மனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணமான ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண? என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென்ற வரத்தையும் தருகிறார். வந்த போதுதான் தெரிகிறது தன்னுடய மரணம் இயல்பானது இல்லை என. பின் பங்கார ராஜு எப்படி தன் மகனின் இல்லற வாழ்வையும், தன்னை கொலை செய்தவர்களையும் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.
படம் முழுக்க, நாகார்ஜுன். அவரின் இரண்டு பையன்களுக்கும் சரியான போட்டி, அவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.உடன் ரம்யா கிருஷ்ணன் வேறு வெட்கப்பட்டே கொல்கிறார். பையன் நாகார்ஜுனுக்கு பொண்டாட்டியாய் வரும் லாவண்யாவின் க்யூட். அதிலும் பின் பக்க ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள் அட்டகாசம்.
ரொம்பவும் ப்ரெடிக்டபிளான கதை, திரைக்கதையை, நாகார்ஜுனும் ப்ரொடக்ஷன் வேல்யூவும் தான் காப்பாற்றுகிறது. பி.எஸ்.விநோத், சித்தார்த்தின் ஒளிப்பதிவு சிறப்பு. அனூப் ரூபனின் இசை ஓகே. முழுக்க முழுக்க நாகார்ஜுனை மட்டுமே ந்ம்பி எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா. கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
மாஸ் வாசனை வருகிறதே!?
Post a Comment