செய்வீர்களா தி.மு.க தலைவரே?
இத்தனை நாள் மீடியாவின் முன்னால் கண்காணாமல் இருந்த தயாநிதி மாறன் தற்போது மீண்டும் தி.மு.க தலைவருடன். அதைப் பார்த்திலிருந்து மீடியா, இண்டெர்நெட், கேபிள் டிவி, என பல துறைகளில் உள்ள தொழிலதிபர்கள், லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்களால் நிச்சாயம் இம்முறை கழக ஆட்சி வந்தால் அம்மாதிரியான இடர்பாடுகள் கொடுக்காது. சுதந்திரமாக தொழில் செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறியிருந்தாலும், இத்தனை நாள் இல்லாத ஆள் கிடைக்கிற கேப்பில் கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டிருப்பது. கண்கள் பனித்து, இதயம் இனித்து போல ஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் மாறன் குடும்பத்தின் வியாபாரம் ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு இருந்தது என அனுபவித்தவர்கள் அவர்கள். இதை வெளிப்படையாகவே சொல்லி அதற்காகவே தி.மு.கவிற்கு ஓட்டுப் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அவர்களின் ஆளூமையில்லையா என்று கேட்டீர்களானால் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் தொழில் செய்கிற்வரக்ளுக்கு தொல்லை இல்லை. என்பது உண்மை.
2ஜியிலிருந்து பல நெகட்டிவ் தி.மு.க பரப்புரைக்களுக்கு காரணமே இவர்கள் தான். அப்படியிருக்க, கண்கள் பனித்து, இதயம் கனிந்ததை ஒட்டி ஒன்று சேர்ந்தார்கள். அப்படி அவர்கள் சேர்ந்த பின் என்ன நடந்து என்று எல்லோருக்கும் தெரியும். எனவே மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க தலைமை எக்காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள குடும்ப வியாபாரிகளால் மற்ற தொழில்களுக்கு பிரச்சனை இருக்காது. சுதந்திரமாய் இருக்கலாமென்ற வெளிப்படையான அறிவிப்பு கொடுப்பீர்களா?
Comments
that is good bro...
http://rasarasachozhan.striveblue.com/archives/423
Pity on you..,