Thottal Thodarum

Sep 14, 2015

கொத்து பரோட்டா - 14/09/15

சில்லு
2065ல் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் உடலில் ஒரு சின்ன சிலிக்கன் சில்லை பொறுத்துகிறார்கள். அதில் ஒரு சில சில்லுகளில் ப்ரச்சனை. அப்பிரச்சனையுள்ள சில்லு கதை நாயகனின் உடலில். நாடெங்கும் உடலில் சில்லு பொறுத்தியதை எதிர்த்து கூட்டம் வருடங்களாய் போராட, நாயகனின் திருமணத்திற்கு முன்பு அவன் சாகப் போகிறானா? இல்லையா? என்பது தான் க்ளைமேக்ஸ். யின்ஸ் பிக்‌ஷன் நாடகம். கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் செட், காஸ்ட்யூம் என படுதா போட்ட நாடகங்களை விட அதிக மெனக்கெடல்கள் செய்தாக வேண்டிய கட்டாயம். பின்னணியாகட்டும், உடை அலங்காரம், மேக்கப் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். நாடகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா. முருகன். கொஞ்சம் சுஜாதாவின் சொர்க்கத்தீவு, என் இனிய இயந்திராவெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்கிறது என்றாலும், நாடகம் நெடுக சர்காஸ்டிக்கான வசனங்கள், கிண்டல் நகைச்சுவை நிறைந்த வசனங்கள் என வாத்தியாரை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். முக்கியமாய் புருஷனும் பொண்டாட்டியும் பேசிக் கொள்ளும் அல்லது ஆர்க்யூ செய்யும் போது, பேச்சு வாக்கில் உனக்கு ஹைட்ரோசில் ப்ராப்ளமா? என்று கணவன் கேட்க, எனக்கெப்படிடா ஹைட்ரோசில் வரும் என்று மனைவி கேட்குமிடத்தில் புரிந்தவர்கள் நன்றாய் சிரித்தார்கள். அதே போல, எதிர்கால அரசியல் வாதிகள் பேசிக் கொள்ளும் காட்சி, இளம் பெண்கள் போர்னோ பார்ப்பது போன்று வரும் காட்சிகள், காதலர்கள் அணைத்துக் கொள்வது, சர்காஸ்டிக்கான டபுள் மீனிங் பேச்சு எல்லாம் சபா மேடை நாடகங்களில் நாலு கால் பாய்ச்சல். ஹுமனாய்டாய் நடித்தவர் உட்பட எல்லாருமே நன்றாக நடித்தார்கள். புதியவர்கள் என்ற குறையே இல்லை. அந்த வகையில் இயக்குனர் தீபா ராமானுஜத்தை பாராட்ட வேண்டும். நாடகத்தில் லெட் டவுன் என்று சொன்னால் அது இசையாய்த்தான் தோன்றுகிறது. மொத்த நாடகமும் ஒர் ஆர்ப்பாட்டமும்மில்லாமல், அமைதியாய், மிக அமைதியாய் போகிறது. அது பல சமயங்கள் தொய்வை ஏற்படுத்துகிறது என்பது என் எண்ணம். தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஷரத்தா, கிரியா தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பும் சிறப்பு. இம்மாதிரி மேடை நாடகங்களை ஊக்கப்படுத்த, இவர்கள் முன்னெடுத்திருப்பது வரவேற்கதக்கது.  வருகிற வாரம் கார்த்திக் ராஜா இசையில் பட்டணத்தில் பூதம் எனும் நாடகத்தையும், தேனாண்டாள் பிலிம்ஸ் தான் வழங்கவிருக்கிறதாம். வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

