Posts

Showing posts from January, 2016

Soggade Chinni Nayana

மனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்‌ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணமான ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண? என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென...

கொத்து பரோட்டா - 25/01/16

Image
கேட்டால் கிடைக்கும் வெள்ளத்தில் என் வீட்டு டெலிபோன் மற்றும் இண்டர்நெட் இரண்டாம் தேதி டிசம்பர் அன்று கட் ஆனது. அதன் பிறகு என் வீட்டு லைன் 18 ஆம் தேதிதான் திரும்பவும் வந்தது. ஆனால் அதற்கு பில் தொகையாய் ஒரு முழு மாத தொகையை கட்டச் சொல்லி, அனுப்பியிருந்தார்கள். போன் செய்து கேட்ட போது டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் முன்னூறு ரூபாய் என்றார்கள். அது என்ன கணக்கு? எப்படி முன்னூறு ரூபாய் வரும். என்னுடய கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் எனக்கு எந்த விதமான டெலி கம்யூனிகேஷன் தொடர்பு உங்களது நெட்வொர்க்கில் இல்லையே என்று தொடர்ந்து கேட்டதில் மாதம் 1500 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் எனக்கு உடனடியாய் பில் தொகை வெறும் 535 கட்டச் சொல்லி வந்தது. அதே போனில் என் மொபைல் எட்டு நாட்கள் வேலை செய்யாததற்கு 180 ரூபாய் டிஸ்கவுண்டும் பெற்றேன். ஏதோ என்னைப் போன்ற வேலையில்லாதவர்கள் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் கேட்கிறோம் கிடைக்கிறது. இவனுங்க கிட்ட என்ன கேட்டு என்னத்த? என்று என்னத்த கன்னைய்யா போல இருக்கிற எத்துனை பேர் முழு பில்லையும் கட்டியிருப்பார்கள். இந்த ஏரியாக்களில் தங்களது லைன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தே...

நிவாரணத்துக்குரியவன்

நிவாரணத்துக்குரியவன் வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒரு முறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய் ஆரம்பித்து, சடசடவென வீடு முழுதும் ஈர வாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேனாம். ஜுரம் வந்து ”தண்ணி வருது.. தண்ணி வருது”என புலம்பியிருக்கிறேன்.  பின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம்  கவனித்தபடி “சரி வா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப் பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி,  விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது.

கொத்து பரோட்டா - 18/01/16

ஜல்லிக்கட்டு பற்றி ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தூரம் கி.மீட்டர் அளவு என்பதால் அது குறித்து நான் கருத்து சொல்ல விழையவில்லை. ஆனால் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது பெரும்பாலான இணையர்கள் உடனடியாய் பார்ப்பன எதிர்ப்பு, ஆதிக்கம் என்று எத்தையாவது உளறிக் கொண்டிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. பெரும்பான்மை நினைத்தால் எதை வேண்டுமானால் சாதிக்கலாம், போராடலாம் என்கிற நிலையில் இம்மாதிரியான குற்றம் சாட்டும் முறை போராட்டத்தினை வலுவிழக்க செய்யும் என்பது என் எண்ணம்.

கொத்து பரோட்டா - 11/01/16

13வது சென்னை உலகப் பட விழாவிற்கு கெஸ்ட் பாஸ் இருந்தது. ஆரம்பித்த நாளில் போகலாமென்று இருந்த போது படு பயங்கர வேலை. ரெண்டு நாள் போக முடியாமல் சனியன்று ரெட்கார்பெட் ஷோவிற்கு இரானிய படமான “டாக்சி”க்கு சென்றேன். அருமையான படம். நிறைய அரங்குகளில் படம் போடும் போது அங்கே இங்கே சென்று அலைய, கார் சரியான வாகனம் கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் பார்க்கிங், பின்பு திரும்ப எடுப்பது என்பதெல்லாம் அம்பூட்டு ஈஸியான விஷயமில்லை. அதற்கு மால் போன்ற பார்க்கிங் சிறந்தது. ஆனால் மால்களில் ஒரு நாள் முழுவதும் பார்க்கிங் கொடுத்தால் சொத்து அழிந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிகம். அதனால் மிகவும் செலக்டிவாக பார்க்க எண்ணம். நேற்று கார்த்திக் சுப்பாராஜின் “அவியல்”. @@@@@@@@@@@@@@@ Hot Girls Wanted நெ ட்ப்ளிக்ஸ் லிஸ்டில் கண்ணில் பட்ட டாக்குமெண்டரி படத்தின் பெயர். எப்படி இணையத்தில் இம்மாதிரியான பெயர்களைப் பார்த்ததும் சட்டென க்ளிக் செய்வோமோ அதைப் பற்றித்தான் இப்படமே. போர்ன் இண்டஸ்ட்ரி என அழைக்கப்படும் ப்ளூ பிலிம்களில் முன்னரெல்லாம் அதற்கான நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 18 வயதான அமெச்சூர்கள் நிறைய பேர் “கேர்ள் நெக்ஸ...

கொத்து பரோட்டா -04/01/16

Image
2015 எனக்கு பல விதமான அனுபவங்களையும், பாடத்தையும் புகட்டிய வருடம். 2013ல் ஷூட்டிங் ப்ளான் செய்யப்பட்டு, 2014 மார்ச்சில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட எனது முதல் படமான தொட்டால் தொடரும், 2015ல் பல தடைகளை கடந்து வெளியானது. வழக்கம் போல தியேட்டர்கள் கிடைக்காமை பெரும் சவாலாகி, முதல் நாள் 145 தியேட்டர்களுக்கு தயாராகி, அடுத்த நாள் அப்படியே பாதி திரையரங்குகளில் வெளியானது. ஓரளவுக்கு நல்ல ரெவ்யூ வந்ததும், தியேட்டர்கள் இல்லாமை பெரும் மைனஸாய் போனது. பின்பு நான்கைந்து மாதங்களுக்கு பின் வெளிநாட்டு ஆன்லைன் உரிமை விற்ற பிறகு உலகமெங்கும் ஆன்லைனில், டோரண்டில், யூ ட்யூபில் பார்த்து கிடைத்த நல் விமர்சனங்கள் கொடுத்தது எல்லாம் எனக்கு அனுபவம். இப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் ரைட். குமுதத்தில் நான் கு பக்க கட்டுரை, சாப்பாட்டுக்கடை வீடியோ வடிவம், என சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இலலி. அடுத்த கட்டமாய்,  சிவிகுமாருடன் அவரது இயக்கத்தில் ஆரம்பிக்க இருக்கும் திரைப்படத்துக்கு திரைக்கதை வசனமெழுதும் பொறுப்பு. ஒரு  சிறு முதலீட்டு இன்னோவேட்டிவ் முயற்ச...