”இந்த வாட்டி யாரு வருவாங்க சொல்லுங்க?” என்ற அந்த அம்மணியிடம், “நிச்சயம் மாற்றம் வரதுக்கான வாய்ப்பிருக்குன்னேன். அப்ப நீங்க திமுகவா? அப்படின்னாங்க... “அப்படியில்லைங்க.. வெள்ளத்துக்கு முன்னாடி நிச்சயம் அதிமுகவுக்கு 70 சதவிகிதம் வாய்ப்பு இருந்துச்சு. இப்ப அதுக்கு சாத்தியமில்லை. திமுகவுக்கு கூட்டணி வலு இல்லைன்னு சொல்றீங்க? சரி.. அப்படி பார்க்கும் போது அதிமுக, திமுக ரெண்டுத்துக்கு சரி சதவிகித வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை விஜயகாந்த், பா.ம.க, பா.ஜ.க, ம.ந.கூன்னு ஆளாளுக்கு ரெண்ட்ரொரு சீட் ஜெயிச்சுட்டாலும், காலக் கொடுமை இவங்க உதவியிருந்தாத்தான் ஆட்சி அமைக்க முடியும்னா, நிச்சயம் அவங்களே திமுகவுக்குத்தான் போவாய்ங்க.. என்ன நீங்க மைனாரிட்டி திமுகன்னு அஞ்சு வருஷத்துக்கு புலம்பிட்டிருக்கலாம். அம்பூட்டுத்தான். என்ன நான் சொல்றது? என்று போது “தம்பி உங்களுக்கு உலகம் தெரியலை.. ஏன்னா நேத்து நான் பல பேரை சந்திச்சேன் அங்க அவங்ககிட்ட பேசினப் போது , தெளிவா ஒண்ணு தெரிஞ்சுச்சு, அடுத்தது அம்மாதான்னு. அப்படியா? யாரை சந்திச்சீங்க? எந்த ஏரியாவுல போய் சந்திச்சீங்க? என்றேன் ஆவலுடன். நம்ம மகளிர் அணி கூட்டத்திலதான் என்றார் அந்த அம்மணி. வெளங்கிடும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
படம் வெளியாகி மூணு மணி நேரத்துல விமர்சனம் போட்டு ஹிட்ஸ் வாங்கின காலம் போய், அங்கேயே டிவிட் போட்டு பேரு வாங்கிட்டிருந்தவங்க போய், இந்த 4ஜி காலத்துல தியேட்டர் கக்கூஸுலேர்ந்து, வாசலேர்ந்து எல்லாம் விமர்சனத்தை வீடியோ போட்டு நாலு காசு பாக்கும் காலமாயிட்டிருக்கிற இந்த நேரத்துல ஒவ்வொரு விமர்சனத்துக்கு ப்டத்தை விட மெனக்கெடுற தமிழ் இந்து டீமில் விமர்சனம் செய்யும் கார்த்திக் கிருஷ்ணா அசத்துகிறான். பட விமர்சனம் பார்ப்பதை விட, இவனது ஃப்ரீ விமர்சனம் கிரியேட்டிவிட்டி சுவாரஸ்யமாய் இருக்கிறது. வீடியோ விமர்சனத்தில் நம்பர் ஒன் என்றால் ப்ளூ கலர் சட்டை போட்டுட்டு மரணக்கலாய் கலாய் கலாய்க்கு தமிழ்டாக்கீஸ்.நெட் மாறன் தான். ஏதோ ஊர் நாட்டான் மாதிரி எப்பப் பார்த்தாலும் ப்ளூ சட்டை போட்டுட்டு, ஏதோ எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசுறாரேன்னு நினைக்கலாம். அவர் ஒரு விநியோகஸ்தர், ப்ரொடக்ஷன் மேனேஜர், சினிமாவில் பல வருடம் அனுபவமுள்ளவர். பிரபலமாக உள்ளவர்கள் எல்லாரையும் காசு கொடுத்து விமர்சனம் செய்யும் வழக்கத்தை இப்போது ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் விமர்சனத்தைப் பார்த்து யாரும் படம் பார்க்க போவதில்லை. படம் பார்த்தபின் அவர்களுடய விமர்சனத்தோடு நிறைய ஒத்து வருகிறவர்களைத் தான் ரசிகர்கள் நம்புகிறார்கள். எனவே.. பெய்ட் விமர்சகர்கள் அவர்களது ஸ்டாண்டை மாற்றிக் கொண்டாலேயன்றி டாலர் பெயராது
@@@@@@@@@@@@@@@@@@@
சவாரி
டேக் எண்டர்டெயின்மெண்ட் வெண் கோவிந்தாவின் தயாரிப்பில் உருவாகி வெகு நாட்கள் வெளியிடப்படாமல் வேறொரு நிறுவனம் வாங்கி வெளியிடிட்ருக்கிற படம் தான் சவாரி. குறும்பட இயக்குனர் சென்னியப்பனின் முதல் படம். கிஷோர், செழியன் என திறமையாளர்கள். ஆங்காங்கே ஒரிரு அனுபவ நடிகர்கள். மற்றபடி குறும்படம் போன்றே நடிக்கிற நடிகர்கள் என சிறுகுழுவை அமைத்துக் கொண்டு ஒரு ரோட் மூவி எடுத்திருக்கின்றார். ஆர்மபக் காட்சியில் வரும் ப்ளாக் அண்ட் வொயிட், புகைக்கும் நெருப்பின் கங்கு மட்டும் கலர் என அமெரிக்க த்ரில்லர் மூவிகளின் தாக்கம் அதிகமுள்ள ஷாட்கள், டாப் ஆங்கிள் ரோட் ஷாட்கள், ஆங்காங்கே சிறு சிறு நகைச்சுவை.என சுவாரஸ்யமாய்த்தான் ஆரம்பிக்கிறது. பட்.. போகப் போக, ஒட்ட முடியாமல், ஒரே காட்சிகளை திரும்பத் திரும்ப காட்டி, கதை நகராமல் போய் என்னப்பா சவாரியை முடிக்க போறீங்களா இல்லையான்னு கேட்க வைத்துவிடுகிற அமெச்சூர் தனம் அதிகமே உள்ள படமாய் ஆகிவிட்டது. போலீஸ் ஆபிஸராய் நடித்தவரின் கேரக்டரைஷேஷன், நடிப்பு எல்லாமே வீக். அடுத்த நாள் காலை கல்யாணத்தை வைத்துக் கொண்டு, முதல் நாள் வேலைக்கு போகும் கலாச்சாரம், ஆங்கில படங்களில் சாத்தியம். அங்கே எல்லா படங்களும் அப்படியே கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் தான் எல்லாம் அட்டகாச வேலைகளும், அபத்தங்களும் நடப்பதாய் வரும். இங்கே அங்கே ஆரம்பித்த குளறுபடி, லாஜிக் ஓட்டைகளோடும், ப்ரெடிக்டபளிளாய் போய் முடிகிறது. பட். தேவையில்லாத சைக்கோ ஏன் ஆனான் என்கிற மாதிரியான விளக்கமெல்லாம் கொடுக்காதது ரொம்பவே சிலாக்கியம். செழியனின் ஒளிப்பதிவும், கிஷோரின் எடிட்டிங்கும் படத்திற்கு ப்ரொபஷனல் அழகை அளித்திருக்கிறது. படம் பார்த்து முடிந்த பின் தோன்றிய வழக்கமான விஷயம். குறும்படக் கதையை திரைப்படமாக்க இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும் நண்பர்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
in trp vijay tv is multiplex sun is ABC centre
We can find why sattellite channels are not thronging for feature films rights. these star studded programmes receive more trp than film
in trp vijay tv is multiplex sun is ABC centre
We can find why sattellite channels are not thronging for feature films rights. these star studded programmes receive more trp than film
விஜய்யோட ஒரு விளம்பர இடைவேளை போது சன்னிடம் பாரையாளர்கள் சரணடைய
ராஜாவுக்கு எதிராய் ரஹ்மான். எனக்கென்னவோ ரஹ்மானஜெயிச்சிருவாருன்னு தோணுது #டிஆர்பி
எனக்கென்னவோ விஜய் சூப்பர் சிங்கர் இந்த வாட்டி பெருசா சந்துல செல்ஃப் எடுக்கலையோ..இன்னும் மலையாள ஆதரவு எதிர்ப்பு குரல்களைக் காணோம்?
செக்ஸ் சுதந்திரம் நிறைய காதல்களை தடுக்கும்
Nice, feed good, moving film. I dont know how they are going to recreate the music scence in our version of thozha? #intouchable
எங்கே போனார்கள் ஜாதி மறுப்பாளர்கள்?
வாரத்தின் முதல் நால் செமி பேலியோவாயிருச்சு. வெல்ல அடை வெண்ணெய்
Like paid reviews.. nowadays paid collection reporsts are also in social network
வச்சிருக்கிற ப்ளாகை எழுதவே ஆளில்லை. இதுல புதுசா ப்ளாக்குல மெயில் அனுப்பிச்சி, பப்ளிஷ் ஆகி.. ம்க்கும்.
ஓரு வேளை ஒரிஜினல் மாஸ்டர் இன்னும் வரலையோ?#பாடர்கடைரஹமத்பரோட்டா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மீடிங்குலேயும் ரெண்டு கட்சிக்காரஙளோட அடிதடியாம். பாலிடிக்ஸ் அங்கேயும் வளருது போல.
தே.மு.தி.கவுக்கு இணையத்தில் ஆதரவாளர்களை விட ரசிகர்கள் அதிகம்
@@@@@@@@@@@@@@@@
கோடை மழை
கிராமம், நேட்டிவிட்டியான சின்னச் சின்ன சடங்குகள், பட்டாளத்தான் ஹீரோ, பார்த்தவுடன் காதல் கொள்ளும் டார்க் ஹீரோயின். அவளுடய ஸ்ட்ரிக்ட் ஆபீசரும், பாசமலர் பாசத்தை மிஞ்சும், போலீஸ்கார அண்ணன். நடு நடுவே காமெடிக்கென ட்ராக் என மீண்டும் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் காலத்திற்கு கூட்டிச் செல்லும் படம். படத்தின் நாயகன், நாயகி ப்ரியங்கா, அண்ணன் இயக்குனர் களஞ்சியம் ஆகியோரின் இயல்பான நடிப்பு, இக்காலத்திற்கு ஏற்ற திரைக்கதையாய் இல்லாவிட்டாலும், படத்தை அழகாய் கடத்திச் சென்ற ஆர்பாட்டமில்லாத ஒளிப்பதிவு, நீட் ப்ரெசெண்டேஷன் எல்லாம் ப்ளஸாய் இருந்தாலும்,..
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
What is the difference between "ooooooh"and "aaaaaaah"? About three inches.
கேபிள் சங்கர்

Post a Comment
1 comment:
கொத்துப்பரோட்டா அருமை.
Post a Comment