Thottal Thodarum

Mar 28, 2016

கொத்து பரோட்டா - 28/03/16

தோழா
இரண்டு ஆண்களுக்கு இடையே ஆன நட்பின் நெருக்கத்தை சொல்லும் படம். ப்ரெஞ்சில் வெளியான அன் டச்சபிள் எனும் படத்தின் அஃபீசியல் ரீமேக். அது ஒரு உண்மைக்கதை. அதை இங்கே கொஞ்சம் எக்ஸ்டெண்ட் செய்து இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் மிஞ்சினாலும் நெஞ்சை நக்கக் கூடிய படமாய் போய்விடக்கூடிய அத்துனை வாய்ப்புகள் உள்ள கதை. ஆனால் அதை மிகைப் படுத்தாத நடிப்பினாலும், ஒவ்வொரு காட்சியின் ட்ரான்ஸிஷனாலும், வசனத்தினாலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்தியாகட்டும், நாகார்ஜுன் ஆகட்டும் பர்பெக்ட்டாய் நம் மனதினுள் பதிந்துவிட்டார்கள். ராஜு முருகன், முருகேஷ் பாபுவின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். தேவைபடுகிற இடத்தில் தேவைக்கதிகமாய் இல்லாத வசங்கள். சில சமயங்களில் சீரியஸாய் ஆரம்பிக்கிற சீனை அப்படியே சிரிப்பாய் மாற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வழியாகவும், சிரிப்பாய் ஆரம்பிக்கும் காட்சியை தொண்டையை அடைக்கும் காட்சியாகவும் மாற்றக்கூடிய வலிமையுள்ள வசனங்கள். நாகார்ஜுனுக்கு வயசே ஆகாதா?. மனுஷன் நாளாக நாளாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மில்லியனர் என்றதும் அதில் நாகார்ஜுனை பொருத்திய காஸ்டிங்கே பெரும் வெற்றி. பி.எஸ். விநோத்தின் ஒளிப்பதிவு கச்சிதம். முக்கியமாய் பாரீஸ் இரவு நேரக் ரேஸ் ஸ்டண்ட். பாரா க்ளைடிங் ஷாட்ஸ் எல்லாம் அட்டகாசம். ஒரிஜினல் படத்தின் கதை முக்கால் வாசி இடைவேளையின் போதே வந்துவிட, இன்னும் என்ன செய்யப் போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அதை அழகாய் நாகார்ஜுனுக்கான பகுதியாய் மாற்றி, அனுஷ்காவை உள்நுழைத்தது கொஞ்சம் க்ளீஷேவாக இருந்தாலும் அக்காட்சியின் முடிவு வாவ்.. அதே போல நாகார்ஜுனின் டேட்டிங் சீன் அவருக்காகவே எழுதப்பட்டதாக இருந்தாலும், ஐடியா கொஞ்சம் பழசாயிருந்தாலும், நாகார்ஜுன் எனும் போது செம்மயாக பொருந்துகிறது. ஒட்டாதது தமன்னா, கார்த்தியின் காதல். ஒரிஜினலில் கார்த்தி கேரக்டர் ஆள் தமன்னா கேரக்டரிடம் எப்படியாவது ஒரு நாள் மேட்டரை முடிக்க நேரடியாகவே கேட்பார். இதில் அதை காதலாய் எக்ஸ்டெண்ட் செய்தது ஒட்டவில்லையென்றாலும், காதல் சொல்லும் செயிண்ட் கோபியன் ஸ்டைல் காட்சி கலக்கல். ப்ரகாஷ் ராஜ் என்ன ஒரு நடிகன். அவ்வளவு சப்டிலாக நாகார்ஜுனுடன் நடிக்கும் காட்சியாகட்டும், மொக்கை பெயிண்டிங்கை வாங்கி இளிச்சவாயன் என்று தெரிந்தும் அதை ஜீரணிக்கும் காட்சியாகட்டும் மனுஷன் நடிகண்டா. மைனஸாய் பார்த்தால் அந்த குத்துப் பாட்டும், கொஞ்சம் செகண்ட் ஆஃபிற்காக எக்ஸ்டெண்ட் செய்யபப்ட்ட ஒரு சில காட்சிகளை தவிர, சட்டென விக்ரமன் டைப் படம் தானே என்று சொல்ல முடியாத படியான  ஃபீல் குட் படம். டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜீரோ
பேய் பட சீசனில் வந்திருக்கும் இன்னொரு பேய்ப் படம். ஆனால் இதை பேய் படமென்று சொல்ல முடியாது. இல்லை ஹலூசினேஷன் போல, சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் உள்ள கதையென்று எடுத்துக் கொள்ளலாமென்றால் அதுவும் முடியாது. ஆதாம் ஏவாள் கதை அவளுக்கு முன்னால், ஏன் கடவுளுக்கு முன்னால் பிறந்தவள் அவள் கடவுளால் சபிக்கப்பட்டதன் காரணமாய் குழந்தை பெறாமலேயே இறந்தவள் இம்முறை சாத்தான் போன்ற பாம்போடு, கர்பிணி பெண்களின் மனநிலையிஅ குளறுபடி செய்து அவர்களுக்கென்ற ஒர் தனி உலகத்தை படைத்து அதில் வாழ்ந்து வருவதாய் சொல்லப்பட, அங்கே வசிக்கும் ஹீரோயின் சிவதாவின் அம்மா சிவதாவை கனவில் வந்து அங்க வந்திருன்னு கூட்டிட்டுப் போய் அவளையும் மனநிலை குளறுபடி செய்ய முயற்சி செய்யும் போதே, உலகில் முதல் மனுஷியின் ஆவி அவளின் உடலினுள் நுழைந்து, சாத்தானுடன் சேர்ந்து உலகை அழிக்க முற்பட, பேய் ஓட்டுனர், அல்லது பேயுடன் வாழுகிறவரான ஜே.டி. சக்கரவர்த்தியின் உதவியால் அப்பாவி சிவதா கணவரான அஸ்வினையும் அவளது மனைவியையும் காப்பாற்ற முயற்சிக்க, அஸ்வினின் அன்பும், காதலும், உலகை சாத்தானிடமிருந்து காப்பாற்றுகிறார்கள். கர்பமே தரிக்க முடியாத சிவதாவின் வயிற்றில் கடவுளின் குழந்தை உருவாகிறது.  என்னடா.. இது பேய்க் கதை சொல்லுங்கன்னா.. என்னான்னவோ சொல்லிக்கினுகிறேன்னு கேக்குறீங்களா?
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தோழாவின் நெகிழ்ச்சிக்கு, வசனம் எழுதிய முருகேஷ்பாபுவிற்கும் ஒர் பெரிய க்ரெடிட் உண்டு

தேமுதிகவின் கூட்டணி முடிவினால் திமுகவிற்கு..
1. பின்னடைவு எல்லாம் இல்லை
2. பின்னடைவுதான்
3.ஜெயிக்கிறதே கஷ்டம்
4. எவன் ஜெயிச்சா என்ன?

ஷங்கர் நாளைய இயக்குனர்ல கலந்துக்குறது தப்பில்லை. ஆனா நாளைய இயக்குனர் டைட்டில் வின் பண்றது ஹிஹி..

What a emotional, practical family movie ‪#‎KapoorAndSons‬

சமுதிரக்கனிக்கான விருது மட்டுமே 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kapoor And Sons
அம்மா, அப்பா, தாத்தா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்பாவின் முன் உறவினால் அவ்வளவாக நெருக்கமில்லை. தாத்தா ரொமாண்டிக்கான யூத் தாத்தா. பேரன்கள் ரெண்டு பேர். பெரிய பையன் எழுத்தாளர். வெளிநாட்டில் வசிக்கிறான். அங்கே அவனுக்கு காதலிருக்கிறது. இளையவன் பொறுப்பில்லாமல் இல்லாமல் திரிகிறவன். தாத்தாவுக்கு தன் பரம்பரை அனைவரையும் வைத்து குடும்ப போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை அதை நிறைவேற்றுவதற்குள் நடக்கும் விஷயங்கள் தான் கதை.. சாதாரண  டெலி சீரியல் கதை தான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் படமே. அருமையான மேக்கிங். அலியா, சித்தார்த், ரிஷிகபூர் ரஜத் கபூர், ஆகியோரின் இயல்பான நடிப்பு. ஸூத்திங் இசை, கிரிஸ்ப் எடிட்டிங் என மற்றொரு ஃபீல்குட் படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நல்ல வேளை தாரைதப்பட்டைக்காக பாலாவிற்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருது கொடுக்காமல் போனார்களே அது வரைக்கும் சந்தோஷம். விசாரணைக்கான ரீஜினல் ப்லீம் விருதும், துணை நடிகர்கான விருதை சமுத்திரக்கனிக்கு அளித்தது நல்ல விஷயம். ராஜா ரசிகர்களே என்ன ஆச்சு தலைக்கு என்று புலம்பிய தாரைதப்பட்டை படத்தின் பிஜிஎம்முக்காக ராஜாவுக்கு தேசிய விருது என்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது. எத்தனையோ அசாதரண பிஜிஎம்ம்மை எல்லாம் கொடுத்தவரின் ஆயிரமாவது படம் என்கிற பெருமையைத் தவிர வேறேதும் சிறப்பில்லாத பின்னணியிசை கொண்ட  படத்திற்கு விருது கொடுத்ததை பார்க்கும் போது இந்தியாவெங்கும் போன வருஷம் வெளியான அத்தனை படங்களின் இசை எவ்வளவு மோசமாய் இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kali
துல்கர் மூக்குக்கு மேல் கோபம் கொள்ளும் துர்கோபக்கார மனிதர்.நல்லவர். அவரின் காதலி சாய் பல்லவி. வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு கோபமும், காதலுமாய் வாழ்கிறார்கள். அவனின் முன் கோபம் இருவருக்குமான சண்டையில் முடிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் சாய்பல்லவி. வழக்கம் போல பின்னாலேயே போய் சமாதானமாகி, மாமியார் வீட்டுக்கு கிளம்பி, வந்தது வினை. மனைவியுடனான சண்டை, அதை வெளிப்படுத்த முடியாத கோபம் இதற்கிடையில் ஒரு லாரிக்காரன் அவர்கள் வண்டியை ஓரம் கட்டிவிட்டுப் போக, வந்தது வினை. அந்த சேஸுன் வினையாய் பிரச்சனையில் மாட்ட, மனைவியை அடகு வைத்துவிட்டு போக வேண்டிய கட்டாய நிலை. எப்படி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டார்கள். என்பதுதான் கதை. முதல் பாதி முழுவதும் கேலியும்,காதலும், கோபமுமாய் கொண்டாட்டமாய் போகிறது. ஆரம்பக்காட்சியின் ஒளிப்பதிவும், கிரேடிங்கும் அட்டகாசம். துல்கரின் ஸ்கீரின் ப்ரெசென்ஸும், சாய் பல்லவியின் இயல்பும் கேட்சி. லாரி ட்ரைவர் வில்லன், தாபா வில்லன் எல்லாமே டெரர்தான். அதுவும் அந்த வில்லன் இடத்தில் துல்கரும், சாய் பல்லவியும் மாட்டிக் கொள்ளும் நேரமெல்லாம் திக்..திக். எங்கே துல்கரின் முன் கோபம் இன்னும் ப்ரச்சனையில் கொண்டு விட்டு விடுமோ என்ற பயம் நம்முள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. லாரி சேஸுங் காட்சிக்ள். இரவு நேர ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகளை அமைத்தவிதம், எடிட்டிங் என டெக்னிக்கலாய் மிரட்டியுள்ளார்கள். க்ளைமேக்ஸில் மட்டுமே எங்கோ ஒரு லிங்க் மிஸ்ஸாகியிருக்கிறது. நல்ல ரோட் மூவி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்.
What do women and police cars have in common? They both make a lot of noise to let you know they are coming


Post a Comment

No comments: