வெள்ளம் வந்து போய் வாரம் தாண்டியாகிவிட்டது.ஆங்காங்கே நிவாரணப் பணி என்று பேனருடன் முக்கியமாய் அம்மாவின் ஆணைப்படி, அவரது முகம் போட்ட பேனருடன் வளைய வருகிறார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாய் வாங்கி வைத்துக் கொள்ளும் மனோபாவம் அதிகமாகிவிட்டது. பல இடங்களில் தகராறு ஏற்பட்டு, விட்டால் போதுமென்ற எஸ்ஸாகிய குழுக்கள் அதிகம். இதனால் நிஜமாய் தேவையானவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகிற வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. சென்னை முழுவதும் எங்கும் மீண்டும் புதிய ரோடுக்களை போடுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. சென்னை ஆற்காடு சாலை முழுவதும் பகல் நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் பனிக்கிடையே பயணிக்கும் எஃபெக்ட்டில் புகை மூட்டத்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீருக்குள் பள்ளமிருந்து விழுந்தவர்கள், இப்போது தூசு மூட்டத்தில் விழுகிறார்கள் அவ்வளவே. அப்படியே வாட்ஸப்பில் நான் ஆணையிடுகிறேன் ரோடெல்லாம் சரியா போடுங்கன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.
@@@@@@@@@@@@@@@@
நேற்றிரவு நண்பர் ஒருவரின் ரெஸ்டாரண்டிற்கு போயிருந்தேன். கடை மூடும் சமயம். உள்ளிருந்து நல்ல குரல் வளத்தோடு ஒரு பாடல் வந்தது. எங்கோ கேட்ட மாதிரியிருக்கிறதே என யோசித்துக் கொண்டிருந்த போது, சட்டென பிடிப்பட்டது அது நம்ம உலகப் புகழ் “பீப்” சாங்.. இதிலென்ன செய்தி என்று கேட்டீர்களானால் அந்த பையன் அப்பாடலை முழுக்க, முழுக்க தெளிவாய் வரிகளை உணர்ந்து பாடிக் கொண்டிருந்தான். ஓப்பனிங் வரிகளைத் தவிர.
#######################
என் ட்வீட்டிலிருந்து
ஒவ்வொரு முறையும் நட்புதான் என்னை தலை எடுக்க வைக்கிறது.
வெள்ளத்தினால அடைஞ்ச மன உளைச்சலை விட, இந்த கார்பரேட் சர்வீஸ்காரனுங்களோட அடையுற மன உளைச்சல் அதிகமாயிருக்கு. டெய்லி ரெண்டு மணி நேரம் போன்லயே
திரும்பவும் என்னமா நடிக்கிறாய்ங்கய்யா மெளமெண்ட் Ranveer @deepikapadukone @priyankachopra #BajiraoMastani
இன்சூரன்ஸ் கம்பெனி அடிக்கிற கொள்ளை அநியாயம்.. சொல்லாம கொல்லாம.. அடிக்கிறானுங்க.. நான் இன்னைக்கு ஆரம்பிச்சிருக்கேன். @italkinsurance
without intimating. how come they auto debt the raised payment.. ? Royal Sundaram
அதிகாலை மார்கழி பனிப்போல, சென்னையெங்கும் புழுதிப்பனி பட்டப்பகலில்.
மழை நின்னு வாரமாச்சு.. இன்னமும், நிறைய இடங்களில் தண்ணீர் வடியவில்லை. ரோட்டின் குழிகளை மூட ஆரம்பிக்கவும் இல்லை. வாழ்க..
பேப்பரோட.. காலண்டர் விக்க ஆரம்பிச்சிருவானுங்க... இப்பவே உங்க ஆளூங்க கிட்ட சொல்லி வச்சிருங்க.. காலண்டர் வேண்டாம்னு
Finally got bk my net and phone connection. but with 2mbps. instead of 8 mbps.
இந்த வளரும், செட்டிலான ஆல் அரசியல்வாதிகள் அனைவரும் ஏன் எலக்ஷனுக்கு செலவு இப்பவே பண்ணக்கூடாது ?
Still all petty shops charging premiem rates for all.. Nalla irungada
@@@@@@@@@@@@@@@@@@@
144
சமயங்களில் படிக்கும் போது சுவாரஸ்யமாய் இருக்கும் ஸ்கிரிப்ட்கள் படமாக்கும் போது சுவாரஸ்யமில்லாமல் போவது அதிகம். அப்படியான ஒரு ஸ்கிரிப்ட் தான் இந்த 144.பட்ஜெட், காஸ்டிங், என ஆரம்பித்து, ஆங்காங்கே வரும் சிவாவின் டயலாக்கைத் தவிர, மற்ற எல்லாமே வேலைக்காகவில்லை.
