ஏழு வருடங்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்குதான் படத்தின் கதை. ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தான் மகளின் தகாத உறவின் காரணமாகவும், ஜாதிப் பெருமைக்காகவும் கொன்றதாக முடிவு செய்யப்பட்டு, இன்று ஜெயிலில் இருக்கிறார்கள். அக்காலத்தில் மீடியா தன் வசம் எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட வழக்கை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். விஷால் பரத்வாஜும், மேக்னா குல்சாரும்.
கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் டாக்குமெண்டரியாய் போயிருக்கக் கூடிய படம். அற்புதமான பர்பாமென்ஸிலும், எழுத்தினாலும் கிரிப்பிங் படமாய் மாறிவிட்டது. சிபிஐ அதிகாரி அஸ்வின் குமாரின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொலை வழக்கு அவரிடம் வந்ததிலிருந்து சிபிஜயின் பார்வையில் அவர் பாணி விசாரிப்புகள். அதிலிருந்து கிடைக்கும் விஷயங்கள், விசாரணையின் பர்ஷப்ஷன்கள் காட்சிகளாய் நம் முன் விரிகிறது. அப்படியே நம்மை ஆட் கொள்கிறது.
சிபிஐ அதிகாரியாய் வரும் இர்பான் கான், முதற் கட்ட விசாரணை செய்யும் பான் பீடா இன்ஸ்பெக்டர், இர்பானின் பாஸ், அவரின் காலம் முடிந்து வரும் புதிய டைரக்டர், இர்பானின் உதவியாளர், ஸ்ருதியின் அப்பாவாக வரும் நடிகர், ஸ்ருதியின் அப்பாவிடம் கம்பவுண்டராய் வேலை செய்யும் வேலையாள் என தெரிந்தெடுத்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
இர்பானின் விசாரணைக் காட்சிகள், அதன் பின் வரும் விசாரணை அதிகாரியின் விசாரணை முறை. க்ளைமேக்ஸ் காட்சியில் இரண்டு க்ரூப் சிபிஐ அதிகாரிகளிடையே நடக்கும் தொழிற்போட்டி டிஸ்கஷன்கள். அதில் இருக்கும் சர்காசம். வாவ்.. ஆனால் படம் முழுக்க, ஆருஷியின் பெற்றோர்களுக்கு ஆதரவான வியூ மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவது லேசாக உறுத்துகிறது.
விஷால் பரத்வாஜின் எழுத்தும், எப்போதாவது ஒலிக்கும் பின்னணியிசையும், சிறு சிறு பாடல்களும் அட்டகாசம். படம் முழுக்க நிலவும் அமைதி விசாரணைக்கும் படம் பார்க்கும் நமக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. 130 நிமிஷ சொச்ச படத்தை பின் ட்ராப் சைலண்டில் படம் பார்க்க வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த படம் தல்வார். டோன்ட் மிஸ்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
No comments:
Post a Comment