Thottal Thodarum

Oct 12, 2015

கொத்து பரோட்டா -12/10/15

நமக்கு நாமே என ஸ்டாலின் ஊர் ஊராய் சுற்றுவதை ஆன்லைனில் ஓட்டு ஓட்டு என ஓட்டுகின்றனர். கூட்டத்தின் நடுவே புகுந்து செல்பி எடுத்தவரை விலகிச் செல் என்று சைகை செய்யும் போது கன்னத்தில் கை பட்டால் ஓட்டுகிறார்கள். எனக்கென்னவோ.. அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே சொல்லாமல் கொள்ளாமல் யார் வந்து போட்டோ எடுத்தாலும்  தள்ளுங்க எனும் போது கை பட்டால் அடிப்பது போலத்தான் தோன்றுமென தோன்றுகிறது. ஊர் பட்ட ஊழல் பண்ணி விட்டு, மக்களிடம் போய் கேட்க என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டீர்களானால், அதற்கு தகுதி நமக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆதிமுகவில் முந்தைய ஆட்சியில் செய்யாத ஊழலா, இப்போது நடக்காததா? மாற்றி மாற்றி இவர்களையே தெரிந்தெடுத்தது நமது தவறு என்றே தான் தோன்றுகிறது. சரி. அதுக்கு பதிலாய் ப.ம.காவை செலக்ட் செய்யலாமென்றால். இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் சின்ன பணக்காரர்களாய் இருந்தவர்களின் சொத்து இப்போது கணக்கிட்டால் அது எங்கேயோ போகிறது. அவ்வப்போது ஆட்சியில் ஓர சீட்டில் உட்கார்ந்ததுக்கே இப்படியென்றால். முக்கிய சீட்டில் உட்கார வைத்தால்?. சரி விஜயகாந்த், என யோசித்தால் பல சமயம் சிரிப்புத்தான் வருகிறது. இணைய சிரிப்பொலி சேனலாய் இருக்கிறார். ஒரே குஷ்டமப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கேட்டுட்டு செல்பி எடுக்குறதுக்கும், நடுவால புகுந்து எடுக்குறதுக்கும் வித்யாசமிருக்கு. அதுக்கான ரியாக்‌ஷன் சரின்னுதான் தோணுது

விருதை திருப்பிக் கொடுக்கும் போது பரிசு பணத்தையும் திரும்பக் கொடுத்திருவாங்களா? ‪#‎டவுட்டு‬

வேதாளம், தூங்காவனம் ட்ரைலர் விமர்சனம் ரெடியாயிருக்குமே

உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வதை விட்டு விட்டு பரிதாபம் தேடுவது மனபிழற்வை உண்டாக்கும்.

வாய் விட்டு புலம்புவது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிறது. ஆனால் பதில் சொல்லத்தான் மனசில்லை