@@@@@@@@@@@@@
உறுமீன்
பழிவாங்குதல் உன்னதம் என்று சொல்ல வருகிற படம். ஆரம்பக் காட்சிகளின் மெனெக்கெடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சுவாரஸ்யமிழந்து போனது வருத்தம். சிம்மா ரஜினியை இமிட்டேட் பண்ணாமல் பண்ணியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். கலையரசனின் நடிப்பை பார்க்கும் போது இவர்தான் மெட்ராஸில் நடித்தவரா என்ற கேள்வி எழாமல் இல்லை.ஆங்காங்கே டெக்னிக்கல் சமாச்சாரங்கள் அட போட வைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@
உப்புகருவாடு
ராதா மோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். இப்படத்திற்கு முந்தைய படத்தில் சறுக்கியவர் மீண்டும் எழ கிடைத்த பட்ஜெட்டில் கதையில் வரும் ஹீரோவின் நிலை போலவே இதிலும் மாட்டியிருக்கிறார்ப் போல.. கிட்டத்தட்ட.. அதோ சாரே வராரே என்கிற ரீதியில் சமீப காலத்தில் ஒரு சிறந்த ரேடியோ நாடகத்தை படமாய் பார்த்த மாதிரி இருந்தது. பட். . நல்ல கான்செப்ட்.. நடிகர்கல் எல்லோருமே கொஞ்சம் அளவாய் நடித்திருந்தது திருப்தி. டெக்னிக்கலாய் அதிகம் யோசிக்காதவர்களுக்கு டீசெண்ட் படமாய் தோன்றும்.
@@@@@@@@@@@@@@@@
தங்கமகன்
தனுஷ் நல்ல நடிகர். அவர் நன்றாக நடிப்பார் என்பது மீண்டும் நிருபித்திருக்கிறார். மற்றபடி முதல் பாதி ஓரளவுக்கு சுவாரஸ்யம். ரெண்டாம் பாதிதான் குடும்பக் கதையா போவதா? இல்ல பழிவாங்கும் பஞ்ச் டயலாக் கதையாய் போவதாய் எனக் தானும் குழம்பி, நம்மளையும் குழப்பி, ரெண்டுங்கெட்டானாய் வந்திருக்கிறது. மொத்தத்தில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிவி சீரியல் போலிருந்தது. சில காட்சிகளில் அதீத நாடகத்தனம் மொத்த தியேட்டரையும் நகைச்சுவை பஞ்சமில்லாமல் வைக்க உதவியது.
@@@@@@@@@@@@@@@@@@
Bajirao Mastani
சஞ்சய் லீலா பன்சாலிக்கு கேக் வாக் கதை. க்ராண்டியரான பின்னணியில் உருக வைக்கும் காதல் கதை. இம்முறை பாஜிராவ் எனும் ப்ராமண மராட்டிய வீரனினுக்கும், மஸ்தானி என்கிற முஸ்லிம் பெண்ணுக்குமிடையே ஆன காதல். இக்காதலால் அவனது முதல் மனைவிக்கும் அவனுக்குமிடையே உருவாகும் பிரச்சனை, அரசியல், அதையெல்லாம் மீறிய காதல் என மிக எமோஷனலாய் போகிறது கதை. விஷுவலாய் பின்னியெடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் படத்தில் நடித்த அத்துனை நடிகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பிரியங்காவும், தீபிகாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அற்புதமான விஷுவல்கள், சிறந்த இசை, போட்டிப் போடும் நடிப்பு, என கொஞ்சம் க்ளாஸிக்கல் க்ளிஷேக்கள் இருந்தாலும், எமோஷனலி நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்.
பே ஏரியாவில் குறும்படப் போட்டி நடத்துகிறார்கள் என நண்பர், நடிகர் ரஞ்சன் சொல்லியிந்தார். ஒரிரு படங்களில் அவர் நடித்தும் இருந்தார். அப்போது அக்குறும்படங்களை பார்க்க நேர்ந்தது. நண்பர் இளாவும் ஒரு குறும்படம் இயக்கியிருக்க, அடுத்த குறும்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை அனுப்பி கருத்து கேட்டிருந்தார். அவ்வரிசையில் நான் சமீபத்தில் பார்த்த இக்குறும்படம் நன்றாக இருந்தது. பின்னணியிசை, கதை சொன்ன விதம் எல்லாமே சுவாரஸ்யம் க்ளைமேக்ஸில் சின்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். நைஸ். கிடைத்த வசதிகளை வைத்து எழுதி, இயக்கி, எடிட்டிட்டிருக்கும் விவேக் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்.
குறும்படம்.
பே ஏரியாவில் குறும்படப் போட்டி நடத்துகிறார்கள் என நண்பர், நடிகர் ரஞ்சன் சொல்லியிந்தார். ஒரிரு படங்களில் அவர் நடித்தும் இருந்தார். அப்போது அக்குறும்படங்களை பார்க்க நேர்ந்தது. நண்பர் இளாவும் ஒரு குறும்படம் இயக்கியிருக்க, அடுத்த குறும்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை அனுப்பி கருத்து கேட்டிருந்தார். அவ்வரிசையில் நான் சமீபத்தில் பார்த்த இக்குறும்படம் நன்றாக இருந்தது. பின்னணியிசை, கதை சொன்ன விதம் எல்லாமே சுவாரஸ்யம் க்ளைமேக்ஸில் சின்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். நைஸ். கிடைத்த வசதிகளை வைத்து எழுதி, இயக்கி, எடிட்டிட்டிருக்கும் விவேக் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Boy:what is that u keep in ur mouth which is 6" long and move it in and out and wait for a white substance to come out?
Girl: y do u ask such question to me. i cant tell such words
Boy:dont worry its tooth brush
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
கொத்துப் பரோட்டா அருமை.
Post a Comment