Thottal Thodarum

Sep 21, 2015

கொத்து பரோட்டா -21/09/15

வேளச்சேரி லூக்ஸ்
சத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து  அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@
Katte Batte
இம்ரான் கான், கங்கணா, யூத்புல்லான டீசர் என பார்த்த மாத்திரத்தில் படம் பார்க்க வேண்டுமென்ற் ஆவலை ஏறப்டுத்திய படம். படுத்திருக்கும் இம்ரானை வீடியோ எடுத்தபடி, வா திருமணம் செய்து கொள்ளலாம் என்று குப்பைத் தொட்டியில் நெருப்பை ஏற்படுத்தி, கலர் செய்யப்பட்ட கயிறை மஞ்சள் கயிறாகவும், தக்காளி கெச்சப்பை சிந்தூராகவும், இட்டுக் கொண்டு, ஆரம்பிக்கும் குதூகலாம். சீரியசாய் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியோடு, பழகும், சச்சா பியார் பார்ட்டி, இம்ரானுக்கும், எந்தவிதமான கமிட்மெண்டுக்கும் கட்டுப்படாத, சும்மா ஜாலிக்காக லிவ்வின் இருக்கிறேன் எனும் கங்கணாவுக்குமிடையே ஆன காதல் கதைதான். நான் லீனியரில் கங்கணா ஏன் பிரிந்து போனார் என்று விட்டு விட்டு தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதை அங்கே இங்கே என இழுத்துக் கொண்டுப் போய், இலக்கில்லாமல் சுற்றி, திடுமென கங்கணாவுக்கு பிரச்சனை அதனால்தான் பிரிந்தார் என ஆரம்பித்து நெஞ்சை நக்கி முடியை வழித்து விட்டார்கள். அருமையான காஸ்டிங், ஷங்கர் இஷான் லாயின் இசை, விஷுவல்ஸ் எல்லாம் இருந்தும் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த இம்ரான் ரசிக இளம் பெண்களில் ஆட்டம் ஈர்த்த ஈர்ப்பு படம் கொடுக்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழர்கள் உணர்ச்சி வசப்பட வைப்பது மிக சுலபமான விஷயம். அதிலும், இணைய பெருந்தகைகளை தூண்டிவிட, திசை மாற்றி விடுவது படு ஈஸி. தமிழ். தமிழீழம், ராஜபக்‌ஷே என்றாலே போதும்.பெரிய நடிகர்கள் படமென்றால் ஆவூவென கொடியை பிடிக்கும் கழகங்கள், அரசியல் கட்சிகள், பெண்ணியவாதிகள் எல்லோரும், திரிஷா இல்லைன்னா நயந்தாராவுக்கு அமைதியாய் இருப்பது செம்ம காமெடியாய் இருக்கிறது. என்னடா இது தூண்டி விடுகிறார்ப் போல இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். பைசாவுக்கு பெறாத விஷயத்துக்கு எல்லாம் இணைய வெளியில் பொங்குகிறவர்கள் எல்லோரும், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அது மட்டுமில்லாமல் அப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் அசிங்கமா திட்டுறதுன்னா ராஜபக்‌ஷே என்கிற காட்சியை வேண்டுமென்றே வெளியிட்டு, தமிழ், தமிழீழம், என ஜல்லியடிப்பவர்கள் மத்தியில் அப்படத்திற்கான பாஸிட்டிவ் விஷயத்தை ஏத்திவிட்டு குளிர்காயவும் செய்கிறார்கள் அதையும் புரியாமல் இவர்களும் சொம்படிக்கிறார்கள். சந்தோஷம். நாடும் நாட்டு மக்களும், நாசமாய் போகட்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@
மாயா
சினிமாவுக்குள் சினிமா, அதில் வரும் பேய்க் கதை. கொஞ்சம் போல்டர்கீஸ்ட், கொஞ்சம் மாமா, என பல கலந்துக்கட்டிய படங்களில் சாரமென்றாலும், அதை திரைக்கதையாய் கொடுத்த விதத்தில் சிறப்பாய் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.  சமீபத்தில் பார்த்த டெக்னிக்கலி பிரில்லியண்ட் படமென்று இதை சொல்வேன். ஆனால் அதே டெக்னிக்கை திரைக்கதையில் கொஞ்சம் ஓவராய் இம்ப்ளிமெண்ட் ஆகி, பல இடங்களில் லாஜிக்கல் கேள்விகளால் நம்மையும் கதையையும், பாலோ செய்ய முடியாமல் போய்விட, ஒரு வழியாய் க்ளைமேக்சில் அம்மா, பெண் பாசக்கதையாய் ஒரு வழியாய் ஒப்பேற்றிவிட்டார்கள். இரண்டு கதைக்குள்ளும், ஆரி இருப்பது, இரண்டாம் பாதியில் அது வரையில் நீட்டாக போய்க் கொண்டிருந்த படத்தை டமால் டுமீல் என்று அதிரடி களேபரமாய் ஆக்கியது நிச்சயம் பாராட்டுக்குறியது அல்ல. நயந்தாரா நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக பேசும் ஒரு வரி வசனம் க்ளாஸ் ரைட்டிங், ஆக்டிங், எக்ஸிக்யூஷன். படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கிய அம்சம், பின்னணியிசை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் அண்ட் எபெக்ட்ஸ். எடிட்டிங். நயன் தாரா. இத்திரைக்கதைக்கான முயற்சி. ஒரிரு விஷயங்களில் சறுக்கல்கள் இருந்தாலும், மீண்டும் சொல்கிறேன் சமீபத்திய டெக்னிக்கலி பிரில்லியண்ட் படம் மாயா.