போன வார ஞாயிறன்று ”உன்னோடு வாழ்ந்தால் வரம் அல்லவா” மற்றும் “காதல் போதை” என ஏவிஎம் ப்ரிவியூ தியேட்டரில் திரையிட்டார்கள். சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ள அழைத்திருந்தார்கள். வழக்கம் போல ரெண்டுமே காதல் கதைகள் தான். இரண்டிலுமே.. கேரக்டர்களை இவர் தான் சார். ராம், அவ தான் சார்.. ப்ரியா என்று அறிமுகப்படுத்தும் க்ளிஷேவான திரைக்கதை.  முதல் படத்தில் கொஞ்சம் நான் - லீனியராய் கதை சொல்ல முயற்சித்திருந்தார் இயக்குனர் எம்.ஜி.ஆதவன்.  இரண்டாவதாய் பார்த்த காதல் போதை க்ளைமாக்ஸை நம் பக்கத்தில் விட்டுவிட்டார்கள். பட்.. இதிலும் அதே முறையான அறிமுகப்படலம் மற்றும் சரக்கு, என வழக்கமான டெம்ப்ளேட் குறும்பட விஷயம் தான். காதல் போதையில் பின்னணியிசை நன்றாக இருந்தது. வழக்கம் போல ஆளாளுக்கு லட்சங்களில் செலவு செய்துவிட்டு, மேலும் செலவு செய்து இலவச ப்ரிவியூ. வழக்கம் போல நான் இதை எண்ட்ரி பீஸ் வைத்து இதற்கான மரியாதையை, வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னேன். பிரபல நடிக நண்பரொருவர் இனிமே கெஸ்ட் எல்லாரும் 5000 ரூபாய் கொடுத்துட்டு வரணும்  என்றார். நான் ரெடி நீங்க 5001 தர்றதா இருந்தா என சுவாரஸ்யமான விவாதம் போனது. காசு வராது, கிடைக்காது என்று வழக்கம் போல புலம்பல்களை முன் வைத்தார்கள். பட்.. இலவசமாய் கொடுத்த அரங்குகள் எல்லாம் இன்று முப்பதாயிரமும் நாற்பதாயிரமும் வாங்கிக் கொண்டு, வியாபாரமாய் செயல்பட ஆரம்பித்துவிட்டன என்பதை புரிந்து கொண்டால்.. இவர்களது படத்திற்கு செயல்பட ஆரம்பிக்கும் என்பதை முதலில் அவர்கள் நம்ப வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@@@
பாயும்புலி
சுசீந்திரன், விஷால், ஹிட்டடித்த காம்பினேஷன். ஹிட்டடித்த பாடல், இமான், வேல்ராஜ் என சூப்பர் டெக்னீஷியன்கள். இது மட்டுமில்லாமல், பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரிலீஸ் பஞ்சாயத்து வேறு. எல்லாம் இருந்தும், ஸ்லோ பர்ஸ்ட் ஹாப். ஆங்காங்கே சுவாரஸ்ய திருப்பத்தோடும், சில பல இடங்களில் அதற்கு மாறாகவும் பயணித்து, க்ளைமேக்சின் போது தெரிந்த முடிகிறது என்பது தான் சோகம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Bale Bale Mahadiov
கை மறந்து  ஞாபகமில்லாமல் இருப்பது ஒரு வகை. இன்னொரு வகை எந்தெந்த காரியத்தில் மாறுகிறோமோ அந்தந்த காரியத்தில் கவனம் செலுத்தி முந்தியதை மறக்கும் கேரக்டர் நானி. வளர்ந்து பெரியவனாகியும், அந்த ப்ரச்சனை தீரவில்லை. அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் மாமனாரை சந்திப்பதையே மறந்து போய்விட, நீயெல்லாம் ஒரு புள்ளையா? என்று திட்டிவிட்டு போகிறார் மாமனார். பின்னொரு நாளில் அவரது பெண்ணுக்கு மறந்தியாய் உதவி செய்த நானியை பிடித்துப் போக, சிட்டுவேஷனாய் ஒவ்வொரு விஷயமும்,  அவளை இம்ப்ரஸ் செய்ய, தனக்கென ஒருத்தி கிடைத்துவிட்டாள் என, குதூகலித்து, நடந்தவையெல்லாம் எத்தேர்சையாய் நடந்தது என்றில்லாமல் உண்மை போலவே நானி நடிக்க முயற்சிக்க, ஒரு கட்டத்தில் விஷயம் தெரிந்துவிடுகிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.  நானி.. படு இம்பர்ஸிவ். மிக இயல்பாய் நடிக்கிறார். குறிப்பாய் அசடு வழிந்து, சட்டென ஸ்மார்ட்டாய் மாறும் காட்சிகளில் எல்லாம் அவரின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் அருமை. ஹீரோயின் அழகாய் இருக்கிறார். சொந்த புருஷனையே அண்ணே என்று அழைக்க நேரிடும் காட்சிகளில் சித்தாரா, நரேஷ், நானியின் ரியாக்‌ஷன்கள் செம்ம. கோபி சந்தரின் டீசெண்டான இசை, அழகான விஷுவல்ஸுக்களுக்கு காரணமான நம்மூர் நிசார். மாருதியின் சுவாரஸ்யமான இயக்கத்தில் கொஞ்சம் டெம்ப்ளேட் க்ளைமேக்ஸாக இருந்தாலும் சுவாரஸ்ய நகைச்சுவை, செண்டிமெண்ட் படம் பலே பலே மகாடியோவ்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்ட்ராபெரி
பா. விஜய்யின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு பேய் படம். பேய்க்கு ஒரிஜினல் ஓனரான தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடு. வழக்கமான பேய் பழிவாங்கல் தான் என்றாலும் அதில் நாட்டுப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் நடிப்பு விஷயத்திலும், திரைக்கதை விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் தேவையேயில்லாம் பாடல், ட்யூட் என ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்க, இரண்டாம் பாதியில் மெயின் லைனுக்கு வந்தவர்கள் ஜிக்ஸாக்காகி போய்விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குழந்தை செம்ம க்யூட்.
@@@@@@@@@@@@@@@@@@@
யட்சன்
யுடிவி, விஷ்ணுவர்தன், ஆர்யா, யுவன், ஓமி, என டெக்னிக்கல், சுபாவின் கதை திரைக்கதை வசனமென தனியொருவன் கொடுத்த எதிர்பார்ப்பு வேறு. தூத்துக்குடியிலிருந்து ஒரு கொலை செய்துவிட்டு, தலைமறைவாய் அலைய சென்னை வரும் ஆர்யா. பழனியிலிருந்து நடிப்பு ஆசையில் சென்னைக்கு ஓடி வரும் கிருஷ்ணா. இருவரும் முறையே எதிரெதிர் வேலைகளில் ஈடுபட வேண்டிய சிட்சுவேஷனில் மாட்டிக் கொள்ள என்ன ஆகிறது என்பதுதான் கதை. கேட்க பரபரவென இருக்கும் ஒன் லைன். ஆனால் அதற்கு எதிர்பதமான மேக்கிங் அண்ட் திரைக்கதை. எல்லா ஹைலி டெக்னிக்கலி குவாலிபைட் பீப்பிள் சேர்ந்து தனித்தனியே சமைத்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
In chillu play

