கொத்து பரோட்டா - 28/03/16
தோழா இரண்டு ஆண்களுக்கு இடையே ஆன நட்பின் நெருக்கத்தை சொல்லும் படம். ப்ரெஞ்சில் வெளியான அன் டச்சபிள் எனும் படத்தின் அஃபீசியல் ரீமேக். அது ஒரு உண்மைக்கதை. அதை இங்கே கொஞ்சம் எக்ஸ்டெண்ட் செய்து இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் மிஞ்சினாலும் நெஞ்சை நக்கக் கூடிய படமாய் போய்விடக்கூடிய அத்துனை வாய்ப்புகள் உள்ள கதை. ஆனால் அதை மிகைப் படுத்தாத நடிப்பினாலும், ஒவ்வொரு காட்சியின் ட்ரான்ஸிஷனாலும், வசனத்தினாலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்தியாகட்டும், நாகார்ஜுன் ஆகட்டும் பர்பெக்ட்டாய் நம் மனதினுள் பதிந்துவிட்டார்கள். ராஜு முருகன், முருகேஷ் பாபுவின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். தேவைபடுகிற இடத்தில் தேவைக்கதிகமாய் இல்லாத வசங்கள். சில சமயங்களில் சீரியஸாய் ஆரம்பிக்கிற சீனை அப்படியே சிரிப்பாய் மாற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வழியாகவும், சிரிப்பாய் ஆரம்பிக்கும் காட்சியை தொண்டையை அடைக்கும் காட்சியாகவும் மாற்றக்கூடிய வலிமையுள்ள வசனங்கள். நாகார்ஜுனுக்கு வயசே ஆகாதா?. மனுஷன் நாளாக நாளாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மில்லியனர் என்றதும் அதில் நாகார்ஜுனை பொருத்திய காஸ்...