கொத்து பரோட்டா - 11/04/16
தேர்தல் பிரச்சாரம் அபீஷியலாய் ஆரம்பிப்பதற்கு முன்பே டிவிப் பேட்டிகள் களை கட்ட தொடங்கிவிட்டது. நேரடியாய் ...த்தா.. ங்ம்மா என்றுதான் திட்டவில்லை. அப்படியே திட்டிவிட்டு, உடனடியாய் மன்னிப்பு கேட்பது பேஷனாகிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும், முடிந்ததும் ஈஷிக் கொள்வதும் காமன் மேன் நமக்கு மறந்து போகாமல் இருக்கலாம். இவர்களுக்கு அடுத்த நாளே மறந்து போய்விடுகிறது. சரி திட்டியாச்சு, மன்னிப்பும் கேட்டாச்சு. எதிர் பக்கத்திலிருந்து கவுன்டர் வரவேயில்லையே என்ற கவலை வேறு. அதற்காக என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தொண்டர்களை ஏதும் செய்தால் சும்மா விடமாட்டேன் என்று நான் ரவுடி,.. நான் ரவுடி என்று கூவிக் கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலு போல வைகோ இருப்பதை பார்க்கும் போது பாவமாய் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sex British Job
நெட்ப்ளிக்ஸில் சமீபத்தில் பார்த்த டாக்குமெண்டரி. இங்கிலாந்தில் உள்ள இல்லீகல் சைனீஸ் பெண்கள் நடத்தும் ப்ராத்தல்களைப் பற்றிய ஒரு லைவ் டாக்குமெண்டரி. இப்படத்தை எடுத்தவர் ஒரு பத்திரிக்கையாளர். தன் கண்ணாடியில் ஸ்பை கேமை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இந்த பிராத்தல்களை படம் பிடிப்பதற்காக வீட்டு வேலைக்காக செல்கிறார். அங்கிருக்கும் பெண்களிடம் நட்பு ஆரம்பித்து வேறொரு ப்ராத்தல் ஓனரிடம் செல்கிறார். அங்கே அந்த சைனா பெண் எப்படி தொழில் செய்கிறார்? அவரிடம் வரும் கஸ்டமர்களின் நடவடிக்கை. பெண்களின் கற்பனை மற்றும் எதிர்காலம் குறித்த கனவுகள்.மெல்ல வீட்டு வேலை மட்டுமே செய்வேன் என்ற இந்த பத்திரிக்கையாளரை பேசி டார்ச்சர் செய்து விபசாரம் செய்ய தூண்டுமிடம். அதனால் அவர் அடையும் வேதனை என போகிறது படம். ஒரு நிமிடம் கூட அங்கிங்கு கவனம் சிதறச் செய்யாத டாக்குமெண்டரி. இப்படத்தின் க்ளைமேக்ஸ் கிட்டத்தட்ட தமிழ் பட போல இருந்ததை மறுக்க முடியாது. டாக்குமெண்டரிக்கு ஏதுடா க்ளைமேக்ஸ் என்று கேட்டீர்களானால்.. ஓகே இந்நிஜக்கதைக்கான முடிவுக்காட்சி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
what a experience.. dont miss to watch it in 3D #JungleBook
Nice trailer bro all the best @Udhaystalin @Music_Santhosh @Ahmed_filmmaker
நல்ல வேளை என் தாய் உயிரோடு இல்லை என் படத்தை செருப்பால் அடிப்பதை பார்க்க”- வைகோ “அவங்க தான் அடிச்சிட்டு மன்னிப்பு கேட்டுட்டாங்களே யுவர் ஆனர்”
intresting and raw documentary #SexBritishjob
@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@
