தேர்தல் ஜுரம் ஆரம்பமாகிவிட்டது. ஆளும் அரசு கட்டங்கடைசியாய் 110 விதிகளின் படி அறிவிப்பாய் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஏற்கனவே கொடுத்த அறிவிப்புகளின் நிலை எல்லோருக்கும் தெரியுமாதலால் யாரும் அதை சட்டை செய்ததாய் தெரியவில்லை. எதிர்கட்சியாய் இருப்பவர்களோ அதையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சொல்வது ஒன்றும் தவறல்ல இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் அதே 110 விதியை பின்பற்றாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆட்சியில் தொடர்ந்த நல்லதை மீண்டும் தொடர்ந்த பழக்கம் நம் தமிழ்நாட்டு அரசியலில் இருந்ததே கிடையாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கறுவேப்பிலைன்னு இப்பவாச்சும் புரிஞ்சுச்சே
கறுவேப்பிலைன்னு இப்பவாச்சும் புரிஞ்சுச்சே
ராஜ் டிவிக்காரன் ஒரு படத்தை 5 மணி நேரம் போடுறான்னா.. சன் டிவிக்காரன் மதிய படத்தை முக்கா மணி நேரம் எடிட் பண்ணிட்டுப் போடுறானுவ.
தேமுதிக இன்றைய மாநாட்டில் அறிவிக்கப் போகும் கூட்டணி?
திமுக
அதிமுக
மநகூ
தூக்கி அடிச்சிருவேன்.
திமுக
அதிமுக
மநகூ
தூக்கி அடிச்சிருவேன்.
Intresting, sleek, flimsy, but not that much impressive avg second half#MaheshintePrathikaram
சிரிக்க முயற்சி பண்ணிட்டேத்தான் இருக்கேன். வரத்தான் மாட்டேங்குது.
Finished watching upto season 4. it's haunting.. engaging, truely..#BreakingBad
காதங்கிறது ஒரு எக்ஸ்டஸி..அதுனாலத்தான் கிடைக்கிற எடத்துல எல்லாம் தேடத் தொடங்கிவிடுகிறார்கள் போதைப் பிரியர்கள்
காதல் என்பது?
இளைஞர்களுக்கானது
வயது வரம்பில்லாதது
காமத்திற்கானது
ங்கொய்யால..
இளைஞர்களுக்கானது
வயது வரம்பில்லாதது
காமத்திற்கானது
ங்கொய்யால..
finished full sereis of Breaking bad. iam totally satisfied with the climax
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Breaking Bad
சமீப காலங்களில் இப்படி வெறி பிடித்தார் போல டிவியோ, அல்லது வீடியோவோ பார்த்ததில்லை. ஐந்து சீசன்கள்,, மொத்தம் 62 எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் முதல் 55 நிமிடங்கள் கூட செல்லும். அப்படியென்றால் எத்தனை மணி நேரமென்று கணக்கிலெடுத்து கொள்ளுங்கள். தினமும் இரவு இரண்டு எபிசோடாவது பார்க்கவில்லையென்றால் தூக்கம் வர மாட்டேனென்கிறது. மனம் முழுவதும் மிஸ்டர்.வொயிட், ஸ்கைலர், ஜெஸ்ஸி பேக்மென், ஷ்ரெட்டர், ஹைசன்பெர்க் என திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டேயிருக்கிறது. 2008ல் ஆரம்பித்து 2013 வரை அமெரிக்க டிவி பார்வையாளர்களை கட்டிப் போட்ட சீரிஸ். எது எது எல்லாம் தவறு என்று சொல்லி வளர்ந்தவன் அதை உடைத்துக் கொண்டே போய் நிற்குமிடம் அட்டகாசம். நம்மூர் டிவி சீரியல் போல ஒரே விஷயத்தை எபிசோட் ஓட்ட வேண்டுமே என்று மறுக்கா மறுக்கா பேசிக் கொண்டிருப்பதில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு எபிசோடும் சினிமா. விஷுவலாகட்டும், எடிட், மற்றும் சினிமாட்டோகிராபியாகட்டும் அவ்வளவு கெத்து. ஒரு சாதாரண ஹைஸ்கூல் கெமிஸ்ட்ரி டீச்சருக்கு லங் கேன்சர் வருகிறது. சரியே ஆகாது மிகவும் கஷ்டம் என்கிற சூழ்நிலையில் தனக்கு பிறகு தன் குடும்பம் பைனான்ஸியலாய் நடுத்தெருவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக மெத் எனும் கெமிக்கல்போதைப் பொருளை ஜெஸ்ஸியுடன் சேர்ந்து தயாரிக்க ஆரம்பிக்கிறான். அது வொயிட்டை எங்கெங்கே கொண்டு செல்கிறது. நம் பக்கத்து வீட்டு அங்கிள் போல சாதுவாய் இருக்கும் அவனுள் இருக்கும் மிருகம் பணம், தன்னால் மட்டுமே இவ்வளவு தரமாய் ஒரு போதைப் பொருளை தர முடியும் என்கிற ஈகோ, தன்னைத் தவிர வேறு யாரும் தயாரிக்க கூடாது என்பதற்காக கொலை செய்யும் வரை போகக்கூடிய வெறி என மாறிப் போகும் வெயிட்டின் க்ரே பக்கங்கள், நியூ மெக்ஸிக்கோவின் அரசியல், மற்றும் போதைப் பொருள் பின்புலம். ஒரு டி.ஈ.ஏ ஏஜெண்ட் மச்சினன் உடனிருக்கும் போதே அவன் தேடும் ஹைசன்பெர்க் எனும் மிஸ்டர் வொயிட்டின் தில். என ஒவ்வொரு எபிசோடிலும் பதைக்க வைத்துவிடுகிறார்கள். குறையாய் சொல்லப் போனால் நம்மூர் டிவி சீரியலைப் போல ஒவ்வொரு எபிசோடிலும், நாம் நம் குடும்பம், குடும்ப உறவுகள் என கொஞ்சம் ஜல்லியடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் இந்த சீரிஸின் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் எப்படி ஒவ்வொரு எபிசோடுக்கும் கதாசிரியர்கள் வேறு வேறாய் இருப்பதைப் போல இயக்குனர்களும் மாறி மாறி வருகிறார்கள். பட் இத்தொடரின் கிரியேட்டர் எனும் பொறுப்பு வின்ஸ் கிலிக்கனையே சாரும். செம்ம கேரக்டரைஷேன்கள். வொயிட்டாக வரும் ப்ரைன் க்ரைஸ்டனின் நடிப்பும், ஜெஸ்ஸியாய் வரும் ஆரோன் பாலின் நடிப்பு அசத்தல் ரகம். ஜெஸ்ஸியின் இன்னொசென்ஸும், வொயிட்டின் திட்டமிட்ட பேச்சும், அப்பாவைப் போல பாசம் காட்டி அவனை தன் வயப்படுத்தும் காட்சிகள் எல்லாம் அட்டகாச எபிசோடுகள். இவர்களை அழிக்க வரும் ஒரு பேசா சகோதரர்கள், மெத்தின் பெரும் சப்ளையராய் வரும் கேல். அவரது மனைவி, கேலின் பாதுகாவலாய் வந்து பின்னாளில் வொயிட்டுடன் பிஸினெஸ் பார்ட்னராய் மாறி வொயிட்டினாலேயே கொல்லப்படும், மைக். போதையின் உச்சத்தில் சாப்பிட்டது தொண்டைக்குழியில் மாட்டி மூச்சடைத்து இறந்து போகும் ஜெஸ்ஸியின் முதல் காதலி, அவனுடன் பழகியதாலேயே அவனை பயமுறுத்த தன் உயிரை விடும் ஆண்ட்ரியா என ஒவ்வொரு கேரக்டரும் அட்டகாச கிரியேஷன்கள். சமீப காலத்தில் என்னை ஒரு விஷயம் இப்படி கட்டிப் போட்டதில்லை. யாராவது பார்க்க வில்லையென்றால் இன்றே டவுன்லோடிட்டுக் கொள்ளூங்கள் அல்லது நெட்பிளிக்ஸில் இருக்கிறதாம். போதை சம்பந்தமான சீரிஸ்.. பார்க்க ஆரம்பித்தால் அது போதையாய் போய் நாம் அடிக்ட் ஆகி விடும் அபாயம் அதிகம். டேக் கேர். விரைவில் எபிசோட் எபிசோடாய் விலாவாரியாய் ஸ்பாய்லர் வீடியோ விமர்சனம் செய்ய ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் சாக்குறதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜில் ஜங் ஜக்
மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்னால் மிக ஸ்டைலிஷான விஷுவல்கள், ஸ்லீக் எடிட், கலர்புல்லான செட் என ட்ரைலரிலேயே பார்க்க வேண்டுமே என்று தோன்றுகிற அளவுக்கு டபுள் பேரல் என்ற ஒரு படம் வந்தது. பாதி படத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் நம்மூர் ஆர்யா வேறு கேமியோ. கேரளாவில் அதிகம் பேர் பாதி படத்தில் வாக்கவுட் செய்த படமென்று ஸ்ரீதர் பிள்ளை சொன்னார். இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும் போது அப்படம் நியாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. கதை என்று பார்த்தால் ஜெய் சங்கர் காலத்து கதை தான். அதை டெக்கியாய் விதவிதமான கலர் காம்பினேஷனில் ஸ்டைலிஷாய் ப்ரெசெண்ட் செய்திருப்பதாய் நம்ப வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் சிரிப்பே வர மாட்டேங்குது. பெக்கூலியர் கேரக்டரைஷேசன் இருந்தால் அது ப்ளாக் காமெடி என்று நினைத்தார்கள் என்றால் இல்லை என்பது இப்படத்தின் மூலம் உறுதியாகிறது. உகாண்டா பாஷை என்று பிட்டு பட டையலாக்குகளை சொல்லுமிடம் கொஞ்சம் சிரிப்பு. அதை விட, வில்லன் ஒரு இடத்தில் போனில் ஐயம் கம்மிங் என்று சொல்ல, இங்கே உகாண்டா நாகா நான் சொல்ல வேண்டிய டயலாக்கை அவன் ஏன் சொல்லுறான் என்று சொல்லுமிடத்தில் மொத்த தியேட்டரில் நான் மட்டுமே சிரித்துக் கொண்டிருந்ததை ஆச்சர்யமாய் பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் பார்த்தார்கள். நம் வாழ்க்கையை ஒட்டாத ப்ளாக் காமெடிகள் அவ்வளவாய் நம்மூரில் ஒர்க்கவுட் ஆகாது. கமல் ட்ரை செய்த தமிழின் முதல் ப்ளாக் காமெடியான மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கூட அவர் காதல் கத்திரிக்காய், பாசமென்று ட்ரை செய்தும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்பது உ.கை.நெ.கனி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Maheshinde Pratikaram
இடுக்கியில் மகேஷ் எனும் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தும் பகத் பாஸிலை ஒரு ரோட்டோர சண்டையில் அடித்துவிடுகிறான் உள்ளூர் ரவுடிப் போன்ற ஆள். அவனை அடிக்காமல் நான் காலில் செருப்பு போட மாட்டேன் என்று சபதம் செய்து காத்திருக்கிறான். அவனுக்காக ஜூடோ எல்லாம் கூட கற்றுக் கொள்கிறான். கடைசியில் அவன் ஜெயித்தானா? இல்லையா? என்பதுதான் கதை. ஒரு வரியில் சொல்லப் போனால் மிக சன்னமான கதை. அதை இடுக்கி, பகத் பாசில், அவனுடய போட்டோகிராபர் அப்பா கேரக்டர், விட்டுப் போன காதலி, புதிய காதலி, பக்கத்து டிஜிட்டல் பேனர் டிசைனர், அவரது பெண், அவரது கடையில் டிசைனராய் வேலைக்கும் வரும் இளைஞன் என சுவாரஸ்ய கேரக்டர்களினால் முதல் பாதி அதகளப்படுத்துகிறார்கள். இரண்டாம் பாதியில் காதல், கத்திரிக்காய் என்று போனாலும் க்ளைமேக்ஸில் தன் காதலியின் அண்ணன் தான் அந்த ரவுடி என தெரிந்தும் அவனுடன் சண்டைப் போட்டு வெல்வது, போன்ற ஒரு சிற்சில விஷயங்களைத் தவிர செகண்ட் அஃப் கொஞம் ட்ராகிங் தான். பட் பர, பர காமெடி முதல் பாகத்திற்காகவும், பகத்தில் கண்ட்ரோல்ட் நடிப்புக்காகவும் ஒரு முறை பார்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
2 Countries
