Posts

Showing posts from April, 2016

செய்வீர்களா தி.மு.க தலைவரே?

இத்தனை நாள் மீடியாவின் முன்னால் கண்காணாமல் இருந்த தயாநிதி மாறன் தற்போது மீண்டும் தி.மு.க தலைவருடன்.  அதைப் பார்த்திலிருந்து மீடியா, இண்டெர்நெட், கேபிள் டிவி, என பல துறைகளில் உள்ள தொழிலதிபர்கள், லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்களால் நிச்சாயம் இம்முறை கழக ஆட்சி வந்தால் அம்மாதிரியான இடர்பாடுகள் கொடுக்காது. சுதந்திரமாக தொழில் செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறியிருந்தாலும், இத்தனை நாள் இல்லாத ஆள் கிடைக்கிற கேப்பில் கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டிருப்பது. கண்கள் பனித்து, இதயம் இனித்து போல ஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் மாறன் குடும்பத்தின் வியாபாரம் ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு இருந்தது என அனுபவித்தவர்கள் அவர்கள். இதை வெளிப்படையாகவே சொல்லி அதற்காகவே தி.மு.கவிற்கு ஓட்டுப் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அவர்களின் ஆளூமையில்லையா என்று கேட்டீர்களானால் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் தொழில் செய்கிற்வரக்ளுக்கு தொல்லை இல்லை. என்பது உண்மை. ...

கொத்து பரோட்டா- 25/04/16

Image
பெங்களூரில் தமிழ் நூலகம் ஒன்றை காலி செய்யச் சொல்லி ப்ரச்சனையாகி, அந்நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் நடு ரோட்டில் வீசியெறிந்த கொடுமை நடந்தேறியது. செய்தி கேள்விபட்ட நடுநிலையாளர்கள், தமிழார்வலர்கள், பேஸ்புக், ட்விட்டர் இணைய ஆட்கள் கொதிதெழுந்து தமிழர்கள்மீதான வெறியாட்டம், அது இது என்று ஏற்றிவிட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் தேர்தல் சமயமாய் இல்லாவிட்டால் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கிறேன் என்று அரசியல் பிரச்சனையாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள். எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் அதை குப்பையாய் வீதியில் கொட்டுவது மகா கொடுமைதான். அது தமிழ் புத்தகமாய் இருந்துவிட்டால் தேவையில்லாத மொழிப் பிரச்சனையாய், தமிழர்களுக்கு எதிரான ப்ரச்சனையாய் புரிந்து கொள்வது அபத்தத்தின் உச்சம்.  @@@@@@@@@@@@@@@@@@@@ பேலியோவை பேணுகிறவன், அதன் பயனை அடைந்திருக்கிறவன் என்கிற முறையிலும், பேலியோ டயட் பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். நல்ல டீசெண்டான கூட்டம். மருத்துவர்கள் புடை சூழ கேள்வி பதில் செஷனோடு சிறப்பாக நடந்தது. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள்...

கொத்து பரோட்டா - 18/04/16

Image
தெறி படத்தை பாலிமர் டிவி ஓனர் சென்னையிலிருந்து திருட்டி விடியோ எடுக்கச் சொன்னதாக சொல்லி கோவையில் ஒரு தியேட்டரில் அவர்களது கேமராமேன் படமெடுத்ததாகவும், அதை ரசிகர்கள் கையும் களவுமாய் பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்ததாகவும், இது போல பல வருடங்களாய் பாலிமர் சேனல் செய்து கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார் தாணு. அதை சன் நியூஸ் தொலைக்காட்சி ம்ட்டும் மறுக்கா.. மறுக்கா ஒளிபரப்பியது. வெளியே விசாரித்த போது அவர்கள் தியேட்டர்களில் அரசு அனுமதித்த விலைக்கு மேலே விற்றதை வீடியோ எடுக்க போனதால் நடந்த பிரச்சனை என்றும். பொய்க் குற்றச்சாட்டில் போலீஸார் வீடியோ கேமராவை செக் செய்த போது அதில் படம் ஏதும் இல்லையென்றும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மீடியாவும் பெரிது படுத்தவேயில்லை. ஆனால் சமீபகாலமாய் பாலிமர் டிவி வளர்ச்சி சன் டிவியின் கண்களை உறுத்த, அவர்களை மட்டம் தட்ட செய்த சூழ்ச்சியாகவே தெரிகிறது. இதற்கு பலி கடா தயாரிப்பாளர் தாணு. உடந்தை தயாரிப்பாளர் சங்கம். எவனாச்சும் கையில கேமரா வச்சிட்டு பப்ளிக்கா திருட்டு வீடியோ எடுப்பாங்களா யுவர் ஆனர்.? திரும்பத் திரும்பச் சொன்னா பொய் உண்மையாகிருமா.. இன்னுமா ...

