதுதான் கதை. அறிமுகக் காட்சியே கிட்டத்தட்ட 25 நிமிடத்துக்கு மேல் போகிறது. மிகச் சிறப்பாய் செய்திருக்க வேண்டிய கதை. ஏனோ இரண்டாம் பாதிக்குப் பின் வளவளவென ஆகி.... 
@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று முதல் தமிழ் திரையுலகம் வரையரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். காரணம் பெப்சி ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் அதை நடைமுறைப் படுத்திய விதத்தின் காரணம். ஒரு படத்திற்கு யாரை எத்தனை ஊழியர்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற உரிமை தயாரிப்பாளருக்குத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து இங்கு நடக்கும் கூத்துக்கள் வேறெங்கும் நடக்காது. கேரளாவில் இங்கு கொடுக்கும் அதே ஒரு நாள் பேட்டாவில் ரெண்டு கால்ஷீட் சூட் செய்ய முடியும். நிறைய சரி செய்ய வேண்டியிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் பெரிய படங்கள் நிறைய முடங்கிப் போய் நிற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதே வேலையில் வரிசையில் நிற்கும் படங்கள் சுலபாமாக வெளியாகும் வாய்ப்பும் அதிகமாகும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
Bad Bad Wolves
குவாண்டின் பாராட்டிய படம் என்பது படத்தை டவுன்லோட மற்றொருமொரு காரணம். அற்புதமான ஓப்பனிங் காட்சி. அதன் பின் வரும் இல்லீகல் இன்வெஸ்டிகேஷன் காட்சி. பின் வரும் காட்சியில் ஆரம்பக் காட்சியில் வரும் குட்டிப் பெண் நாற்காலியில் இரண்டு கால்களும் கம்பிகளால் கட்டப்பட்டு, அவளுடய பேண்டீஸ் அகண்ட கால்களுக்கிடையே கீழிரக்கப்பட்டிருக்க, தலையே இல்லாமல் கொல்லப்பட்டிருக்கிறாள். மகா கொடுரமான கொலை. இன்வெஸ்டிகேஷனில் அடிபடும், ஸ்கூல் டீச்சர் மேல் தான் சந்தேகம். அதனால் தான் அப்படியான இல்லீகல் விசாரணை, அது ஒரு சிறுவனால் யூ ட்பூபில் லீக்காகிவிட, அதிகாரிக்கு டீப்ரோமோஷன் ட்ராபிக் டிபார்ட்மெண்டுக்கு. இருந்தாலும் தனியே அந்த வாத்தியாரை பாலோ செய்ய ஆரம்பிக்கிறான். அவனை கடத்துகிறான். அதே நேரத்தில் இவர்கள் இருவரையும் வேறொருவன் பாலோ செய்ய, அவன் வேறு யாருமில்லை. இறந்த பெண்ணின் தகப்பன். அவன் இவர்கள் இருவரையும் கடத்தி தனியிடத்தில் வைத்து போலீஸுடன் சேர்ந்து வதை என்றால் என்ன என்று காட்ட ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் போலீஸ் பாவம் இவன் அப்பாவி என அவனிடம் பேசும் போது நம்பி, வாத்தியாரும், போலீஸும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். ஒரு கட்டத்தில் போலீஸ் மட்டும் தப்பித்துப் போக, அவனது செல் போனில் அவளது மனைவி அவர்களது மகள் காலையிலிருந்து காணவில்லையென.. அப்போதுதான் உறைக்கிறது. மீண்டும் தேடிப் போகும் போது வாத்தியாரை கொன்றிருப்பான் அந்த தகப்பன். போலீஸின் பெண்ணோ, அந்த வாத்தியாரின் ரகசிய அறையில் இறந்துபோய்..  செம்ம கிரிப்பிங்கான படம். வன்முறையை காண சகிப்பவர்கள் மட்டுமே பார்க்கக் கடவது. மோசமான சைக்கோவிடமிருந்து விஷயத்தை வாங்க அவனை விட மோசமான சைக்கோவால் தான் முடியும் என்று அந்த தகப்பன் சொல்லும் காட்சி, அதற்கு வாத்தியார் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாம் சொல்லி புரியாது பார்க்கணும். கொஞ்சம் மெதுவான, ஆங்காங்கே லேக்கான கதை சொல்லல் தான். ஆஃப் வே க்ளைமேக்ஸ் தான்.  பட் ரிவிட்டிங்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ulidavaru Kandante
நாக்கை புரட்டி சுளுக்கு விடக்கூடிய டைட்டில்தான். ஆனால் செம்ம மேக்கிங். குவாண்டினின் ஸ்டைலில் அகிராவின் திரைக்கதை யுக்தியோடு, கொஞ்சம் லோக்கல் ப்ளேவர் கலந்த கதை. சிறு வயதில் நண்பனொருவன் அவனுக்கன சண்டையில் ஒருவனை குத்திப் போட, பயந்து போய் ஓடியவன் மும்பையில் டானுக்கு அசிஸ்டெண்டாகி, ஒரளவுக்கு செட்டிலாகி அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை கடத்திக் கொண்டு, அங்கிருந்து தப்பித்து துபாயில் தன் அம்மாவோடு செட்டிலாக நினைத்து, ஊருக்கு வருகிறான். அவன் சைடில் ஒரு கதை. அவனது கதையை சொல்லும் நண்பன், லோக்கல் தாதாவின் அடியாளும், முன்னாள் நண்பனுமானவன், அவனின் அம்மா, இவர்கள் அல்லாது இவர்களுக்கு வேலை செய்யும் கிஷோர் கேரக்டர் மூலம் அவரவர் பர்ஷப்ஷனில் சொல்லப்படும் கதை. அற்புதமான இசை, விஷூவல்கள், மிக ஸ்டைலிஷான மேக்கிங் என அசர அடிக்கிறார்கள். கன்னட பட உலகில் இம்மாதிரியான குவாலிட்டி படங்கள் ஆச்சர்ய மூட்டுகிறது. முக்கியமாய் அம்மாவாக வரும் தாராவின் பாயிண்டாப்வியூவில் சொல்லப்படும் டெம்ப்ளேட் அம்மா பாசம் காட்சிகள் தான் என்றாலும் அதிலுள்ள உயிர்ப்புத் தன்மையும், அடியாளாய் வரும் ஹீரோவின் நடிப்பும், அந்த புலி ஆட்டமும், கிஷோரின் ஒன் சைட் காதலும் க்யூட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Bajrangi Baijaan
சல்மானை காந்தி ரேஞ்சுக்கு உசத்தியிருக்கிறார்கள். தெலுங்கில் ராஜண்ணா என்ற பெயரில் ராஜமெளலியின் அப்பா இயக்கிய படம். அது ஒரு பீரியட் படமாய் அமைந்ததிருக்கும். அதில் நடித்த சிறுமி தன்னந்தனியாய் கிராமத்திலிருந்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவை பார்க்க செல்வாள். அக்கதையை ரைட்ஸ் வாங்கி உட்டாலக்கடியாக்கியிருக்கிறார்கள். தெலுங்கு ராஜன்னாவில் நாகார்ஜுன் போராளி, மக்களுக்காக உயிர் துறப்பவர். அவருடய மகள் தான் அக்குழந்தை.  குழந்தைக்காக போராடும் நல்லவன் சல்மான். படத்தின் மிகப் பெரிய பலம் அக்குழந்தையின் அழகும், நடிப்பும். நடிப்பு என்றால் வாய் பேசாத குழந்தை வேறு. அக்கால அஞ்சலிப்பாப்பா ரேஞ்சுக்கு எல்லாம் நெஞ்சை நக்காமல் க்யூட்டான சிறு சிறு ரியாக்‌ஷன்கள் மூலம் நம் மனதை கவ்வுகிறாள். பாகிஸ்தான் போகாமலேயே ராஜஸ்தானில் பாகிஸ்தானை அமைத்திருக்கிறார்கள். இம்மாதிரியான கதைகளுக்கு ஏற்ற டெம்ப்ளேட் காட்சிகள் தான் என்றாலும் க்ளைமேக்ஸில் நம்முள் உள்ள எமோஷனல் ப்ளாகார்ட்டை தட்டி எழுப்பி உணர்ச்சிவசப்பட வைத்துவிடுகிறார்கள். அழகாய் எடுத்திருந்தால் உலகப்படமாகி பலர் பார்க்காத படமாயிருக்க வேண்டிய களம். ஆர்ப்பாட்டமாய் எடுக்கப்பட்டு பிக் பட்ஜெட் மசாலாவாக்கி வெகு ஜனங்களை ரீச் செய்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பல சமயங்களில் நேரம் தான் பல விஷயங்களை தீர்மானிக்கிறது