திலீப்பின் பெரிய கமர்ஷியல் ஹிட் என்றார்கள். கதையென்று பார்த்தால் மை சாஸி கேர்ள் படத்தின் உட்டாலக்கடிதான் என்றாலும் அதை லக்கடி செய்த விதத்தில் நம்மை அசத்தியிருக்கிறார்கள். மலையாளிகளின் பெரும் திறமை இம்மாதிரியான வெளிநாட்டுப் படங்களை அவர்களின் ரசனைக்கேற்றார்ப் போல மாற்றியமைப்பதில் ஜித்தர்கள். வழக்கம் போல சீக்கிரம் பணக்காரனாக எல்லா ஜகஜ்ஜால வேலைகளையும் செய்யும் திலீப். ஒரு மார்வாடி ஹேண்டிகாப் பெண்ணை காதலிப்பதாய் சொல்லி அவளின் பணத்தை அடைய ப்ளான் செய்து கொண்டிருக்கும் போது, லயா எனும் கனடா நாட்டு பெண்ணை காண்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள, அதன் பின்னால் நடக்கும் அதகள காமெடிகளை படம் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். திலிப்பிற்கு கேட் வாக் கேரக்டர் தான் ஆனால் அவரைப் போன்ற சீசண்ட் ஆக்டரினால் தான் இது சாத்தியமாகக்கூடியதும் கூட. டெம்ப்ளேட்டான கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் காமெடியை தூவி கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டார்கள். ஜாலி எண்டர்டெயினர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிருதன்
தமிழின் முதல் ஜோம்பி படம் என்கிற டேக்கோடு வந்திருக்கிற படம். ஹாலிவுட் பாணியில் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் கதைக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு கெமிக்கல் ஸ்பில்லில் நாய்க்கு அந்த நோய் வர, அது கடிக்க, மெல்ல ஊட்டி மொத்தமும் ரணகளமாகியிருக்க, ஹீரோவின் தங்கையை யாரோ கடத்தியிருக்க, அவளை தேடிப்போகும் கார்த்திக்கு ஊரெல்லாம் ஜோம்பிக்களாய் அலைவது தெரிந்து பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் நெற்றிப் பொட்டில் சுட்டு, அதற்காக மருந்து கண்டுபிடிக்க முயலும் ஹீரோயின் குழுவை கோவைக்கு கூட்டிச் செல்ல முயல்கிறார். வழியில் அவரது டெம்போ ட்ராவலர் மீது ஒரு டஜன் ஜோம்பிக்கள் இடைவேளை. இது வரை எல்லாமே அட பரவாயில்லையே என்றிருக்க, அதன் பின் திரைக்கதை ஒரு மாலுக்குள் மாட்டிக் கொண்டு, வெளியே வர முடியாமல் தங்கி தத்தளித்து கதையும் முடியாமல், ஒரு மாதிரி போய் இரண்டாம் பாகம் என்கிறார்கள். தமிழின் முதல் ஜோம்பி மூவி என்பதைத் தவிர வேறேதும் ஸ்பெஷலாய் இல்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேதுபதி
விஜய்சேதுபதியின் போலீஸ் அவதாரம். வழக்கம் போல முறுக்கிய மீசையோடு வலம் வரும் கெத்து போலீஸ் ஆபீஸர்தான். கூடவே ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா, அவ்வப்போது பொண்டாட்டியிடம் குழந்தையாய் மாறிப் போகிறவரும் கூட. உடன் வேலை பார்க்கும் போலீஸை கொன்றுவிட அக்கேஸில் இன்வால்வ் ஆகும் வாத்தியார் எனும் லோக்கல் தாதாவை எதிர்க்கிறார். அவருக்கும் இவருக்குமான கதையில் எங்கோ திடீரென ஸ்கூல் பையன் மேல் துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டு இடைவேளை. பின்பு அங்கேயும் இங்கேயுமாய் கதைகளை இணைத்து, அங்கேயும் இங்கேயும் இல்லாமல் கொஞ்சம் சொதப்பியிருக்கத்தான் செய்கிறார்கள் என தோன்றுகிறது. ஒரு போலீஸ் வேலையை தற்காத்துக் கொள்ள அத்துனை பிரயத்தனப்படும் ஹீரோவின் கேரக்டர் எப்படி