பொறுமைக்கும் போறாமைக்கும் ஒரே தீர்வு பொறுமை


one plus is too good than apple..

நட்பு பல சமயங்களில் நம்மை மொன்னையாக்குகிறது.

பற்றற்று இருப்பது என்பது ஒரு ஹம்பக். அப்படி இருப்பதற்காக அதை நம்புவதும் பற்றுதான்

Interesting.. Fun..feel good..typical Telugu film climax ‪#‎balebalemahadiov‬

என்னதான் நம்மளை அவங்களுக்கு பிடிக்கலைன்னாலும், அவங்க செய்யும் செயல்களில் இருக்கும் காமெடிய நினைச்சி சிரிக்கும் மனநிலை டிவைன்.

வர அரை வாசி நேரம் அமர்திருப்பது கூட சாவாலாய் அமைந்துவிடுகிறதை நினைத்தால் பயமாய் இருக்கிறது... அவ்வ்வ்

யோசித்து உருவாக்கிய பல விஷயங்கள் பின் நாட்களில் மிகச் சுலபமாய் மற்றவர்கள் கையாலும் போது யோசித்தவனுக்கான மரியாதையை சமூகம் கொடுப்பதில்லை

தொ.தொடரும் படத்தில் வரும் ஜிபிஎஸ், ஆர்கெஸ்டட் க்ரைம் போன்றவைகளைப் பற்றி தனியொருவனுக்கு அப்புறமாவது டிஸ்கஷனில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
தினமும் எனக்கு எதையாவது சொல்லிக் கொடுக்கும் இச்சமூகமெனும் வாத்தியாருக்கு என் நன்றிகள்

பல சமயங்களில் என்னை பின்பற்றுகிறவர்கள் எங்கே என்னை ஃபாலோ செய்கிறேன் என்றால் கிரியேட்டிவிட்டி குறைந்துவிடுமோ என்ற அச்சம் கொள்கிறார்கள்

after a long time.. though got some extrodinary cinematography and tech creepy.. half way walk out happend frown emoticon @ ‪#‎DoubleBarrel‬

Stylish Vijaykanth type pakistan revenge patriotic film by kabir khan nothing more than that ‪#‎Phantom‬
@@@@@@@@@@@@@@@@@@@@@
Sin Nombre
இது ஒரு ஸ்பானிஷ் படம். மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாய் நுழைய விரும்பும் ஒரு மார்த்தா என்கிற பெண்ணின் குடும்பத்தை சுற்றியும், மெக்ஸிகோவில் உள்ள கிட்டத்தட்ட ரவுடிக் கும்பல் போல இருக்கும் குழுவில் இருக்கும் எல் கேஸ்பரைச் சுற்றி நடக்கும் கதை. எல் கேஸ்பரின் காதலியை குழுவின் தலைவன் கற்பழிக்க முயற்சி செய்யும் போது இறந்துவிட, அகதிகளாய் கூட்ஸ் வண்டியில் ஏறி ஊர்விட்டு அமெரிக்காவில் நுழைய விரும்பும் ஆட்களிடம் கொள்ளையடிக்க போக, அங்கே மார்த்தாவை எல்லார் முன்னிலையிலும் ஓடும் ரயிலின் மேல் தளத்தில் ரேப் செய்ய முற்பட, அவனை கொல்கிறான் எல் காஸ்பர். தன்னை காப்பாற்றிய எல்கேஸ்பரிடம் அன்பு கொள்கிறாள் மார்த்தா. இன்னொரு பக்கம் கேங்கின் ஆட்கள் எல் காஸ்பரை கொல்ல ஒவ்வொரு ஊரிலும் ஆட்களை விட்டு தேடிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் காஸ்பருக்கும், மார்த்தாவும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பிக்கிறார்கள். அது அவளுக்கு சரியான வாழ்க்கையை அளிக்காது என்று அவளை விட்டு விலக விரும்பி ஓடுகிற ரயிலில் இறங்கிவிட, அவளும் உடன் இறங்கிவிடுகிறாள். பார்டர் போர்சிடம் மார்த்தாவின் அப்பா மாட்டி, ரயிலில் அடிபட்டு இறந்துவிட, மார்த்தாவை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அவளை மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்க பார்டர் தாண்ட வைத்து கேங்கினால் சுடப்பட்டு இறக்கிறான் எல் காஸ்பர். சிம்பிளான கதைதான். ஆனால் சொன்ன விதமும், படமாக்கிய விதமும் அட்டகாசம். அவ்வளவு லைவ். கேங்குகளிடையே இருக்கும் ஒற்றுமை. மெக்ஸிக்கோவிலிருக்கும் வறுமை. எப்படியாவது அமெரிக்காவில் நுழைந்துவிட வேண்டுமென்ற வெறியில் உயிரை துச்சமென மதித்து போகும் பயணம். கேங் வார்கள். சிறுவனாய் இருந்தாலும் அந்த கேங்கில் அங்கீகாரம் பெறுவதுதான் வீரம் என்று தன்னை ஏதும் செய்யாமல் விட்ட, எல் காஸ்பரை அவன் கையினாலேயே கொல்லுமிடம். என இண்ட்ரஸ்டிங் படம்.
@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை பதிவுகளை தொடர்ந்து தற்போது அக்கடைகளைப் பற்றிய ஒரு விஷுவல் பதிவுகளையும் என்னுடய கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட் மூலமாய் கொண்டு வர ஆரம்பித்திருக்கிறேன். அது மட்டுமில்லாது. புதிய, சிறந்த குறும்படங்களை இந்த யூ ட்யூப் சேனல் மூலம் வெளிக் கொணர்ந்து அதை மார்கெட் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை அப்பட தயாரிப்பாளர்களுக்கு அளிக்க இருக்கிறேன். தற்போது சாப்பாட்டுக்கடை வீடியோ உங்களது பார்வைக்காக
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர் 
What’s the difference between a hooker and a drug dealer?
A hooker can wash her crack and resell it.
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: