ஜல்லிக்கட்டு பற்றி ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தூரம் கி.மீட்டர் அளவு என்பதால் அது குறித்து நான் கருத்து சொல்ல விழையவில்லை. ஆனால் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது பெரும்பாலான இணையர்கள் உடனடியாய் பார்ப்பன எதிர்ப்பு, ஆதிக்கம் என்று எத்தையாவது உளறிக் கொண்டிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. பெரும்பான்மை நினைத்தால் எதை வேண்டுமானால் சாதிக்கலாம், போராடலாம் என்கிற நிலையில் இம்மாதிரியான குற்றம் சாட்டும் முறை போராட்டத்தினை வலுவிழக்க செய்யும் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பொங்கல் சிறப்பாக கழிந்தது. பொங்கலுக்கு நான்கு தமிழ் படங்கள் வெளியானது குறித்து நிறைய கருத்துக்கள் வெளிவருகிறது. இங்கே கவலைக்குரிய காரணம் தியேட்டர்கள் இல்லாமை. ஆயிரத்து சொச்ச தியேட்டர்களை வைத்துக் கொண்டு, சும்மாவாச்சும் முதல் நாள் எட்டு கோடி, பத்து கோடியென்றெல்லாம் உட்டாலக்கடி விட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அதிக திரையரங்குகள் இருக்கும் ஆந்திராவில் கூட இம்முறை நான்கு படங்கள் சங்கராந்திக்கு வெளியாகியிருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆரின் நானக்கு ப்ரேமத்தோ, நாகார்ஜுனின் சொகாடி சின்னி நையினா, பெரும் தலை பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர், ஷர்வானந்தின் எக்ஸ்பிரஸ் ராஜா என்று வெளியாகியிருக்கிறது. ஒரு விதத்தில் தியேட்டர் இல்லாமை வசூலை குறைத்தாலும், இம்மாதிரியான விடுமுறை தினங்களில் நான்கைந்து படங்க்ள் வெளிவருவது நல்ல விஷயமே.. தனியே வெளி வந்து வேறு படமே இல்லாமல், இருக்குற ஜனங்கள் எல்லோரும் இதே படத்தை வேறு வழியில்லாமல் பார்த்துவிட்டு, வசூலையையும் கொடுத்து விடுவதினால், தொப்புளுக்கு மேல கஞ்சி எனும் நிலை வந்துவிடுகிறது. இனி அது போல நடக்காது. என்ன இந்த கும்பலில் சில சமயம் சின்ன பட்ஜெட் நல்ல படங்கள ஆட்டம் கண்டு போய் விடுவது தான் சோகம்.

@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உச்ச பட்ச ஈகோ பேட்டியெங்கும்
ஐநாக்ஸில் 10 மணி காட்சியென்றால் சர்வ நிச்சயமாய் 10.20க்கு மேல் தான். நம்பி லேட்டா வாங்க சந்தோஷமா போங்க மனப்பான்மையோ என்னவோ.. அதே சத்யமில் என்றால் 10.05க்குள். தட்டிஸ் சத்யம்
ஸ்ப்பா... இன்னும் எத்தன நாளக்கு ஒரே தோசைய திருப்பி திருப்பி கருக வைப்பாங்க ம்.. ஸ்டார்ட் மீ சிக்:)
A clean festival entertainer #rajinimurugan
Another techie version of thani oruvan with personal vengeance#NanakuPrematho
Martian comedy padama #doubt
என்னாம்மா நடிக்குதுப்பா இந்த பொண்ணு.. பார்வதி.. ரெண்டாவது வாட்டி #Charlie
@@@@@@@@@@@@@@@@@
Nanaku Prematho
புதிய மோஸ்தர் டெக்கி தனியொருவன். தனியொருவனில் இல்லாத ஒரு விஷயம் பர்சனல் பழிவாங்கல். இதில் அப்பாவின் சொத்தை, அடையாளத்தை அழித்த வில்லன் ஜெகபதி பாபுவின் சொத்தை ஒண்ணுமில்லாமல் ஆக்குவதாய் அறுபது நாளுக்குள் இறக்கப் போகும் அப்பாவிடம் சபதம் செய்கிறார் ஜூனியர். செய்தாரா இல்லையா என்பதை நம்பக்கூடிய அளவிற்கு ஹீரோசியத்தோடு, ஆன் ஸ்கீரினில் சிஜி, கால்குலேஷன், எல்லாம் போட்டு, செம்மையாய் கணக்கு போட்டு ஹீரோயினை லவ் பண்ணும் காட்சிகள் எல்லாம் பட்டாசாய் இருக்க, இரண்டாம் பாதி கொஞ்சம் சொதப்பல் தான். பட் சுகுமாரின் ஸ்டைலிஷான ப்செண்டேஷன், ஜூனியர் என்.டி.ஆரின் எலக்ட்ரிக்கல் ரிப்ளெக்ஸ், என பரபரவென போய், செண்டியாய் முடிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@\
ரஜினி முருகன்
படத்தின் ப்ரோமோவிலிருந்தே சொல்லி வருகிறார்கள். ”நம்பி வாங்க சந்தோஷமா போங்க”ன்னு.. அதை செயல் படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் கூட வித்யாசமான சீன்கள் இல்லை, தூறல் நின்னு போச்சுவின் இன்னொரு வர்ஷன் காட்சிகள், கொஞ்சமே கொஞ்சம் கூட மெனக்கெட்டு ஒரு காட்சியை அமைக்கவில்லை. ரஜினி ஸ்டைல் மாமனார், அவருக்கான சீன்கள், ஏழரை மூக்கனுக்காக செய்யப்படும் பில்டப்புகள், அந்த இரண்டு பஞ்சாயத்து காட்சிகள். ராஜ்கிரனின் செட்டப் கதை, பேத்தி வயதுக்கு வருவது என நிறைய எக்ஸ்டெண்டட் காட்சிகள் படத்தின் நீளத்தை கூட்டு மைனஸுகள் எல்லாம் இருந்தாலும், சிவகார்த்திகேயனின் ஸ்கீரின் ப்ரெசென்ஸ், ஆங்காங்கே அடிக்கும் கூத்துக்கள், லாஜிக் இல்லாத மேஜிக்கை நம்ப வைக்கும் காட்சிகள் என குறையாய் நிறைய சொல்ல இருந்தாலும், திகட்ட திகட்ட சிரிக்க வைத்து அனுப்புவதில் குறியாய் இருந்ததன் பொருட்டில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வெளியே வரும் போது பரவாயில்லைய்யா.. ஜாலியாத்தான் போவுது என்று சிரித்துக் கொண்டே வருகிறோம். பக்கா ஹாலிடே எண்டர்டெயினர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கெத்து
உதயநிதியின் ஆக்ஷன் அவதாரதப் படம். விஷுவலாய் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். படம் நெடுக டி.ஐக்கும், கலர் டோனுக்கும் (ப்ளூ)பனி விழும் பின்னணியும், ஐரோப்பிய படம் பார்க்கும் விஷுவலைக் கொடுத்துவிட வேண்டுமென்ற மெனக்கெடல் முழுக்க தெரிகிறது. அதே மெனக்கெடல் கதையிலும் திரைக்கதையிலும் இருந்திருந்தால் நிச்சயம் சுவாரஸ்யமான படமாய் அமைந்திருக்கும். உதய்க்கு டான்ஸ் நன்றாக வந்தது போல ஆக்ஷனும் இன்னும் நான்கைந்து படங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விக்ராந்த் நிஞ்சா அட்டோரி போன்ற ஒரு கெட்டப்பில் இலக்கில்லாத பார்வை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருப்பது, அபத்தத்தின் உச்சம். சரி விடுங்க..
