கொத்து பரோட்டா - 31/08/15
கேட்டால் கிடைக்கும் கேட்டால் கிடைக்கும் ஐநாக்ஸ் விருகம்பாக்கம் திரையரங்கில் எப்போது 10 ரூபாய் டிக்கெட்டுக்கள் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், உடன் பெப்ஸி மற்றும் கோக்குகள் சகிதம் 120 கொடுத்தால் தான் டிக்கெட் தருவேன் என்பார்கள். இதற்காக ஒரு முறை சண்டைப் போட்டு, பத்து ரூபாய்க்கே டிக்கெட் வாங்கிய அனுபவத்தை எழுதியிருந்தேன். இது பற்றி மேனேஜரிடம் புகார் செய்த போது, இப்போதுபுதிய டீம் வந்துவிட்டது. அம்மாதிரியெல்லாம் இல்லை என்றார்கள். நேற்றிரவு பாண்ட்தம் படம் பார்ப்பதற்காக மீண்டும் ஐநாக்ஸ் படையெடுத்தோம். பத்து ரூபாய் டிக்கெட் தான் இருப்பதாகவும், பேக்கேஜ் டிக்கெட் தான் தருவோம் என்றார்கள். விலை 120 ரூபாய். 10 ரூபாய்க்கு டிக்கெட் மீதிக்கு கோக். நான் எதற்காக அப்படி நீங்க விற்க வேண்டும் என்று கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது. பேக்கேஜாகத்தான் விற்போம். இல்லாவிட்டால் மேனேஜரிடம் பேசிக்கங்க. என்றார். பின்பக்க வழியாய் மேனேஜரை பார்க்க போன இடத்தில் இருந்த செக்யூரிட்டி, மேனேஜர் யாரும் இல்லை. பார்க்க முடியாது என்றார். நான் தொடர்ந்து அங்கு நட்க்கும் விஷயத்தைப் பற்றி பேச, உன்னைப் போல நூறு பேரு வர...