Thottal Thodarum

May 9, 2016

கொத்து பரோட்டா -09/05/16

இசை என்பதற்கான விருது என்பது பாடலுக்கு தனியாக, பின்னணியிசைக்கு தனியாய் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இளையராஜா தேசிய  விருதை வாங்க மறுத்திருக்கிறார். அதற்காக கங்கைஅமரனின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், என்னை போன்ற இளையராஜா ஃபேன்களுக்கு மகிழ்ச்சியே.. அந்த விருதுக்கான எந்த ஒரு தகுதியும் இல்லாத அப்படத்திற்கு விருதை கொடுப்பதும் அதை வாங்குவதும் மகா கேவலம். எனவே நாக்கு சால சந்தோஷம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
24
சூர்யா 3 வேடங்கள், டைம் மிஷின் பற்றிய படம். ரஹ்மானின் அற்புதமான ரெண்டு பாடல்கள். சமந்தா, நித்யா மேனன் என அழகு பெண்கள், தமிழில் மிஸ்ஸாகி, தெலுங்கில் வெற்றி கொடி நாட்டி மீண்டும் தமிழுக்கே வந்திருக்கும் விக்ரம் குமார், பெரிய பட்ஜெட் என எல்லாவிதமான எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றேன். அற்புதமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஆர்ட் டைரக்‌ஷன், சின்னச் சின்ன ஷாட்களில் கதை ஆரம்பித்த விதம்,  கழுகின் ரக்கையிலிருந்து கிளம்பும் மாற்றம். ஆத்ரேயாவின் இண்ட்ரோடக்‌ஷன். அபூர்வ சகோதரர்களை நினைவுப்படுத்தும் ஓப்பனிங் காட்சி என சுவாரஸ்யமாய்த்தான் ஆரம்பித்தது. பின்பு இக்கால காதல் ஹீரோ மணியாக புது சூர்யா. அவருக்கும் டைம் மிஷின் க்ளாக்குக்குமிடையே நடக்கும் குட்டி, குட்டி ஆச்சர்ய விஷுவல்கள், அதை பயன்படுத்தி காதலிக்க வைக்க போராடும் காட்சிகள் எல்லாம் நகாசு. இண்டர்வெல் ப்ளாக் எல்லாம் பட்டாசாய் போய்க் கொண்டிருந்த படத்தை இரண்டாம் பாதி வந்து மொத்தமாய் கவிழ்த்துவிட்டது. ஹீரோ வில்லன் இருவருக்குமிடையே ஆன கன்பர்ண்டேஷன், பழிவாங்கும் வெறி, அண்ணன் தம்பிக்கிடையே ஆன விரோதத்திற்கான காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள், நிறைய லாஜிக் மீறல்கள். சொதப்பலான காதல் காட்சிகள், சட்டென முடிந்த விறுவிறுப்பு இல்லாத க்ளைமேக்ஸ் ஆகியவை சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் கண்டிராத வி.எப்.எக்ஸ், ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் என டெக்னிக்கலாய் அசத்திய படம் முக்கிய டெக்னிக்கான திரைக்கதையில் வீழ்ந்ததால் படமும்..
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சகாய விலையில் பெண்களுக்கு வழங்கும் அம்மா ஸ்கூட்டருக்கென தனியே “அம்மா பெட்ரோல்” சகாய விலையில் என் ஆட்சியில் தரப்படும் ‪#‎அம்மாஅம்மா‬

வாங்குன காசுக்கு மேலேயே கூவுறீங்களேடா

மீண்டும் என் ஆட்சி மலர்ந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு. நான் அளிக்கும் ஸ்மார்ட் போன் ஆஃப் மூலம் சரக்கு சப்ளை செய்யப்படும் ‪#‎அம்மாஅம்மா‬

அம்மா கைபேசி பெறுகிறவர்கள் பயன் படும் வகையில் இலவச அம்மா நெட்வொர்க் ஆரம்பிக்கப்படும். தமிழகம் முழுவதும விலையில்லா பேச்சு பேசலாம் ‪#‎அம்மாஅம்மா‬

அபூர்வ சகோதரர்கள் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை

நம்மேல் எவ்வளவு மரியாதை இருந்தா இப்படி ஒருதேர்தல் அறிக்கையை வரும். இவங்களுக்கு ஓட்டுப் போட்டா மல்லாக்க படுத்து எச்சி துப்பிக்கிறதுக்கு சமம்

கொஞ்சமாச்சும் சூடு சுரணை இருக்கிறவன்னு காட்டணும்னா.. ஆட்டு மந்தை மாதி்ரி மாத்தி, மாத்தி ஓட்ட குத்தாம இருக்கணும்.

