Posts

Showing posts from June, 2016

கொத்து பரோட்டா - 27/06/16 - இயக்குனன் - உட்தா பஞ்சாப் - மெட்ரோ - இண்டிபெண்டெண்ட்ஸ் டே 2 - அடல்ட் கார்னர்

இண்டிபெண்டென்ஸ் டே 2 போன முறை உலகத்தை அழிக்க வந்த ஏலியன்கள். இருபது வருஷத்துக்கு பொறவு கிட்டத்தட்ட அப்போ தப்ப்பிச்ச ராணியோட தலைமையில் மீண்டும் உலகை அதுவும் குறிப்பா அமெரிக்காவை அழிக்க வந்திருக்க, கோமாவிலிருந்து எழுந்த பழைய அமெரிக்க ப்ரெசிடெண்ட்.. வில்ஸ்மித் போன்ற ஒருவர்.. ஏசியன் மார்கெட்டுக்காக  ஒரு சைனீஸ் பெண், எதிர்காலத்தை கணித்தது போல அமெரிக்கா பெண் ப்ரெசிடெண்ட். என எல்லாம் மசாலாக்களையும் ஒன்றாய் அரைத்து, அத்தனாம் பெரிய ஏலியன் தட்டுக்குள், நான்கைந்து ப்ளைட்டை விட்டு, அவர்களது ப்ளைட்டையே திருடி, ராணியோட ப்ளைட்டிலேர்ந்து அதை வெளிய வர வைச்சு, சுட்டு கொன்னுடுறாங்க. ங்கொய்யால...முடியலைடா.. வலிக்குது. ராணிய வெளிய ஓடி வர வச்சி கொல்லுறதுக்கு எதுக்குடா, பில்டப்பு, ப்ளைட்டு, 3டி, அடுத்த பார்ட் எதையாச்சும் எடுத்து வுட்டீங்க. அவ்வளவுதான் நான் எழுச்சி அடைந்திருவேன். @@@@@@@@@@@@@@@ என் ட்வீட்டிலிருந்து தினத்தந்தி, போன்ற தமிழ் பத்திரிக்கைகளைத் தவிர வேறெந்த ஆங்கில பத்திரிக்கைகளிலும்,, நான்கு பெண்கள் கொலையில் கணவன் தன் பெண்களை தகாத உறவுக்கு முயற்சித்ததாய் செய்தியேயில்லை வரி ஏய்ப்பு ...

கொத்து பரோட்டா - 20/06/16 - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - முத்தின கத்திரிக்காய்- Nani Gentleman- தவமாய் தவமிருந்து - வித்தையடி நானுனக்கு

மதியம் தந்தையர் தினத்து ஸ்பெஷலாய் சேரனின் தவமாய் தவமிருந்து போட்டிருந்தார்கள். ஏற்கனவே பல முறை பார்த்த படமாய் இருந்தாலும், ஜெயா ஹெச்.டி ஆக்கியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பேனாசோனிக் ஹெச்.டிகேமராவில் படமாக்க தமிழின் முதல் படம் எப்படி விஷுவலாய் ஹெச்.டி மாற்றத்தில் இருக்கிறது என்கிற ஆர்வம் வேறு தொற்றிக் கொள்ள மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் மூழ்கியே விட்டேன். பத்து பதினோரு வருடங்களுக்கு முன் தியேட்டரில் பார்த்த போது கிடைத்த அனுபவத்தை விட, இப்போது கிடைக்கும் அனுபவம் இன்னும் அழுத்தமாய் இருந்தது. அப்பா இருந்த போது பார்த்ததுக்கும், இப்போது இல்லாமல் பார்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள்,புரிதல்கள். க்ளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னால் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அப்பா, அம்மாவின் வயதோட்டம், மகனின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், என ஸ்ரீகாந்த் தேவாவின் அருமையான பின்னணியிசையுடன், தொடர்ந்த லெந்தியான மாண்டேஜ் ஷாட்கள். அக்காட்சியின் முடிவில் சரண்யா மிகுந்த மகிழ்ச்சியோடு, தூங்க கண் மூடுவார். நம் மனதில் அவரின் சந்தோஷம் ட்ரான்ஸ்பர் ஆகும். இப்போது வரும் படங்களி...

கொத்து பரோட்டா- 13/06/16 - சாய்ரட்- ஒரு நாள்கூத்து - கன்சூரிங் 2 - கேட்டால் கிடைக்கும்

Image
கேட்டால் கிடைக்கும் சமீப காலமாய் கேட்டால் கிடைக்கும் குறித்து நிறைய ரோட்டரி சங்க கூட்டங்களில் கடந்த  ஒரு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட குழுவில் பேசி விட்டேன். குழுவில் பேசி வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன் பின்னர் நம்மைப் போலவே அக்குழுவில் உள்ள சில பேர் தனியே போராடி வருவதும், அது குறித்து பேசுவது அதிகமாகியிருக்கிறது. நாம கேட்டு என்ன ஆயிடப் போவுது என்ற எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் தழைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமாய் இருக்கிறது. நேற்றிரவு போரூர் வரை ஓலா ஆட்டோவில் சென்றேன். டாக்ஸி வந்தது பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் டிரைவர் பேசிக் கொண்டு வந்தார். இன்னைக்கு கவலைப் பட்டு என்ன சார் பண்றது? ஆரம்ப காலத்துல ஒழுங்கா மீட்டர் போட்டு ஓட்டியிருந்தா இந்த கார், டாக்ஸியெல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது என்றார். மீட்டருக்கு மேல் யாரிடமும் கேட்க முடிவதில்லை. அப்படியே கேட்டால் உடனடியாய் கம்பெனிக்கு போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்து விடுகிறார்கள் என்றார். சந்தோஷமாய் இருந்தது.. மீட்டர் போட்டு, சைதாப்பேட்டையிலிருந்து போரூருக்கு 131 ரூ...

கொத்து பரோட்டா - 06/06/16

பொதிகையில் கருத்துக்களம் எனும் டாக் ஷோவுக்கு கெஸ்டாய் அழைத்திருந்தார்கள். விவாகரத்து அதிகமானதற்கு காரணம் மனமா? பணமா என்ற தலைப்பு. உடன் மனநல மருத்துவர் ஷாலினி சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்தார். நிகழ்ச்சியை நடத்து பாஸ்கர் மிகுந்த அனுபவமுள்ளவர். தூர்தர்ஷனில் இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்துவது என்பது சாதாரன விஷயமில்லை. என்பது அதில் உழல்பவர்களுக்கு நன்கு புரியும். எத்தனையோ சேனல்களில் நான் பங்கெடுத்திருக்கிறேன். தூர்தர்ஷனில் உள்ள ஸ்டூடியோ கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் வெகு சில சேனல்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அநியாயமாய் நம் அரசு சேனலின் ரீச்சை அரசாங்க குளறுபடியால் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.