@@@@@@@@@@@@@@@@@@
49ஓ
கவுண்டரின் நடிப்பில் என்பது படத்தை பார்க்க வைக்கும் முக்கிய கிரியாயூக்கியாய் இருக்க, ட்ரைலரும், ஆடியோ ரிலீஸின் போது சத்யராஜ், சிவகார்த்திகேயனின் பேச்சு கொடுத்த கலகலப்பும், மீண்டும் கவுண்டர் ராக்ஸ் என்று சொல்ல வைக்கப் போகும் படமென்ற எதிர்பார்பை கொடுத்தது. ஆனால் படம் சீரியசாய் விவசாயிகள்பிரச்சனை , அரசியல் என போனது ஏமாற்றத்தை கொடுத்து. வழக்கமான கவுண்டரின் பஞ்ச்கள் பெரிய அளவில் இம்பாக்டை கொடுக்கவில்லை என்பதும், அவரை காமெடியாய் யூஸ் செய்யாமல் சீரியசான ஆளாகவே காட்டியதால் சத்யராஜ், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடித்திருந்தால் இன்னும் அழுத்தமான படமாய் அமைந்திருக்கும் என்றேதோன்றுகிறது. இடையில் ஆறடி தாய்மடி என்று காமெடி செய்ய முயற்சித்திருக்கும் அபத்தங்களை கலைந்துவிட்டுப் பார்த்தால், முதல் படத்திலேயே இயக்குனர் ஆரோக்கியதாஸின் பொறுப்பும், அதை வெளிக்கொணர கொடுத்திருக்கும் சீரிய முயற்சியையும் பாராட்டியே தீர வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@@@@
திரிஷா இல்லைன்னா நயன்தாரா
வழக்கமாய் பெண்களை திட்டி எடுக்கப்படும் பாடல்களே பெரியதாய் ஹிட்டடிக்கும் காலத்தில் முழுக்க, பெண்ணுங்களே மோசம், அவளுங்க ஏமாத்துவாங்க. பசங்க மட்டும் தான் ஒழுங்கு, வர்ஜின் பொண்ணுங்க எல்லாருமே கூப்ட வந்திருவாங்கன்னு சொல்லுற படமிது ஓடாம இருக்குமா? அதிலேயும் சஜஸ்டிவா காட்ட வேண்டியத ஓப்பனாவும், ம்யூட்ல பேசுறத 5.1 டால்பிலேயும் கேக்குற கிக்கேதனிதான். அடல்ட் காமெடி. வயது வந்தவர்கள் மட்டுமே வாங்கன்னு சொல்லிட்டதுனால எப்படி பிட்டு படம் பார்ப்பதற்கு ஒரு ரசனையும், பொறுமையும் தேவையோ அதை போல இதை பார்ப்பதற்கான வயதும், மனநிலையும் உள்ளவர்கள் மட்டுமே இதை ரசிக்க முடியும். ஸோ.. நோ பட்டி டிங்கரிங். பட் படம் பார்ட்துவிட்டு வரும் பெண்களை சுற்றியிருக்கும் அத்துனை கண்களும் அவ கூப்டா வந்திருவா? இல்லாட்டி இவளை எவனாச்சும் ஒரு வாட்டி போட்டிருப்பானோங்கிற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@
சருகு - குறும்படம்
சமீப காலமாய் கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட் யூ ட்யூப் சேனல் மூலமாய் குறும்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறேன். அதில் நம் பதிவர் அவிங்க ராசாவின் இரண்டு குறும்படங்கள் வெளியிட்டிருக்கிறேன். இவரது முதலாவது படத்தின் திரைகக்தையை படித்தவன், அப்படத்தை விருதுக்கு பரிந்துரைத்தவன் என்கிற முறையில் அவரது வளர்ச்சி சந்தோஷமே.  சருகு இவரது இரண்டாவது குறும்படம். மிகச் சிறிய செலவில் கதை சொன்ன விதம் என்னை இம்பரஸ் செய்தது. ஒரே ஒரு நடிகரை வைத்துக் கொண்டு, அவரது நடிப்பு, ஒளிப்பதிவு, மற்றும் பின்னணி குரலின் மூலமாய் மட்டுமே கதை சொன்ன விதம் இம்பரஸிவ். பட். நீளம் கொஞ்சம் அதிகமே. நிச்சயம் இவரது வித்யாசமான முயற்சியை பாராட்டுவீர்கள் என்பது உறுதி.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தூக்கு தண்டனை, ஈழம், தமிழ், ராஜபக்‌ஷே போன்ற சில வார்த்தைகள் தமிழ் இணையத்தாரை எளிதாய் உணர்ச்சி வசப்படவைக்கக் கூடிய வார்த்தைகளாய் இருக்கிறது.

