ஒவ்வொரு முறை ஹைதராபாத் போகும் போதும் அங்குள்ள பிரபல பிரியாணிகளை ஒரு கை பார்க்காமல் வந்ததில்லை. முதல் முறை செகந்தராபாத் பாரடைஸில். பின்பு ஒரு முறை ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரடைஸில். அப்போதெல்லாம் நிறைய பேர் சொல்வார்கள் பாவர்சியில் இதைவிட அட்டகாசமாய் இருக்குமென. சென்ற வருடம் சென்ற போது கூட ஹலீமும், பிரியாணியும் பாரடைஸிலேயே முடிவடைந்தது. எனவே இம்முறை பாவர்சியில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்ற முடிவில் பேலியோ விடுமுறை விட்டேன்.
பாவர்சி என்றால் செஃப் என்று அர்த்தமாம். ஹைதராபாத் முழுவதும் க்ரீன் பாவர்சி, அந்த பாவர்சி, இந்த பாவர்சி என நிறைய லோக்கல் தலப்பாக்கட்டிப் போல பல்வேறு துணை பெயர்களோடு இருக்கிறது. ஆனால் ஒரிஜினல் பாவர்சி ஆர்.டி.சி ரோட்டில் தான் இருக்கிறது என்றார்கள். எனவே விட்டேன் ஆட்டோவை ஆர்.டி.சி ரோட்டிற்கு. சந்தியா 70எம்.எம்.35எம்.எம் திரையரங்கிற்கு எதிர் பக்கம் பரபரப்பாய் இருந்தது. உள்ளே நுழையும் போதே வாசம் என்னை ஆக்கிரமித்துக் கொள்ள, பரபரப்பாய் உள் நுழைந்தேன். எங்கெங்கு காணினும் பிரியாணி ப்ளேட்களே கண்களுக்கு தெரிந்தது.
வழக்கம் போல பிரியாணி ஆர்டர் செய்தாயிற்று. வழக்கம் போல ரெண்டு மடங்கு சைஸில் டேபிளின் மேல் வெகு வேகமாய் பிரியாணி, அத்தோடு, கிரேவி, உடன் தண்ணியான தயிர் வெங்காயத்தை வைத்தான். பேரடைஸில் சாப்பிடுவது போலில்லாமல் கறி மசாலாவுடன் பிரியாணி அரிசியுடன் மிக்ஸ் ஆகியிருக்க, பேரடைஸை விட சற்றே காரம் அதிகமாய் இருந்தது. உடன் கொடுத்திருந்த கிரேவி அட்டகாசம். டிவைன் என்ற வார்த்தைக்கான பதத்தில் இருக்க, நல்ல காரசாரமான டிவைன் பிரியாணி பாவர்சியில் மட்டுமே. எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட பேரடைஸ் அளவு காரத்துடன் சென்னையில் கிடைக்கும் ஹைதராபாதி பிரியாணியில் சார்மினார் மட்டுமே. டோண்ட் மிஸ்
Post a Comment
4 comments:
Ji... hyd la evlo naal irupinga?? Neram kidaikum podhu sandhipom. ..
சாப்பாட்டுக் கடை அருமை...
சாப்பாடுகடை பகுதி மிகவும் உதவியாக உள்ளது.ஆனால் இடத்தின் பெயரை கடை பெயருடன் குறிப்பிடாததால் அந்த இடத்திற்கு செல்லும் போது தேட கடினமாக உள்ளது.
***உதாரணமாக***
1.Dosa calling
2.வெஜ் நேஷன்
3.தாபா எக்ஸ்பிரஸ்
பதிலாக
1.Dosa calling - அடையாறு
2.வெஜ் நேஷன் - பார்சன மனரே
3.தாபா எக்ஸ்பிரஸ் - சென்னை செனடாப் ரோடு
என்றால் எளிதாக இருக்கும்
anna if i share your post na
Post a Comment