வேலைக்கு சேர்ந்த மறு நாள் வில்லனின் வீட்டை பெட்ரோலால் நிரப்பி நெருப்பு வைத்து கொல்லத் துணிகிறான். இத்தனை நேரம் மாஸ் ஹீரோ படமில்லை என்று காட்ட பிரயத்தனப் பட்டதெல்லாம் வீணாகியல்லவா போய்விட்டது?. விஜய்சேதுபதியின் நடிப்பு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும் சிற்சில சுவாரஸ்ய காட்சிகள் மொத்தப்படத்தையும் காப்பாற்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
பட்டாம் பூச்சிகளின் வாக்குமூலம் என்கிற இக்குறும்படத்தின் இயக்குனரை எனக்கு பல வருடங்களாய் தெரியும். நிறைய சமூதாயத்திற்கு தேவையான கருத்துக்களை மனதில் ஏந்திக் கொண்டலையும் ஒரு சில சீரியஸ் இளைஞர்களில் ஒருவர். திடீரென பேச்சுலர் பாய்ஸ் என்று பெப்பியான மீயூசிக் வீடியோவும் எடுப்பார். இப்படத்தின் பின்னணியிசை கோர்ப்புக்கு முன் என்னிடம் காட்டினார். குடியின் தீமைகளை இதை விட அழகாய், அழுத்தமாய் சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழும்பச் செய்யும் அளவிற்கான படம். நிச்சயம் பல விருதுகளை இப்படம் பெறும் என்று வாழ்த்தி, விருதுகள் பெற்ற பிறகு கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட் மூலமாய் வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதே போல இப்போது உங்கள் பார்வைக்க்காக “பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”.
குறும்படம்
பட்டாம் பூச்சிகளின் வாக்குமூலம் என்கிற இக்குறும்படத்தின் இயக்குனரை எனக்கு பல வருடங்களாய் தெரியும். நிறைய சமூதாயத்திற்கு தேவையான கருத்துக்களை மனதில் ஏந்திக் கொண்டலையும் ஒரு சில சீரியஸ் இளைஞர்களில் ஒருவர். திடீரென பேச்சுலர் பாய்ஸ் என்று பெப்பியான மீயூசிக் வீடியோவும் எடுப்பார். இப்படத்தின் பின்னணியிசை கோர்ப்புக்கு முன் என்னிடம் காட்டினார். குடியின் தீமைகளை இதை விட அழகாய், அழுத்தமாய் சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழும்பச் செய்யும் அளவிற்கான படம். நிச்சயம் பல விருதுகளை இப்படம் பெறும் என்று வாழ்த்தி, விருதுகள் பெற்ற பிறகு கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட் மூலமாய் வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதே போல இப்போது உங்கள் பார்வைக்க்காக “பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Which of the following words does not belong: meat, eggs, wife, blowjob.
Blowjob. You can beat your meat, eggs, and wife; but you can't beat a blowjob.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
breaking bad அதகளம். இந்த அளவு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்ள முடியுமா என்று யோசிக்க வைக்கும் 'கஸ்' பற்றி சொல்லவில்லையே!
குறும்படம் . . . மிக அருமை . . .
இயக்குனருக்கு வாழ்த்துகள்
Also, watch Homeland, The Affair, and Ray Donovan.
Cable sir, please watch HOUSE MD
House MD is fantastic, pls don't miss. My favorite till date
Friends & Big Bang Theory are two other awesome sitcoms
Post a Comment