பெண்கள் உப்பைப் போல இருந்தா யாரும் கண்டுக்க மாட்டோம். இல்லாட்டித்தான் அதன் அருமை தெரியும் ‪#‎ravinasivam‬ எழுதி ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்டது

நல்லாருக்குன்னு சொல்ல முடியலை.. இல்லைன்னு சொல்ல முடியலை. ஆனா பக்கா எமோஷனல் க்ளைமேக்ஸ்‪#‎BajrangiBhaijaan‬

ஏசுவே உண்மையான தேவன். அடப்பாவிகளா அவரையும் தேவராக்கிட்டாங்களே..‪#‎கார்பின்புறவாசகம்
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Royal Wedding🎩👑👠
On the day of the wedding, Laura was getting dressed surrounded by all Her family when she suddenly realized she had forgotten to get any shoes.
Panic! Then Her sister remembered she had a pair of white shoes from Her wedding, so she lent them to Laura for the day.
Unfortunately they were a bit too small and by the time the festivities were over, Laura’s feet were agony.
When she and Edward withdrew to their room, the only thing she could think of was getting Her shoes off.
The rest of the family crowded round the door to the bedroom and they heard roughly what they expected: grunts, straining noises and the occasional muffled scream.
Eventually they heard Edward say, “God, that was tight.”
“There,” whispered the Queen, “I told you she was a virgin.”
Then, to their surprise they heard Edward say, “Right. Now for the other one.”
This was followed by more grunting and straining and at last Edward said, “My God, that was even tighter”
“That’s my boy,” said the Duke. “Once a sailor, always a sailor.”

கேபிள் சங்கர்



Post a Comment

4 comments:

Ponchandar said...

ராதிகா அஃப்தே -- என்னா உடம்புயா .... மொழி-ல நடிச்ச பொண்ணா அது.. அது சரி...இந்த சீசனுக்கு குற்றாலம் வரலையா ??????

Gopi said...

தல, அது Big Bad Wolves தானே? நீங்க Bad Bad Wolves ன்னு போட்டு இருக்கீங்க. மாத்திடுங்க.

rmn said...

bajrangi baijjan film is too good

'பரிவை' சே.குமார் said...

அருமை....