கொத்து பரோட்டா - 30/05/16
கேட்டால் கிடைக்கும் மெட்ப்ளஸில் மருந்து வாங்க சென்றிருந்தேன். வலது பக்கத்தில் ஒரு விளம்பரம் போட்டிருந்தார்கள். அதில் 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 20 ரூபாய் மதிப்புள்ள டூத் ப்ரஷ் இலவசம் என. அது போல ஓவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு பொருட்களை பட்டியலிட்டிருந்தார்கள். என் மனதில் என்னவோ இதில் ஒரு டகால்டி வேலையிருக்கிறது என்று தோன்றியது. எனது பில் 172 ரூபாய். சரி.. என் போன் நம்பர் கொடுத்தால் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் தருவதாய் சொன்னார்.. இல்லையே போன் நம்பர் இல்லாமலேயே உங்க மருந்தகத்தில் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் உண்டே என்று கேட்டதற்கு யோசித்து நம்பர் இருந்தா கொடுங்களேன் என்றார். உங்க டேட்டா பேஸுல நம்பர் ஏத்துறதுக்கும் டிஸ்கவுண்டுக்கும் என்ன சம்பந்தம் என முனகிக் கொண்டே நம்பர் அளித்தேன். மருந்தையும், பில்லையும் கொடுத்தவரிடம் அந்த இலவச விளம்பரத்தைக் காட்டி அந்த பொருட்களை கொடுங்கள் என்றேன். அது டிஸ்கவுண்ட் பெற்றவர்களுக்கு கிடையாது என்றார்கள். அப்படியென்றால் இந்த விளம்பரத்திலேயே அதை போட்டிருக்கணும் இல்லையா? என்று கேட்டபோது அது வரை மொபைலில் கேம் ஆடிக் கொண்டிருந்த அந்த கடை இன்சார்ஜ் அதெல்லாம் தர முட...