One of the Best Made and Written film in recent time ‪#‎Talvar‬
@@@@@@@@@@@@@@@@@@@
மனோரமா ஆச்சியை சிறப்பாக வழியனுப்பி வைத்தார்கள் ரசிகர்களும், திரையுலகத்தினரும். எல்லா நகைச்சுவை நடிகர்களைப் போலவே நிஜ வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தவர். அதை எல்லாம் மீறி நம்மை மகிழ்வித்தவர். பக்கத்து வீட்டில் இரண்டரை வயது பையன். நாள் முழுக்க டிவியில் ஆச்சியின் இறு தி ஊர்வலம் காட்டப்பட்டுக் கொண்டிருக்க, “யாருடா செத்து போய்ட்டாங்க?” என்று கேட்டபோது, சட்டென யோசிக்காமல், “மனோரமா’ என்றார். அவங்க யாருன்னு தெரியுமா? என்று கேள்விக்கு கொஞ்சம் யோசித்து, ”பாட்டி சொல்லை தட்டாதே” என்று மழலையாய் பாடினான். ஆச்சிக்கு மறைவென்பதேயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
மசாலா படம்
ஆன்லைனில் படத்தை கிழித்து தொங்க விடும், விமர்சகர்களை நீங்களும் படமெடுத்து பாருங்க என்று சவால் விடுகிறார் தயாரிப்பாளர். அப்படி விடப்பட்ட சவாலில் அவர் வென்றார்களா? என்பதுதான் கதை. கிட்டத்தட்ட ஜிகர்தண்டாவின் இன்னொரு வர்ஷனாய் எடுக்கப்பட்ட கதையை வேறு படுத்த விமர்சகர்கள் மீதான விமர்சனம் பயன்பட்டதை தவிர, வேறு எதற்கும் உதவவில்லை. சிவாவின் ஒன்லைனர்கள் படத்திற்கு பெரிய பலம் முதல் பாதியை காப்பாற்றுகிறது.  க்ளைமேக்ஸில் இப்படி உட்டாலக்கடியாய் படமெடுத்தால் தான் ஓடுமென்பதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாதது.
@@@@@@@@@@@@@@@@
The Martian
சுஜாதா எழுதிய வானத்தில் ஒரு மெளனத்தாரகை சிறுகதையில், விண்வெளியில் தாய் கலத்துடன் தொடர்பு அறுந்து போய், கையில் இருக்கும் பசி மாத்திரையுடன், பூமியிலிருந்து தன்னை மீட்க, விண்கலம் அனுப்புவார்கள் என்று காத்திருப்பான். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது அசாத்தியமென்றும், அவரின் தியாகத்தை மெச்சி, அவருக்கு சிலை வைப்போம், அவரின் குழந்தைகளுக்கு கல்வி தருவோம் என்று விட்டு விடுவார்கள். கிட்டத்தட்ட அக்கதையின் எக்ஸ்டென்ஷன் தான். என்ன இன்னும் கொஞ்சம் சயின்ஸாக, சொல்லியிருக்கிறார்கள். இங்கேயும் மீண்டும் ஒரு விண் கலம் அனுப்ப ஆயிரம் தடைகள், யோசனைகள் எல்லாவற்றையும் மீறி எப்படி அவர் பூமிக்கு வந்தார் என்பதை க்ளைமேக்ஸில் நிஜமாகவே கலக்கியெடுத்திருக்கிறார்கள். நைல் பைட்டிங். நடுவில் கொஞ்சம் வாய்ஸ் ஓவராகவும், சொல்லும் விஷயங்கள். சர்வைவலுக்காக பெரும் கஷடமேதும் படாமல் இருக்க எல்லா வசதிகளும் இருப்பது போன்ற இன்றைய டெக்னாலஜிக்கள் சுவாரஸ்யத்தை குறைக்கத்தான் செய்கிறது. தனிமையைத் தவிர, வேறேதும் கொடுமை இல்லை. படத்தில் வரும் கேரக்டருக்கும் சேர்த்துத்தான். ரிட்லிஸ்காட் போன படத்திலிருந்து இம்முறை வென்றிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@
Jazbaa
ஐஸ்வர்யாவின் கம்பேக். நம்மூர் படத்தில் குழந்தை நட்சத்திரமாய் வலம் வரும் சாரா. இர்பான்கான், ஷபனா அஸ்மி என நல்ல நடிகர் கூட்டம். சஞ்சய் குப்தாவின் டெக்னிக்கல் பிரில்லியன்ஸ். கொரிய படத்தின் ரீமேக். என ட்ரைலரில் காட்டப்பட்ட ஏரியல் வியூ, மற்றும் க்ரீன் டோன் விஷுவல்ஸ் அட்டகாசம். படத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். குழந்தை கடத்தப்பட்டவுடன், கிடைக்கும் பரபரப்பு, அதன் பின் ஏனோ.. கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு குறைந்து சரிங்கப்பா சீக்கிரம் முடிங்க என்ற எண்ணத்தை கொடுப்பதாய் இருக்கிறது. இர்பான் கான் கரப்டட் காப் என்கிறார்கள். ஏன் எதற்கு என அவ்வளவாய் தெளீவில்லை. அவருக்கும், சிங்கிள் மதரான ஐஸ்வர்யாவுக்கு என்ன விதமான உறவு என்பதை க்ளைமேக்சில் ஏதோ மொகப்பத் அது இது என கவிதையாய் சொல்ல முயற்சித்தாலும் ம்ஹும். ஃப்ரீ க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் கொஞ்சம் ஓகே. 
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதில் ஒருவன் தன்னை யாரோ தற்கொலைக்கு தூண்டுவதாய் சொல்கிறான். ஏன்? எதற்காக? எப்படி? என்பதுதான் இந்த குறும்படம். அம்மாணவர்களின் ஆழ் மனதில் நுழைந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டவர் ஏன் அவர்களை தூண்டினார் என்பதை சொல்லும் படம். கண்டெண்டாய் பழி வாங்கும் படக் கதையாய் இருந்தாலும், சொன்ன விஷயமும், ஆரம்பக்காட்சிகளும் சுவாரஸ்யம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Sean Connery was interviewed by Michael Parkinson, and bragged that despite his 72 years of age, he could still have sex three times a night. Kylie Minogue, who was also a guest, looked intrigued. After the show, Kyle said, “Sean, if I am not being too forward, I’d love to have sex with an older man. Let’s go back to my place.” So they go back to her place and have great sex. Afterwards, Sean says, “If you think that was good, let me sleep for half an hour, and we can have even better sex. But while I’m sleeping, hold my balls in your left hand and my dick in your right hand.” Kylie looks a bit perplexed, but says, “Okay”. He sleeps for half an hour, awakens, and they have even better sex. Then Sean says, “Kylie, that was wonderful. But if you let me sleep for an hour, we can have the best sex yet. But again, hold my balls in your left hand, and my Dick in your right hand.” Kylie is now used to the routine and complies. The results are mind blowing. Once it’s all over, and the cigarettes are lit, Kylie asks “Sean, tell me, does my holding your balls in my left hand and your dick in my right stimulate you while you’re sleeping?” Sean replies, “No, but the last time I slept with a slut from Melbourne, she stole my wallet.”
கேபிள் சங்கர்             


Post a Comment

1 comment:

saravanan selvam said...

உங்களுடைய அரசியல் விமர்சனத்துக்கு feedback: மாற்றம் ஒன்றே மாறாதது. இரண்டு கட்சிகள் மட்டும் ஆட்சி செய்வதருக்கு தமிழ்நாடு என்ன அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் தாரை வார்த்து குடுக்கபட்டுலதா?