அருமைம்மா., தமிழ்நாட்டை உங்களால மட்டுமே காப்பாத்த முடியும். அதிமுக தேர்தல் அறிக்கை

நம்மளையே பத்து வருஷம் திரும்பிப் பாத்தா மாதிரியான ஒரு பீல் கபாலியில் வரும் பழைய ரஜினியின் ஷாட்.. க்யூட் மேன் ‪#‎கபாலி‬
@@@@@@@@@@@@@@@@@@
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருப்பதாய் அதிமுக ஆதரவாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலவசத்தை எல்லா கட்சிகளும் பெரும்பாலும் தவிர்த்து மக்கள் நல திட்டங்களையே முன் வைத்திருக்கும் வேலையில் ஓட்டுப் போடும் மக்களை இதை விட கேவலமாய் மதித்து, இம்மாதிரியான ஒர் தேர்தல் அறிக்கையை  ஜெயலலிதாவினால் மட்டுமே கொடுக்க முடியும். ஆணவத்தின் உச்சம் இந்த அறிக்கை. இவங்களை விட்டா அவங்க என்று மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டே பழக்கப்பட்ட நம் வீக்னெஸ்ஸை அவர்கள் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். எனவே இம்முறை இவர்கள் இருவரில்லாத வேறு யாராக இருந்தாலும் உங்கள் தொகுதியில் ஆதரவு கொடுங்கள். அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் சமயங்களில் தோற்றுக் கூட போகலாம். ஆனால் மிகக் குறைந்த வாக்கு வித்யாசத்தில் அவர்கள் ஜெயிக்கும் போதும், மூன்றாவது நிலையில் திராவிட கட்சி வாக்காளர்களை விட தனித்தே தெரிய வாய்ப்பிருக்கிறது. அப்படியான சூழலில் எதிர்காலத்தில் திராவிட கட்சிகளுக்கும் ஒர் பயம் வரும். முன்பை விட அதிக ஓட்டு சதவிகிதம் பெற்ற புதுக் கட்சிகளுக்கு இது பெரும் லாபம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A small boy was awoken in the middle of the night by strange noises from his parents’ room, and he decided to investigate. As he entered their bedroom, he was shocked to see his mom and dad shagging for all they were worth. “DAD!” he shouted. “What are you doing?” “It’s ok,” his father replied. “Your mother wants a baby, that’s all.” The small boy, excited at the prospect of a new baby brother, was pleased and went back to bed with a smile on his face. Several weeks later, the little boy was walking past the bathroom and was shocked to discover his mother giving oral gratification to his father. “DAD!” he shouted. “What are you doing now?” “Son, there’s been a change of plan,” his father replied. “Your mother did want a baby, but now she wants a BMW.”

Post a Comment

5 comments:

saravanan selvam said...

ஆரம்பத்தில் நீங்கள் DMK ஆதரவாளர் என்று நினைத்தேன். ஆனால்,நீங்கள் DMK and ADMK க்கு வாக்கு அளிக்காமல் மாற்று கட்சிக்கு வாக்கு அளிக்க சொல்லி நீங்களும் மாற்றத்தை விரும்புகிறவர் என்பதை நிருபித்துவிடீர்.

குரங்குபெடல் said...

24 படத்தை பார்த்து விட்டு . . .

சூர்யா அவர்கள் குடுக்கும் பில்டப்பு பேட்டிகளை படிக்கும் போது செம காமெடியாக உள்ளது . .


படத்தின் வில்லன் பாத்திரம் அவருக்கு பொருந்தாது போனது படத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி

pongalvadai said...

ரொம்ப சிம்பிள் ..ஒருவேளை விந்தியா panel மெம்பரா இருந்து ஜெயாவிற்கு பாரத ரத்னா கொடுத்தால் அம்மையார் ஏற்று கொள்வார்களா,,,,

க கந்தசாமி said...

அமரன் கோபத்தில் நியாயம் இருக்கிறது

தனிமரம் said...

கொத்துப்பரோட்டா அரசியல் தாக்குதல் சூப்பர்!