Thottal Thodarum

Apr 25, 2016

கொத்து பரோட்டா- 25/04/16

பெங்களூரில் தமிழ் நூலகம் ஒன்றை காலி செய்யச் சொல்லி ப்ரச்சனையாகி, அந்நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் நடு ரோட்டில் வீசியெறிந்த கொடுமை நடந்தேறியது. செய்தி கேள்விபட்ட நடுநிலையாளர்கள், தமிழார்வலர்கள், பேஸ்புக், ட்விட்டர் இணைய ஆட்கள் கொதிதெழுந்து தமிழர்கள்மீதான வெறியாட்டம், அது இது என்று ஏற்றிவிட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் தேர்தல் சமயமாய் இல்லாவிட்டால் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கிறேன் என்று அரசியல் பிரச்சனையாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள். எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் அதை குப்பையாய் வீதியில் கொட்டுவது மகா கொடுமைதான். அது தமிழ் புத்தகமாய் இருந்துவிட்டால் தேவையில்லாத மொழிப் பிரச்சனையாய், தமிழர்களுக்கு எதிரான ப்ரச்சனையாய் புரிந்து கொள்வது அபத்தத்தின் உச்சம். 
@@@@@@@@@@@@@@@@@@@@
பேலியோவை பேணுகிறவன், அதன் பயனை அடைந்திருக்கிறவன் என்கிற முறையிலும், பேலியோ டயட் பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். நல்ல டீசெண்டான கூட்டம். மருத்துவர்கள் புடை சூழ கேள்வி பதில் செஷனோடு சிறப்பாக நடந்தது. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் அதிகம் இருந்தவர்கள் இருந்த கூட்டமானதால் அதிகம் அட்வைஸ்களாகவும், மெடிக்கல் டெர்ம்ஸுகளாய் கடந்த கூட்டத்தை அமைதியாய் கவனித்தார்கள். அல்லது கவனித்த மாதிரி நடித்தார்கள். டாக்டர் ஹ்ரிஹரன்,  டாக்டர் சுமதி ராஜா  டாக்டர் புருனோ, டாக்டர் ராஜா ஆகியோரின் இயல்பான விளக்கங்கள் என பயனுள்ள விழாவாக அமைந்தது.  டாக்டர் ஹரிஹரனின் பாடி லேங்குவேஜ், பேச்சு எல்லாம் விசு படத்தில் ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்த குரியகோஸ் ரங்காவைப் போல எனக்கு மட்டும் தெரிந்தது. அதை அவரிடம் சொன்னேன். அவருக்கு குரியகோஸ் ரங்காவை தெரிந்திருக்கவில்லை. அரோக்கியம் நல்வாழ்வு குழுவினரின் வாலண்டியர்களின் கட்டுக்கோப்பான ஏற்பாடுகள், அமைதி. பதில் சொன்ன விதம் இப்படி எல்லாமே அதீத நேர்கோட்டில் காணப்பட்டது. விட்டமின் ”டி”க்காக மதிய வெய்யிலில் நிற்பது கட்டாயம் என்றவர்களிடம் மத்யானம் அரை மணி நேரம் வெய்யில் நிற்க அனுமதி கொடுக்கிற தேர்தல் அறிக்கை கொடுக்கிறவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும் என்று ஆரம்பித்து, அங்கே உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் அலப்பரை செய்தது நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல கேள்வி பதில் செஷனில் எனக்கு இருந்த சில பிரச்சனைகளைப் பற்றி பல முறை போனில் ஷங்கர்ஜியிடமோ, அல்லது டாக்டர் ப்ரூனோவிடமோ கன்சல்ட் செய்து கொண்டிருந்தாலும், அதை பப்ளிக்காக கேட்டது என்னைப் போல பல பேருக்கு இம்மாதிரி பிரச்சனைகள் இருக்கலாம் அதை வெளிக் கொண்டு வர, ஆனால் அதை ஜஸ்ட்லைக்தட், நீங்க புல் பேலியோ இல்லை என்று ஜோக்காய் மறுத்தலிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அப்படிப்பட்ட பதில் அப்ப நடுவுல கொஞம் அங்க இங்க டயட்ட விட்டோம்னா இந்த மாதிரியான ப்ராப்ளம் எல்லாம் வருமான்னு சந்தேகம் நிறைய பேருக்கு வர வாய்பிருக்கிறது. பத்ரி கிட்டத்தட்ட பேலியோவை இக்குழுவினர் மதம் போல பாவிக்கிறார்கள் என்று ஆரம்பித்து, அதை பாஸிட்டிவாக பேசினார். ஷங்கர்ஜி வேறு தமிழில் மற்றவர்கள் சொன்னதையே ட்விட்டர் பாணியில் மீண்டும் சுருங்க தமிழிலேயே விளக்கியது எல்லாம் கொஞ்சம் மத விழாப் போல இருந்ததை மறுக்க முடியாது. 
@@@@@@@@@@@@@@@@@@@
வெற்றிவேல்
சசிகுமாரின் படம். தாரை தப்பட்டையில் கீழே விழுந்தவர் உடனடியாய் ஒரு படத்தை ஆரம்பித்து எழ முயற்சித்திருக்கிறார். சேஃப்பாக  அவருடய டெம்ப்ளேட் நட்பு, ஜாதி, வகையறாக்கள் கலந்த கதையில் தேவர்மகன் லவ் ட்ராக்கை உட்டாலக்கடி அடித்து, நண்பருக்கு கல்யாணம் செய்வதற்கு பதிலாய் சொந்த தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க போராடுகிறார். ஏற்கனவே பார்த்து சலித்த பல படங்களின் கலவையாய் படம் இருப்பதால், அடுத்தடுத்த காட்சிகள் ப்ரெடிக்டபிளாய் இருப்பது சோகம். அதுவும் க்ளைமேக்ஸ் எல்லாம் ரொம்பவே நாடகத்தனம். எதையும் தெளிவாய் முடிவெடுக்கத் தெரியாத ஊர் தலைவராய் பிரபு. ஆங்காங்கே கர்ஜித்து பேசுவதைத் தவிர ந்த்திங் ஸ்பெஷல். மியா ஜார்ஜின் மலையாளம் க்யூட். சசி குமார் கல்யாணம் செய்து கொண்டு வந்துவுடன் அவளை மருமகளாய் ஏற்கும் காட்சி செம்ம.. மத்தபடி.. ஓ........க்க்க்க்க்க்க்கே.. படம். தான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிய வீடியோ
@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பெங்களூர் தமிழ் நூலக அழிப்பு விவகாரம் ரியல் எஸ்டேட் மேட்டர் போல தெரிகிறது. அதற்கு தமிழழிப்பு என்று ஏற்றிவிட்டு மொழி பிரச்சனையாக்க வேண்டாம்

