Thottal Thodarum

Oct 25, 2015

கொத்து பரோட்டா - 26/10/15

சாப்பாட்டுப் சிறப்பிதழ் வெளிவர இருக்கிறது. சாப்பாடுன்னு முடிவானதுக்கு அப்புறம் நீங்க எழுதலைன்னை எப்படி? ஒரு கட்டுரை அனுப்புங்க என்றார் பிரியா கல்யாணராமன். இணையத்தில் ஆரம்பித்து, விகடன், கல்கி, இணைய இதழ்கள், தமிழ் இந்துவென பத்திரிக்கைகளிலும் எழுத ஆரம்பித்து வருடங்கள் ஆனாலும், குமுதத்திற்காக உத்தம வில்லனுக்காக எழுதிய சிறு பத்தி தவிர எழுதியதில்லை. முதல் முறையாய் ஒரு கட்டுரை. அதுவும் சாப்பாடு குறித்த என் அனுபவத்தை குறித்து. குமுதத்தில் எழுதுவது என்பது பிக் பட்ஜெட் கமர்ஷியல் படத்திற்கு ஈடான விஷயம். அவர்களுடய வாசகர் வட்டம் அவ்வளவு விரிவானது. படிச்சிட்டு சொல்லுங்க.

Oct 19, 2015

கொத்து பரோட்டா - 19/10/15

துவரம் பருப்பு பிரச்சனையிலிருந்து ஆயிரம் பிரச்சனைகள் ஊரிலிருக்க, மீடியாவில் ஒரு மாதமாய் நடிகர் சங்க பிரச்சனையை மட்டுமே ஊதி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்டிருப்பதும். இது தேவையா? அது தேவையா?  என்று ஏதோ சமூக அக்கறையுடன் கேள்வி கேட்பது போது நடிகர்களையும், சினிமா துறை சார்ந்தவர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துவதும், தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பது போன்ற அபத்தங்களை மீடியா ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. பேச வேண்டிய விஷயத்தை விட்டு, தேவையில்லாததை பற்றி பேசுவதில் உள்ள இவர்களது சமூக அக்கறையை பற்றி யோசித்தால் இன்னும் அபத்தமாகவும், அபாயகரமான விஷயமாகவும் இருக்கிறது. மீடியா நினைத்தால் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அஸ்திரம் தங்களிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அதை மொக்கை கிராபிக்ஸ் அம்புகளாய் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால்  பயமாய் இருக்கிறது. சரி இப்ப ஜெயிச்சாச்சு.. அப்புறம்.. வேற என்ன?

Oct 12, 2015

கொத்து பரோட்டா -12/10/15

நமக்கு நாமே என ஸ்டாலின் ஊர் ஊராய் சுற்றுவதை ஆன்லைனில் ஓட்டு ஓட்டு என ஓட்டுகின்றனர். கூட்டத்தின் நடுவே புகுந்து செல்பி எடுத்தவரை விலகிச் செல் என்று சைகை செய்யும் போது கன்னத்தில் கை பட்டால் ஓட்டுகிறார்கள். எனக்கென்னவோ.. அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே சொல்லாமல் கொள்ளாமல் யார் வந்து போட்டோ எடுத்தாலும்  தள்ளுங்க எனும் போது கை பட்டால் அடிப்பது போலத்தான் தோன்றுமென தோன்றுகிறது. ஊர் பட்ட ஊழல் பண்ணி விட்டு, மக்களிடம் போய் கேட்க என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டீர்களானால், அதற்கு தகுதி நமக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆதிமுகவில் முந்தைய ஆட்சியில் செய்யாத ஊழலா, இப்போது நடக்காததா? மாற்றி மாற்றி இவர்களையே தெரிந்தெடுத்தது நமது தவறு என்றே தான் தோன்றுகிறது. சரி. அதுக்கு பதிலாய் ப.ம.காவை செலக்ட் செய்யலாமென்றால். இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் சின்ன பணக்காரர்களாய் இருந்தவர்களின் சொத்து இப்போது கணக்கிட்டால் அது எங்கேயோ போகிறது. அவ்வப்போது ஆட்சியில் ஓர சீட்டில் உட்கார்ந்ததுக்கே இப்படியென்றால். முக்கிய சீட்டில் உட்கார வைத்தால்?. சரி விஜயகாந்த், என யோசித்தால் பல சமயம் சிரிப்புத்தான் வருகிறது. இணைய சிரிப்பொலி சேனலாய் இருக்கிறார். ஒரே குஷ்டமப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 7, 2015

Talvar

ஏழு வருடங்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்குதான் படத்தின் கதை. ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தான் மகளின் தகாத உறவின் காரணமாகவும், ஜாதிப் பெருமைக்காகவும் கொன்றதாக முடிவு செய்யப்பட்டு, இன்று ஜெயிலில் இருக்கிறார்கள். அக்காலத்தில் மீடியா தன் வசம் எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட வழக்கை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். விஷால் பரத்வாஜும், மேக்னா குல்சாரும்.

Oct 5, 2015

கொத்து பரோட்டா - 05/10/15

குற்றம் கடிதல் கலந்துரையாடல்
படம் பார்த்ததிலிருந்து இயக்குனரை சந்தித்து பாராட்ட வேண்டுமென்று இருந்தேன். ஏன் அதை ஒரு கூட்டமாய் நடந்தக்கூடாது என்று யோசித்த போது வேடியப்பனும் உடனே நடத்தணும் என்றார். அந்த பரபரப்பில் ஏற்பாடானதுதான் இந்த கலந்துரையாடல் கூட்டம். வழக்கம் போல அறை கொள்ளாத கூட்டம்.  குற்றம் கடிதல் படத்தை எப்படி ஆரம்பித்தோம் என்பதில் ஆரம்பித்து படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு வந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் பிரம்மா. இயக்குனர் சசி, கேள்விகள் கேட்க ஆரம்பித்து வைத்தார். பின் நான் தொடர்ந்தேன். நாங்கள் அதிகம் பேசாதவர்கள் எங்களை பேசச் வைத்தது இக்கூட்டத்தின் உண்மையென்றார் பிரம்மா. வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு விதமாய் பாராட்டி தள்ளினார்கள். விவாதித்தார்கள். பதில் பெற்றார்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது மூலம். நன்றி வேடியப்பன். நன்றி சசி சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@