சாப்பாட்டுக்கடை- தட்டுக்கடை போளி ஸ்டால்

Image
போளி என்றால் நிறைய பேருக்கு மேற்கு மாம்பலம் தான் நியாபகத்துக்கு வரும். போளிக்கான நிறைய கடைகள் அங்கே பிரபல்யம். அதே போல இந்த தட்டுக்கடையும். தி.நகர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சப்வேயில் ஏறியவுடன் வலது பக்கத்தில் உள்ள கோயிலுக்கு முன் அமைந்த சிறு கடை. ஸ்வீட், மற்றும் கார வகைகள் காலையில் போட்டிருப்பார்கள். மாலை வேலையில் வடை, போண்டா, மசாலா போண்டா, தேங்காய் போளி, பருப்பு போளி, மசாலா போளி என வரிசைக் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சுடச்சுட போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும் கடை. டிமாண்டுக்கு ஏற்றார்ப் போல ஐயிட்டங்களை போட ஆர்மபிப்பார்கள் பெரும்பாலும் இரவு எட்டு  மணிக்குள் எல்லா போண்டா, போளி வகைகள் காலியாகிவிடும். எனக்கு இங்கே பிடித்தது தேங்காய் மற்றும் மசாலா போளி வகைகள். சைசில் சின்னதாய் இருந்தாலும், தேங்காயை வெல்ல பாகுடன் ஊற வைத்து அதை சூடான போளியாய் சாப்பிடும் போது தேங்காயும், வெல்லப்பாகின் ஜூஸும், நெய் வாசனையும் வாவ்வ்.. வாவ்வ்..  

கொத்து பரோட்டா - 11/04/16

Image
தேர்தல் பிரச்சாரம்  அபீஷியலாய் ஆரம்பிப்பதற்கு முன்பே டிவிப் பேட்டிகள் களை கட்ட தொடங்கிவிட்டது. நேரடியாய் ...த்தா.. ங்ம்மா என்றுதான் திட்டவில்லை. அப்படியே திட்டிவிட்டு, உடனடியாய் மன்னிப்பு கேட்பது பேஷனாகிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும், முடிந்ததும் ஈஷிக் கொள்வதும் காமன் மேன் நமக்கு மறந்து போகாமல் இருக்கலாம். இவர்களுக்கு அடுத்த நாளே மறந்து போய்விடுகிறது. சரி திட்டியாச்சு, மன்னிப்பும் கேட்டாச்சு. எதிர் பக்கத்திலிருந்து கவுன்டர் வரவேயில்லையே என்ற கவலை வேறு. அதற்காக என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தொண்டர்களை ஏதும் செய்தால் சும்மா விடமாட்டேன் என்று நான் ரவுடி,.. நான் ரவுடி என்று கூவிக் கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலு போல வைகோ இருப்பதை பார்க்கும் போது பாவமாய் இருக்கிறது.

கொத்து பரோட்டா -4/4/16

Image
சென்ற வாரம்  நண்பர் சங்கருடன் அவரின் கர்நாடகா ஸ்டேட் வண்டியில் வளசரவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது 80 அடி ரோட்டின் முனையில் போலீஸாரால் நிறுத்தப்பட்டோம். உள்ள லைட்ட போடுங்க, டிக்கிய திறங்க என இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் எஸ்.ஐயும், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் சில பல போலீஸ் “உயர் அதிகாரிகள்” செக் செய்தனர். ஒரு மினி டிவியை வைத்துக் கொண்டு, ஒரு  அவர்களின் செயல்பாடுகளை படமெடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வண்டியில் செக் செய்ய ஏதுமில்லாததால் அனுப்பிவிட்டனர். நீங்க கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன்ல வர்றதுனால தீவிர் செக்கிங்  என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து என் காரில் அதே வழியில் திரும்பப் போன போது, அங்கே ஈ காக்கா இல்லை. தேர்தலுக்காக, தீவிர செக்கிங் என டிவியில் போடுவதற்காகவும் தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத் தூவ நடத்த ஏற்பாடு போல. விளங்கிரும் @@@@@@@@@@@@@@@@@@@@@