சில்லு 2065ல் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் உடலில் ஒரு சின்ன சிலிக்கன் சில்லை பொறுத்துகிறார்கள். அதில் ஒரு சில சில்லுகளில் ப்ரச்சனை. அப்பிரச்சனையுள்ள சில்லு கதை நாயகனின் உடலில். நாடெங்கும் உடலில் சில்லு பொறுத்தியதை எதிர்த்து கூட்டம் வருடங்களாய் போராட, நாயகனின் திருமணத்திற்கு முன்பு அவன் சாகப் போகிறானா? இல்லையா? என்பது தான் க்ளைமேக்ஸ். ச யின்ஸ் பிக்ஷன் நாடகம். கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் செட், காஸ்ட்யூம் என படுதா போட்ட நாடகங்களை விட அதிக மெனக்கெடல்கள் செய்தாக வேண்டிய கட்டாயம். பின்னணியாகட்டும், உடை அலங்காரம், மேக்கப் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். நாடகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா. முருகன். கொஞ்சம் சுஜாதாவின் சொர்க்கத்தீவு, என் இனிய இயந்திராவெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்கிறது என்றாலும், நாடகம் நெடுக சர்காஸ்டிக்கான வசனங்கள், கிண்டல் நகைச்சுவை நிறைந்த வசனங்கள் என வாத்தியாரை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். முக்கியமாய் புருஷனும் பொண்டாட்டியும் பேசிக் கொள்ளும் அல்லது ஆர்க்யூ செய்யும் போது, பேச்சு வாக்கில் உனக்கு ஹைட்ரோசில் ப்ராப்ள...