முன் முடிவோடு பேசுகிறவர்களுக்கு விளக்கம் தேவையேயில்லை

அவ இல்லைன்னா இவ.. ம்ம்ம் ஸ்டார்ட் மீசிக்

started off with flying colours failed to impress.. till the end ‪#‎KattiBatti‬

என்னத்த சொல்ல?.. ம்ம்ம்ம்... சே.. அஹா.. கிர்ர்ர்ர்.. சரி விடு.

happy to be associated with @vijayvyoma directorial venture. @sundeepkishan starring @GhibranOfficial all the best thalaivare Vijaya Kumar Ghibran Sundeep Kishan

கமல் /ரஜினி ரெண்டு பேரும் கலக்கோ கலக்கி ஃபையிங்.. ‪#‎Kamal‬

கருத்தாய் யோசிக்கும்”என் போன்ற” இளைஞர்கள் தமிழ் சினிமாவில் இன்னமும் இருக்கிறார்கள் என்பது 49 ஓ பார்த்த பின் சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு பசங்க பூராவுமே காஞ்சு போய் கிடக்குறாங்கன்னு தெரியுது. எது எந்த அளவுக்குன்னு நாளைக்கு தெரிஞ்சுரும்.

நிஜமெனும் சத்தியத்தினூடே சதிராடும் நிதர்சனங்கள்

ரஹ்மானின் பதில் பத்வாவின் வீரியத்தை காட்டுகிறது என்றாலும், ஒருவிதத்தில் பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது.

ஊரெல்லாம் ப்ராட்பேண்ட், பைபர் நெட் என்று வந்து சீரழிந்து கொண்டிருக்க, தடையில்லா இணையமாம் ம்க்கும்.

ஒருவருக்கு நேர்மை என தோன்றுவது மற்றொருவருக்கு அ நேர்மையாய் இருக்கிறது.
காத்திருப்பு என்பது வலி மிகுந்தது. சமயங்களில் கேட்டது கிடைத்த போதிலும்.
@@@@@@@@@@@@@@@@@
மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணனை 2011லிருந்தே அறிமுகம் அவரது தெ பளாட் குறும்படம் மூலமாய். அதைப் பாராட்டி ஒரு பதிவு போட்டிருந்தேன். பின்பு. 2012 ப்ரைவேட்டாய் இன்னொரு குறும்படத்தை அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் பின்பு பல வருடங்களுக்கு பிறகு நேற்று பேசினேன். மாயா படம் பார்த்துவிட்டு அவசரமாய் புறப்பட்ட காரணத்தால் அவருடன் பேச முடியவில்லை என்றேன். படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பேசினோம். அவரது கருப்பு வெள்ளை பேஷன் பற்றி, படத்தின் திரைக்கதைப் பற்றி என தொட்டு, எனது தொட்டால் தொடரும் பற்றி அவரது கருத்துக்களை சொல்லி. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் பெரிய அளவில் ரீச் ஆயிருக்குமென்றார். இன்னமும் அந்த நைவ் மாறாமல் பேசியது மிகவும் சந்தோஷத்தை அளித்தது. வாழ்த்துக்கள் அஸ்வின். http://www.cablesankaronline.com/2011/07/plot.html
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Girl: "Hey, what's up?" 
Boy: "If I tell you, will you sit on it?" 
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

சருகு - குறும்படம்

படத்தின் போக்கை முன்னரே யூகிக்க முடிந்தாலும் . . .

எடுத்துக்கொண்ட விசயத்தை மிக அழகாக பிரெசென்ட் செய்துள்ளார் இயக்குனர்

சப்தம் மிக அருமை

பகிர்தலுக்கு நன்றி