ம.ந.கூட்டணிக்கு ஆதரவு வாபஸ் -ஆதித்தமிழர் கட்சி - எங்கிருந்துடா வர்றீங்க.. புரியவேயில்லையே அவ்வ்வ்

அம்மாவே பரவாயில்லை ஆட்சிக்கு அப்புறம் தான் நான். அய்யா.. எல்லா தொதியிலேயும் நான்”னு சொல்றாரு‪#‎மம்மிஎபெக்ட்‬

all the best @RSeanRoldan different and cult songs.. in ‪#‎jokker‬

நேற்றிரவு கே.டிவியில் மகாநதி -என்ன ஒரு அருமையான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். ஐ மிஸ் ஹிம்.

சின்னக்கல்லு பெத்த லாபம்னு ஆரம்பிச்ச எம்.ஜியெல்லாம் பெத்த கல்லு சின்ன லாபம் கூட லேதுன்னு ஆயிருச்சு.
@@@@@@@@@@@@@@@@@@
தரகர்கள் கையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் தமிழ் ஹிந்துவில் வெளிவந்த கட்டுரையில் என் பேட்டி.
எது சரியான வியாபாரம்?
இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் வியாபார முறையைச் சீர்திருத்தம் செய்யாமல் இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியாது என்கிறார் ‘சினிமா வியாபாரம்’உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.
தற்போது திரையரங்க உரிமையாளர்கள் பெரிய படங்களை எம்.ஜி. கொடுத்து(மினிமம் கியாரண்டி) வாங்கி வெளியிடத் தயங்குவதற்கு காரணம்; எத்தனை பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குமேல் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்கமுடியாத சூழ்நிலை இருப்பதுதான். மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரிய படத் தயாரிப்பாளர்கள் கேட்கும் முன்பணத்தை, பத்து நாட்கள் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்றாலும் எடுக்கமுடியாது என்பதுதான் தற்போதைய வியாபார யதார்த்தம். ஆனால் தயாரிப்பாளர்கள் ப்ளாட் ரேட் என்ற மாயை பத்து நாட்களுக்குமேல் நீடிப்பதாக நினைத்துக்கொண்டு, படம் ரூ.50 கோடி வசூல் ரூ.100 கோடி வசூல் என்று ஊக அடிப்படையில் அறிக்கை வெளியீட்டு போலியாக வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். இதை உண்மை என்று நம்பும் பெரிய ஹீரோக்கள், தங்களுக்கு ரூ.50 கோடி நூறுகோடி மார்க்கெட் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தங்களது சம்பளத்தை ரூ.25 கோடி ரூ.30 கோடி என்று நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இத்தனை சம்பளம் கொடுக்க முடியாமல்போனதால்தான் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டனர். இதனால்தான் ஹீரோக்களே சொந்தமாக படநிறுவனம் தொடங்கி, தங்கள் படங்களை பினாமி தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.” என்று கூறும் கேபிள் சங்கர், ப்ளைன் டேர்ம்ஸ் எனப்படும் விகிதாசார அடிப்படையில் படங்களை விநியோகம் செய்தால் திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்று ரசிகன் பாக்கெட்டிலிருந்து பணத்தை திருட வேண்டிய அவசியமே இருக்காது. இதை மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் திரையரங்குகள் சரியாக செய்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.
இந்தியா முழுவதும் ஒரே முறை
மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் தியேட்டர்கள் 120 ரூபாய்க்கு மேலே டிக்கெட் விலையை ஏற்றி விற்பதில்லை. அவர்களது லாபத்தின் முக்கிய பகுதி என்பது கேண்டீன் மற்றும் பார்க்கிங் வியாபாரத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனால் பெரிய படங்களை அவர்கள் 50:50 என்ற விகிதச்சாரத்தில் திரையரங்கு உரிமையாளரும் பட உரிமையைப்பெற்றவரும் வசூலை பிரித்துக்கொள்ளும் முறையில் படங்களைத் திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இரண்டு வாரங்கள் தாண்டி படங்கள் ஓட ஆரம்பித்தால், வசூலில் 30 சதவிகிதம் திரையரங்கிற்கும் 70 சதவிகிதம் பட உரிமையாளருக்கும் என்று கொடுத்து விடுகிறார்கள். மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளின் இந்த வியாபாரமுறை இந்தியா முழுவதும் ஓரே சீராக பின்பற்றப்படுகிறது.
எனவேதான் மல்டி ப்ளெக்ஸ் அல்லாத திரையரங்க உரிமையாளர்களும் இதேபோல் வசூலைப் பிரித்துக்கொள்ளும்(ப்ளைன் டேர்ம்ஸ் முறை) விகிதாச்சார முறையில் படங்களை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று பெரிய படங்களின் தயாரிப்பாளர்களைப் பார்த்து கேட்கிறார்கள். மினிமம் கியாரண்டியில் படத்துக்கு பணத்தைக்கொடுத்து வாங்கும்போது போட்ட பணத்தை எடுக்க அதிக விலைக்கு டிக்கெட் விற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரேநேரத்தில் தயாராகும் ஒரு படம் தமிழ்நாட்டில் தோல்வியும் ஆந்திராவில் வெற்றியும் அடைவதற்கு அங்கே ப்ளைன் டேர்ம்ஸ் வியாபார முறை நடைமுறையில் இருப்பதுதான் காரணம்” என்கிறார் கேபிள் சங்கர். சமீபத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ‘தோழா’ படத்தின் ஆந்திர வியாபார வெற்றியும் இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why is being in the military like a blow-job? The closer you get to discharge, the better you feel
கேபிள் சங்கர்


Post a Comment

No comments: