நீங்க பாட்டுக்கு பேலியோவுக்கு போயிட்டீங்க.. எங்களுக்குத்தான் சாப்பாட்டுக்கடை போஸ்ட் இல்லாம போயிருச்சுன்னு நிறைய பேர் என்னை நேரில் சந்திக்கும் போது கேட்பார்கள். என்னதான் பேலியோவில் இருந்தாலும் அவ்வப்போது சீட்டிங் டேயில் புல் கட்டு கட்டுவது இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிற நிலையில் சமீபத்தில் போன உணவகம் தான் இந்த மதுரை சாரதா மெஸ்.
முன்பு திருவல்லிக்கேணியில் இருந்த இந்த உணவகத்தில் கோலாவும் உருண்டையும், அயிரை மீன் குழம்பும், ஸ்பெஷல். பின்பு அவ்விடத்தை காலி செய்ய சொன்னதினால் சில பல வருடங்கள் இல்லாமல் இப்போது சி.ஐ.டி. நகர் மேயர் துரைசாமி அலுவகத்திற்கு எதிரே சின்னக்கடையாய் மீண்டும் அதே மதுரை சாரதா மெஸ். வழக்கம் போல அவர்களது ஸ்பெஷலான கோலாவையும், மீல்சையும் ஆர்டர் செய்தாகிவிட்டது. சாப்பாட்டிற்கு சிக்கன், மீன் குழம்பு மட்டுமே. மட்டன் குழம்பெல்லாம் இல்லை. பட்.. வீட்டுச் சாப்பாடு போல அருமையான சாப்பாடு, மட்டன் சுக்கா நல்ல இளம் கறியாய் சமைத்து கொண்டு வந்தார்கள். கோலா உருண்டை எல்லா கடைகளை விட கொஞ்சம் பெருசாகவே இருந்தது. கிரிஸ்பியாய் இருந்தாலும், சூடு இல்லாததால் எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை. மற்றபடி ஒரு டீசண்ட் மீல்ஸ்.. மட்டன் சுக்கா, கோலா உருண்டையோடு, வெறும் 180 ரூபாய்க்கு. குட் டீல். இவர்களுடய ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பை இன்னும் ட்ரை பண்ணலை..
Post a Comment
No comments:
Post a Comment