கொத்து பரோட்டா - 29/02/16
அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நான் விமர்சனம் செய்தால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளை விட, பா.ம.க, சீமான் போன்றோரின் கட்சியில் உள்ளவர்கள் மிக மரியாதையாய் திட்டுவார்கள். நேற்று கூட பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எங்களோட யார் வேணா கூட்டணிக்கு வரலாம்னு சொன்னதை நான் காமெடின்னு சொல்லியிருந்தேன். அதுக்கு அவங்க கட்சிக் காரர் ஒருத்தர் பேஸ்புக்குல டேய்.. உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேண்டா என்று மரியாதையாய் எச்சரித்திருந்தார். வண்டலூர் மாநாடு அன்புமணிதான் தமிழகத்தின் எதிர்காலம் என்றிருக்கிறார். அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவை கலாய்த்து வேறொரு வீடியோ ஓடுகிறது. அதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலை. அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவில் இன்னொரு விஷயத்தை சொல்லி அவர்களின் தொண்டர்களை பழக்கப்படுத்தலாம். அதாவது நானும் எனது கட்சி ஆதரவாளர்களும் சகிப்புத்தன்மையை பழக்கப்படுத்திக் கொள்வோம்ங்கிறதத்தான் சொன்னேன்.