@@@@@@@@@@@@@@@@@@
தாரை தப்பட்டை
சீரியஸான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஒரு கேரக்டர், இன்னொரு பக்கம் துறு துறு, பரபர துள்ளலோடு, கிண்டலும் கேலியுமாய் ஒரு கேரக்டர். இவர்களிடையே ஒரு கெமிஸ்ட்ரி. அது புரிபடும் போது துள்ளல் பார்ட்டியை போட்டு விடுவார்கள். அது வரை உணர்ச்சியை வெளிப்படுத்தாத கேரக்டர் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு, போட்டவனின் குடலையோ, அல்லது கழுத்தையோ கடித்து துப்பி கோர மரணம் கொடுத்து நடந்து போவான். இது வரை பாலா எடுத்த எல்லா படங்களின் கதையும் அதுதான். அதில் போகிற போக்கில் கீழ் நிலையில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என்று சில உட்டாலக்கடிகளை அடித்துவிட்டு, போவார். கரகாட்ட கும்பலில் ஏன் ஒருவன் தலை நிறைய முடியுடன் சுற்றுகிறான்?. கரகாட்ட கோஷ்டியை அந்தமானுக்கு அழைத்துப் போகும் போதே மேட்டருக்கு கேட்க போகிறார்கள் அதற்கு பெரிய ப்ரச்சனை வரப் போகிறது என்று தெரிந்த என்பதுகளின் டெம்ப்ளேட்டை ஏன் காட்சியாய் வைரகாட்டம் ஆடி ஊரு திரும்ப வரை சம்பாதிக்கும் திறமையுள்ளவர்கள் ஏன் கொளுத்து வேலைக்கு செல்ல வேண்டும்?, அந்த அபத்த காட்சிகள் எதற்கு?. ஒருவன் விபுதி பட்டை வைத்து வகிடெடுத்து வாரி வந்தால், பின் பாதியில் எப்படி இருப்பான் என்பதை இன்றைய கார்ட்டூன் பார்க்கும் பசங்களே சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிர்ச்சியாக காட்ட வேண்டுமென்ற முனைப்பில் காட்டப்பட்டதேயன்றி, வேறேதும் இல்லை. அம்மாவுக்கே தெரியாத சூறாவளியின் வீட்டை சன்னாசி மட்டும் கண்டுபிடித்தது பட்டர்ப்ளை எபெக்ட்டாய் இருக்குமோ?. இளையராஜாவின் ஆயிரமாவது படம் டைட்டிலில் மட்டுமே. டிஸ்கவரி சேனல் எதற்கு?. சீமைச் சரக்கு கொடுக்கிறியா என்று கேட்டு விட்டு டிஸ்கவரிக்காக வாசிக்கும் ஜி.எம்.குமாருக்கும், சாவுக்கு ஆடுவதற்கும் வித்யாசம் என்ன?. வறுமையில் வாடும் போது கூட வரலட்சுமியும், ஜி.எம்.குமாரும், ரெமி மார்டின் சரக்கடிப்பது எப்படி? அண்ணன் தங்கச்சியிடையே வரும் இரட்டை அர்த்த பேச்சு, ஜி.எம்.குமாரின் ஆரம்ப காட்சி கேரக்டர் குணாதிசயங்கள், “அக்காங் மாமா”வை ஒவ்வொரு வரி டயலாக்குக்கும் இடையே பல் வேறு உணர்ச்சிகளோடு பேசி நடித்து அட இந்ஹ்ட பொண்ணுக்குள்ள இம்பூட்டு இருந்துருக்கு பாரேன் என்று ஆச்சர்யப்படுத்திய வரலட்சுமியைத் தவிர, தாரை தப்பட்டை தலைவலி.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Whats 72?
69 with three people watching.

Post a Comment
2 comments:
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா , மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்கள்
போஸ்டரில் A என நாகரீகமாக படத்தின் தன்மையை வெளிபடுத்த . . .
தாரை தப்பட்டை குழுவினர் . . . . . ?
tharai thappattai -oru nalla padam... ethna vishyam iruku... karakattam endra vishya abasamaga mariyadhu yaral??? rasigan enbavanu karakattathia cinema vo du oppitu karakatathai marandhadhu naal....karkattam abasam noki sendradhu ... idha rombha azhaga solirukaru...
Post a Comment