Posts

Showing posts from 2016

கொத்து பரோட்டா 2.0-10

கொத்து பரோட்டா 2.0-10 நாடே ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அமெரிக்காவுக்கு ஒர் 9/11 போல, நம்மூருக்கு ஒரு 9/11. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால். கருப்புப் பணத்தை, ஐ.எஸ்.ஐயினால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க ஊடுருவப்பட்டிருக்கும் கள்ளப் பணத்தை , வரிக்குள்ளேயே வராத பாரலல் மணியை கணக்குக்குள் கொண்டு வர, விலை வாசி குறைய, ரியல் எஸ்டேட் மார்கெட் சீர் பட, நாட்டின் பொருளாதாரம் மேம்பட, என ஆயிரம் ப்ளஸ்கள் இந்த அறிவிப்பால் நடக்கும் என்கிற பாஸிட்டிவ் உணர்வு முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கத்தான் செய்தது. அம்பானிக்களுக்கும் அதானிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாத மோடி அரசு என ஒரு பக்கம் இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் கோஷமிட்டுக் கொண்டிருக்க,  இன்னொரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரெண்டொரு நாள் கஷ்டப்பட தயாராக இருக்க மாட்டோமா? என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கு...

நீர் - நாவல் விமர்சனம்

நீர் – நாவல் விநாயக முருகன் சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்க...

ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.  திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த  அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்...

கொத்து பரோட்டா 2.0-9

கொத்து பரோட்டா – 2.0-9 யூட்யூப் வீடியோ– ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன் யூ ட்யூபில் குறும்படங்கள் என்ற தலைப்பில்லாமல் நிறைய வீடியோக்கள் பிரபல்யம். வலைப்பூ உலகில் எப்படி வித்யாசமான பெயர்களோடு வளைய வருவார்களோ  அது போல, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், டெம்பிள் மங்கீஸ், புட் சட்னி என்றெல்லாம் எகனமொகனையாய் பெயர் வைத்துக் கொண்டு  கவனத்தை ஈர்க்கக் கூடிய சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் பல விதமான திறமையாளர்கள். விதவிதமான பகடிகள் என பரந்து பட்ட ஆர்வலர்களை அடையாளம் காட்டும் ஒரு தளமாகிக் கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் நாளுக்கு முன் பார்த்த இந்த ”ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்” குறும்படம் அல்லது வீடியோ படு சுவாரஸ்யம். ரேடியோ ஜாக்கி, நடிகர் என பல முகங்கள் கொண்ட பாலாஜி வேணுகோபாலின் எழுத்தாளர், இயக்குனர் அவதாரம். இந்த வீடியோவின் மிகப்பெரிய பலம் வசனங்கள்.  அதை விட பெரிய ப்ளஸ் அதை கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸில் சொன்ன மாடுலேஷன். அதற்கு இணையான விஷுவல்கள். நடிகர்களின் இயல்பான நடிப்பு. என பத்து நிமிட வீடியோவில் குறைந்தது பத்து அட்டகாச சிரிப்பு. ஏழெட்டு புன்மு...