பேய் மழை பெய்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் நான் கே.கே.நகரிலிருந்து விருகம்பாக்கம் வரை மட்டுமே அதுவும் காரில் சென்று கொண்டிருக்கிறேன். அதுவும் ட்ராபிக் இல்லாத மதிய நேரமாய் பார்த்து. டி.நகர் பக்கமெல்லாம் போக வர தைரியமில்லை. பாதி நேரம் இருக்கும் சப்வேயெல்லாம் தண்ணீர் ரொம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. நடுவில் மழையில்லாத ஒரு நள்ளிரவில் என் தாய் மாமா அகால மரணமடைந்தார். மாஸிவ் அட்டாக். பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர் சப்வே எல்லாம் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அவர் செய்த புண்ணியம். மழைக்காலத்திற்காக எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாத ஒர் அரசாங்கம். இருக்கும் வரை நமக்கென்ன என்று ப்ளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் சாக்கடைகளை அடைத்த பொது மக்கள் என மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீ செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால் நான் ஒருத்தன் செய்து சரியாகிவிடுமா? சமூகம் மாறணும் என்கிறார்கள். நாம் சமூகத்தின் ஒர் அங்கம் என்பதை மறந்துவிட்டு.
@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் மீண்டும் ரோட்டரி க்ளப் நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். வழக்கம் போல கேட்டால் கிடைக்கும் பற்றித்தான் பேசினேன். சினிமா, எழுத்து, சாப்பாடு என பேசுவதற்கு ஆயிரம் விஷயமிருந்தாலும், ரோட்டரி போன்ற சமூக அக்கறை சார்ந்த அமைப்புகளில் கேட்டால் கிடைக்கும் போன்ற தலைப்புகளில் பேசுவது தான் சரி என முடிவெடுத்து கிட்டத்தட்ட எட்டு கூட்டங்களில் பேசிவிட்டேன். நிறைய பேர் ஆரம்பத்தில் இம்மாதிரியெல்லாம் கேட்டால் கிடைக்காது என்ற அதே பொது புத்தி எண்ணம் இருந்தாலும் அக்கூட்டங்களில் ஒரிருவர் கேட்டு பெற்றவராய்த்தான் இருக்கிறார்கள். மெல்ல கூட்டம் முடியும் போது அவரவர்களின் வாழ்க்கையில் கேட்டுப் பெற்ற சில விஷயங்களை பற்றி பகிர ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு கிடைத்த வெற்றி. மெல்ல நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களுக்குள்ளாகவே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நான் ஒருவன் கேட்கிறேன் எனக்கு கிடைத்தது உங்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் கிடைக்குமென்ற நம்பிக்கை ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போது அவர்களிடையே தெரியும் உத்வேகம் பாசிட்டிவாய் பளிச்சிடுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@
தூங்காவனம்
ஸ்லீப்லெஸ் நைட்டின் அஃபீஷியல் ரீமேக். கமல், திரிஷா, ப்ரகாஷ்ராஜ், கிஷோர், என பர்பெக்ட் காஸ்டிங். குவாலிட்டியான மேக்கிங். சிறந்த நடிப்பு என ஒரிஜினல் கொடுத்த அதே பதைபதைப்பு, விறுவிறுப்பு அதே லேக்னெஸ் என இருந்தது. ஒரிஜினலில் இல்லாத ப்ரகாஷ்ராஜ் அஸிஸ்டெண்ட் ப்ளாக் காமெடி, சாம்ஸின் அவுட் ஆப் த ரேஞ்ச் சிலேடைகள், சமயங்களில் காட்சி முடிந்தும் கூட யோசித்து சிரிக்க வைப்பவை அவை. தமிழில் நல்ல ஸ்லீக் த்ரில்லர். இரண்டாம் பாதியில் இவர்கள் எக்ஸ்டெண்ட் செய்த பத்து நிமிஷங்கள் தவிர எல்லாம் சுபமே.
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்துயூ ட்யூப் ஹிட் எப்படி லட்சக்கணக்கில் கொண்டு வரப்படுகிறது என்று தெரியுமா?
ட்விட்டர் பேஸ்புக்கில் வெளியாகும் வசூல் கணக்கை எவ்வளவு தூரம் உண்மையென்று நம்புகிறீர்கள்?
எல்லா டிவியும் ப்ரான்ஸ் 24 ஃபீடையே உபயோகிக்க, ரஷ்யா டுடே மட்டும் வேறொரு கோணத்தில்
அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுங்கள் கேள்வி கேளுங்கள் எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்#கேட்டால்கிடைக்கும்
சச்சினின் முழுப் பெயரை கேட்டதில் என்ன தவறு? #டவுட்டு
எனக்கு மட்டும் ஏன் போல் ஆப்ஷன் வர மாட்டேன்குது.. இது போங்காட்டம் #டிவிட்டர்
அடை மழை, சூடான நெய் பொங்கல், சின்ன வெங்காயக் வத்தக் குழம்பு, கூடவே
சபலமும், இதெல்லாம் இன்றைய காலை பேலியோவை காவு வாங்கி விட்டது.
வச்சி செஞ்சி பார்த்துருக்கேன். செஞ்சி வச்சி செஞ்சி வச்சி இப்பத்தான் பாக்குறேன்.
Racy. Engaging fantastic #thoongavanam
@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எண்டர் கவிதைகள்
எண்டர் கவிதைகள்
கிளர்ந்தெழுந்து
அடங்கிவிட்ட காமம்
கொடுக்கும் அவ்வளவுதானா?
என்கிற உணர்வு
ருசிக்குமிருக்கிறது.
- கேபிள் சங்கர்
அடங்கிவிட்ட காமம்
கொடுக்கும் அவ்வளவுதானா?
என்கிற உணர்வு
ருசிக்குமிருக்கிறது.
- கேபிள் சங்கர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....
கணவன்:- என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...
மனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..
கணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..
மனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..
கணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...
மனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...
கணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...
மனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..
கணவன்:- என்னடி சொல்லுற..
மனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்...நீள வேண்டியது நீளலியே...
கணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..
மனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...
Post a Comment
2 comments:
Sir
Super climax. New technical effectd
அடல்ட் கார்னர்
கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....
அண்ணே ஜிவி பிரகாசுக்கு கதை சொல்ல தயார் ஆகிட்டிங்க போல . . . .
Post a Comment