Thottal Thodarum

Feb 29, 2016

கொத்து பரோட்டா - 29/02/16

அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நான் விமர்சனம் செய்தால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளை விட, பா.ம.க, சீமான் போன்றோரின் கட்சியில் உள்ளவர்கள் மிக மரியாதையாய் திட்டுவார்கள். நேற்று கூட பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எங்களோட யார் வேணா கூட்டணிக்கு வரலாம்னு சொன்னதை நான் காமெடின்னு சொல்லியிருந்தேன். அதுக்கு அவங்க கட்சிக் காரர் ஒருத்தர் பேஸ்புக்குல டேய்.. உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேண்டா என்று மரியாதையாய் எச்சரித்திருந்தார். வண்டலூர் மாநாடு அன்புமணிதான் தமிழகத்தின் எதிர்காலம் என்றிருக்கிறார். அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவை கலாய்த்து வேறொரு வீடியோ ஓடுகிறது. அதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலை. அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவில் இன்னொரு விஷயத்தை சொல்லி அவர்களின் தொண்டர்களை பழக்கப்படுத்தலாம். அதாவது நானும் எனது கட்சி ஆதரவாளர்களும் சகிப்புத்தன்மையை பழக்கப்படுத்திக் கொள்வோம்ங்கிறதத்தான் சொன்னேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
எங்களோட யார் வேணா கூட்டணிக்கு வரலாம்னு ராமதாஸ் சொல்லியிருக்கிறத பார்த்தா செம்ம காமெடியா இருக்கு

இந்த பேஸ்புக் ட்விட்டர்ல வர்ற வசூல் மட்டும் நிஜத்தில வந்தா எவ்வளவு நல்லாருக்கும் ‪#‎தமிழ்சினிமாதயாரிப்பாளர்கள்‬

ஒருத்தருக்கு அரசியலுக்கு வர்றா மாதிரி இன்னொருத்தருக்கு நான் உங்க ஃபேன், தலைவாங்கிறது எல்லாம் ‪#‎படரிலீஸ்‬

started watching Narcos in netflix
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆறாது சினம்
லையாள மெமரீஸின் ரீமேக். கிறிஸ்துவ பாதிரியார் வரும் காட்சி தம்பியின் கல்யாணக்காட்சி என்பதைப் போன்ற சில காட்சிகளில் மட்டும் பட்டி தட்டி வேலை பார்த்திருக்கிறார்கள். கொஞ்சம் பழைய இன்வெஸ்டிகேஷன் கதைதான். அறிவழகன் மேக்கிங் விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறவர். இதிலும் அஃதே. என்ன பட்ஜெட் காரணமாய் ஒரு சில இடங்களில் காம்பரமைஸ் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் கை கொடுத்திருக்கிறார். இயக்குனர் கவுரவ் வில்லனாய் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அருள்நிதிக்கு கொஞ்சம் குருவி தலை பனங்காய் தான். பட் தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்களில் நடிக்க எடுத்திருக்கும் முடிவுக்காகவும் கொஞ்சம் நடிக்க பிரயத்தனப்பட்டதற்காகவும் பாராட்டுக்கள். ரோபோ சங்கர், சார்லியின் காமெடி போலீஸ் விஷயங்கள் செம்ம மொக்கை. மற்றபடி மலையாளம் பார்த்த போது எதுக்காக இதை பெருசா பேசினாங்க? என்று கேட்ட அதே தொனி இன்னும் கொஞ்சம் குறைந்து அப்படி என்ன இருக்குன்னு இதை ரீமேக்கினார்கள்? என்ற கேள்வி எழாமல் இல்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Narcos
கொலம்பியாவின் ராபின் ஹுட், போதை மருந்து கடத்தல் மன்னன், உலகின் மிகப் பெரிய பணக்காரன் லிஸ்டில் இருந்தவன், ஆயிரக்கணக்கான அரசியல் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் சாவுக்கு காரணமானவன். கொடுங்கோல மனசுடையவன், என எல்லோராலும் தூற்றப்பட்ட, வாழ்த்தப்பட்ட, பேசப்பட்ட போதைப் மருந்து விற்பனன் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய சீரியல் இந்த நார்கோஸ். இவரைப் பற்றி நிறைய படங்கள், டெலிவிஷன் சீரியல்கள் வந்திருந்தாலும் நான் பார்க்க நேர்ந்தது நெட்ஃப்ளிக்ஸின் ஒரிஜினல் தயாரிப்பு என்ற டேக்கில் வந்த இந்த நார்கோஸை மட்டுமே. எஸ்கோபார் எப்படி வளர்ந்தான். வளர்ந்து தன்னை காத்துக் கொள்ள எப்படியெல்லாம் செயல்பட்டான் என்பதை அமெரிக்க ட்ரக் என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர்கள் இரண்டு பேரின் பார்வையில் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மூர் நாயகன் இன்ஸ்பெக்டர் நாசருக்கும், வேலு நாயக்கருக்குமிடையே நடக்கும் மோதலின் பெரிய வர்ஷன் தான் இந்த சீரிஸ். பாப்லோவாக நடித்த வேக்னர் மெளராவின் நடிப்பு அட்டகாசம். அந்த இளம் தொந்தி, கூரிய கண்கள், யோசிக்கும் போது முகத்தில் தெரியும் தீவிரம். அளவான சந்தோஷம் என மனுஷன் அட்டகாசம் பண்ணுகிறார். ஒரு விதமான க்ளாசிக்கல் மேக்கிங் ஸ்டைலும், விஷுவல்களும், தெரிந்த கதைய வேகமாகவும், வித்யாசமாகவும் ப்ரசண்ட் செய்த விதம், சினிமாவிற்கு நிகரான தரம் என இந்த சீஸன் நார்கோஸ் களை கட்டி விட்டது. அடுத்த சீசன் 2016ல். ஐயம் வெயிட்டிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு கட்டத்தில் இருக்குற 5 சதவிகித ஓட்டுக்காக எதுக்கு இந்த ஒண்ணும் புரியாம பேசுற விஜயகாந்த் பின்னாடி திமுக வேண்டிட்டு நின்னுட்டிருக்குன்னு பொது மக்களே பரிதாபப்பட்டு அந்த 5 சதவிகித ஓட்டை நமக்கு நாமே கள்ள ஓட்டாவது போட்டு செயிக்க வச்சிருவோம்னு யோசிக்கிற அளவுக்கு போயிருச்சு. குமுதம் கார்ட்டூனைப் பார்த்து எங்க வீட்டுல எல்லோரும் வருத்தப்பட்டாங்கன்னா பார்த்துக்கங்க. ஆனாலும் எனக்கென்னவோ 50 பர்சண்ட் தான் சான்ஸ் இருக்குறா மாதிரி தெரியுது. ஏன்னா.. சரத்குமார் வேற பி.ஜே.பியோட போயிட்டாரு. அதான் யோசிக்கிறேன்.:)
@@@@@@@@@@@@@@@@@@@@
இருக்குற ரோட்டையெல்லாம் கொத்தக்கூட கொத்தாம அது மேல சிமெண்ட் கான்க்ரீட்டை கொட்டி ராத்திரியோட ராத்திரியா ரோடு போடுறாங்க. ஆனால் அந்த ரோட்டின் கனெக்டிங் ரோட்டை அப்படியே மேலே தார் போட்டு ரோடு போடுகிறார்கள். புதியதாய் போட்ட சிமெண்ட் ரோடு ஒரு அடி மேலே உயரமாய் இருக்கிறது. எனவே மழைக் காலத்தில் தண்ணீர் மெயின் ரோட்டில் தேங்கி நிற்க வாய்ப்பு உள்ளது. எல்லா ரோடுகளும், தண்ணீர் போகக் கூடிய மழை நீர் வடிகாலுடன் இருந்தால் தான் சீராக இருக்கும் ஏதோ ரோட்டை போட்டே ஆகணும் என்கிற கட்டாயத்தில் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு உயரத்தில் வைத்து கான்க்ரீட் ரோடு போடுவது எதற்காக? எந்த ரோட்டிலும் மழை நீர் வடிகால் வைக்கவில்லை. ஒர் குறிப்பிட்ட தூரத்திற்க்கு ரோட்டின் நடுவே ஒரு ப்ளாஸ்டிக் குழாயை வைக்கிறார்கள். அதன்  மேல் தான் கான்க்ரீட் போடுகிறார்கள். அக்குழாயின் மூலம் மழை நீர் உறிஞ்சப்பட்டு நிலத்திற்கு போகும் என்று வைத்துக் கொண்டால் கூட அதற்கான வடிகாலோ, அல்லது வழியோ வைக்கப்படவேயில்லை. அந்த பைப்புகளும் அது மூடப்படும் முன்பே வண்டிகள் ஓடி, உடைந்திருக்க, அதை மாற்றக்கூட முடியாத அவசரத்தில் அதன் மேல் மண் போட்டு அதன் மேல் கான்கிரீட் போடப்படுகிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
பிரபலங்களை வைத்து குறும்படம் வெளியிடுவது இந்தி திரையுலகில் சகஜமாகிவிட்டது. அந்த வரிசையில் தம் அடிப்பது உடலுக்கு கெடுதல் என்று முகேஷின் மூலமாகவும், இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு  என்பது போன்ற அடாசு விளம்பரங்கள் மூலமாய் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலும் அதை பார்வேர்ட் செய்து விட்டோ, அல்லது அந்த விளம்பரம் முடிந்தோ உள்ளே போய் உட்காரும் ஆட்கள் அதிகமாகிவிட்ட இந்நிலையில் சன்னிலியோனை வைத்து நோ ஸ்மோக்கிங் எனும் வீடியோவை எடுத்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த வீடியோவை பார்த்து ரெண்டு பேராவது தம் அடிப்பதை நிறுத்துவார்கள் என்பது நிச்சயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

3 comments:

Ponchandar said...

என்ன சார் அடல்ட் கார்னரை காணோம். சரக்கு தீர்ந்துடுச்சா ?????

TK said...

Hello Cable-ji,

Why your usual final-touch in kotthu poratta is missing? Is it because of writing about Sunny Leone's video in the end? Just the mere mention of Sunny itself compensates for that :-)

TK

Avargal Unmaigal said...

///ஒருத்தர் பேஸ்புக்குல டேய்.. உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேண்டா என்று மரியாதையாய் எச்சரித்திருந்தார்.///

உண்மையிலே உங்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சி நண்பர் நல்ல மரியாதைதான் வச்சி இருக்கார். இணையத்தில் திமுக அதிமுகவை எப்படி வேண்டுமானாலும் கலாய்க்கலாம். ஆனால் இந்த பாமகவைமட்டும் கலாய்ச்சிங்க அவங்க உங்க குடும்பத்தை அசிங்கம் அசிங்கமாக திடுவாங்க அதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நாகரிகமான முறையில் பதில் சொல்ல தெரியாது இது என் அனுபவத்தில் நான் கண்டது, ஆனால் அவர்கள் திட்டுவதற்காக நான் கலாய்க்காமல் இருந்தது கிடையாது இன்னும் அதிகமாகவே கலாய்ப்பேன்....கடைசியில் என்னிடம் அவர்களின் பருப்பு வேகாது என்று தெரிந்ததும் அடங்கி போய்விட்டார்கள்