பாரதிராஜாவும், பாலாவும் குற்றப்பரம்பரைக்காக சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது இல்லை. இரண்டு எழுத்தாளர்களின் ஈகோ தான் இங்கே இவர்களின் சண்டையாய் முடிந்திருக்கிறது. ஆளாளுக்கு ரெண்டு பேரையும் ஏற்றி விட்டு.. நீதான் நம்ம சாதிக்கே தலைவன்.. உன்னை விட்டா எவனும் எடுக்க முடியாது பில்டப் ஏற்றி விட்ட காரணத்தினால் அவரவர்கள் மீதான அதீத நம்பிக்கை மோசமான பேச்சில் முடிந்திருக்கிறது. குற்றப்பரம்பரை என்பது தேவராய் இருக்கும் எழுத்தாளர் எழுதிய கதையல்ல.. அது ஒரு வரலாறு. அதை எவன் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று பாலா சொன்னதில் தவறேயில்லை. ஆனால் ப்ரஸ் மீட்டை முடிக்கும் போது அவர் சாக்குரதை உங்களுக்கு நல்லதில்லைன்னு பேசினது எல்லாம் தமிழ் சினிமா வில்லன் ரேஞ்சுக்கு இருக்கு. அது ஓவராத்தான் தெரியுது. ஒரே ஒரு விஷயம் பாரதிராஜா குற்றப்பரம்பரைய ஆரம்பிச்சா அவருக்கு பண்ட் பண்ணி படமெடுக்க யார் இருக்காங்கிறது பெரிய கேள்வி..பூஜையெல்லாம் போட்டுட்டாங்களேன்னு கேட்டீங்கன்னா.. சரி விடுங்க.. பூஜை தானே.. அதே நேரத்தில பாலா ஆரியா, விஷால்னு ஸ்டார்களை வைத்து லைக்கா மூலமாகவோ அல்லது பைனான்ஸியர்கள் மூலமாகவோ படமெடுத்துவிடக்கூடிய சாத்தியகூறுகள் அதிகம். எங்கே தமிழ்னா கலைஞர் ந்ம்மளைத் தவிர வேறாரும் வந்திரக்கூடாதுங்கிறதுல பிடிமானமா இருக்காரோ அது போல மண், மண்ணின் வாசம் போன்ற விஷயங்களும் நாம தான் ஐகான் என்ற பெயர் போய்விடக்கூடிய அபாயம் இருப்பதால் முன்னாடியே பூஜை போட்டிருக்கிறார் இமையம். பட்.. கேஆர் சொன்னப்பல ரெண்டு பேரும் தான் எடுக்கட்டுமே பாத்து தொலைக்க நாம இருக்கிறப்போ இவங்களுக்கு என்ன கவலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிய வீடியோ
புதிய வீடியோ
ஜங்கிள் புக்
கதையாய், ஏற்கனவே கார்டூனாய் என பல விதத்தில் கேட்டு பார்த்து வளர்ந்த கதைதான். இம்முறை 3டியில் அபாரமான அனிமேஷனோடு, ஒரு விஷுவல் ட்ரீட்டாய் அமைந்திருக்கிறது. ஆரம்பக்காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை இம்மாதிரியான கதைகளில் வரும் டெம்ப்ளேட் திரைக்கதை வர்ஷன் தான் என்றாலும், விஷுவலாகவும், மெளக்லியாய் வரும் சிறுவனின் முகத்தில் தெரியும் நைவ் இன்னொசென்சும் படத்திற்கு பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது. அதற்கு பிறகு பில்முர்ரே, பென்கிங்கிஸ்லியின் குரல் நடிப்பு அட்டகாசம். கிட்டத்தட்ட நம்ம சிங்கம்புலி ரேஞ்சுக்கு பப்லூ கரடிக்கு அவர் பேசியிருக்கும் வசனங்களின் மாடுலேஷன் வாவ்.. அதே போல ஷேர்கானுக்கு பேசியிருக்கும் குரலில் இருக்கும் கோபம், ஆகங்காரம், ஆளுமை எல்லாமே பர்பெக்ட்.. குழந்தைகளுடன் நாம் மீண்டும் ஒரு முறை தியேட்டரில் பார்க்கும் போது அவர்களுக்கு புதிய அனுபவமாய் இருக்கும் அதே நேரத்தில் நம்முடைய குழந்தை பருவத்திற்கு ஒரு நடை போய்விட்டு வந்த திருப்தியும் கிடைக்கும் .. டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
The biggest difference between men and women is what comes to mind when the word 'Facial' is used.
கேபிள் சங்கர்
அடல்ட் கார்னர்
The biggest difference between men and women is what comes to mind when the word 'Facial' is used.
கேபிள் சங்கர்
Comments