Thottal Thodarum

Jun 6, 2016

கொத்து பரோட்டா - 06/06/16

பொதிகையில் கருத்துக்களம் எனும் டாக் ஷோவுக்கு கெஸ்டாய் அழைத்திருந்தார்கள். விவாகரத்து அதிகமானதற்கு காரணம் மனமா? பணமா என்ற தலைப்பு. உடன் மனநல மருத்துவர் ஷாலினி சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்தார். நிகழ்ச்சியை நடத்து பாஸ்கர் மிகுந்த அனுபவமுள்ளவர். தூர்தர்ஷனில் இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்துவது என்பது சாதாரன விஷயமில்லை. என்பது அதில் உழல்பவர்களுக்கு நன்கு புரியும். எத்தனையோ சேனல்களில் நான் பங்கெடுத்திருக்கிறேன். தூர்தர்ஷனில் உள்ள ஸ்டூடியோ கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் வெகு சில சேனல்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அநியாயமாய் நம் அரசு சேனலின் ரீச்சை அரசாங்க குளறுபடியால் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@
இறைவியில் தயாரிப்பாளரை தவறாக சித்தரித்ததினால் கார்த்திக் சுப்பாராஜுக்கு ரெட் போட வேண்டுமென்றும், அதற்கு தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் உடன்படுகிறேன் என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜாவின் வாட்ஸ்ப் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. படம் எடுக்கும் போதே அவர்களுக்கும் தெரியும் என்ன மாதிரியான காட்சிகள் வருமென்று. வசூல் ரீதியாய் நெகட்டிவ் விஷயங்களை மறைக்க செய்யும் உட்டாலக்கடி பப்ளிச்சிட்டியாய்த்தான் தோன்றுகிறது. பி.வி.ஆரில் 24 படத்தின் பைரஸி எடுத்ததை கையும் களவுமாய் பிடித்தற்கே இது வரை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருந்து நடவடிக்கை எடுத்து.. ம்க்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ராண்ட் நேம் ஆகிவிட்டால் எல்லாவிதமான விமர்சனங்களுக்கு தயாராக இருக்கவேண்டும். பெரும்பாலானவர்கள், முக்கியமாய் இளைஞர்கள் ப்ராண்ட்டை பிடிக்காவிட்டாலும் கூட, எங்கே நாம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நாம் அவுட்டேட் ஆகிவிடுவோமோ, நமக்கான ஆதரவு குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து பாராட்டியோ, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியோ விடுவார்கள். ஆனால் இவையனைத்தும், சோசியல் மீடியாவில் மட்டுமே. இவர்கள் சோஷியல் மீடியாவில் மட்டுமே தினமும் வலம் வருவதால் அது மட்டுமே உலகம் என்றிருக்கிறார்கள். இவர்கள் அப்படி யிருப்பதை ஆன்லைனில் ப்ரோமோ செய்கிறேன் பேர்விழி என்று பத்து பதினைந்து ஃபேக் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு பத்தாயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அதைத்தான் இவர்கள் நம்பவும் செய்கிறார்கள். உண்மையாகவே ஷோசியல் மீடியாவின் பவர் என்ற ஒன்று உண்மையென்றால் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்கட்சியாகவாகவாவது வந்திருக்க வேண்டும். ஸோ.. பெய்ட் ரிவ்யூசுக்கும், கருத்துக்கும், ஆட்டு மந்தையாகாதீர்கள். சொந்தமாய் ஜிந்தியுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.
கதை, அது இதுன்னு கேட்க வேண்டாம். அதே அரத பழசு காதல், லாஜிக் இல்லா காமெடிதான். முதல் பாதி முழுவதும் சூரி புஷ்பா புருஷனாய் வலம் வருகிறார். ஆரம்பத்தில் நல்ல காமெடியாய் தெரிந்தாலும் போகப் போக நீர்த்து போகிறது. அதை ரெண்டாம் பாதியில் கடைசியில் வரும் ரோபோ சங்கரின் காமெடி அதகளப்படுத்தி விடுவதால் சரியாகிவிடுகிறது. நிகில் கவர்ச்சியாய் இருக்கிறார். சீரியஸாய் படம் பார்க்க மனமில்லாதவர்கள் நிச்சயமாய் கொண்டாட ஏதுவான படம் தான். பட்.. சீரியஸாய் காமெடியை அட்டெண்ட் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sarbjit
அப்பாவி கிராமத்து இளைஞன் ரா உளவாளியென பாகிஸ்தான் சிறையில் மாட்டிக் கொண்டு, வெளிக் கொணர போராடும் அவனது சகோதிரியின் உண்மைக் கதை. உண்மைக் கதைகளில் உள்ள பிரச்சனை என்னவென்றால் முடிவு நமக்கு ஏற்கனவே தெரிந்து இருப்பதால் சுவாரஸ்யம் குறைய அதிக வாய்ப்பு. அதை இப்படம் தகர்த்திருக்கிறது. ஐஸ்வர்யா மற்றும் ரந்தீப்பின் நடிப்பினாலும், பவர்புல்லான வசனங்களாலும், சீரான மேக்கிங்கினாலும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. வருடங்கள் கழித்து தன் குடும்பம் தன்ன ஜெயிலில் பார்க்க வருகிறார்கள் என்ற நிலையில் தன் சிறை அறையை சுத்தபடுத்தும் காட்சியிலும், நான் வெளியே வராவிட்டாலும் ஜெயித்துவிட்டேன் என்று ஐஸ்வர்யாவிடம் சொல்லும் ரந்தீப்பின் முகத்தை புரியாமல் ஏறிட்டு பார்கும் ஐஸ்வர்யாவிடம் இத்தனை நாள் நான் என் பெயர் சர்ப்ஜித் என்று சொன்னதை இல்லை என்று சொன்னவர்கள் சர்ப்ஜித் என்று ஒத்துக் கொண்டிருப்பதே வெற்றிதான் என்று சொல்லுமிடத்தில் அவரது நடிப்பு அட்டகாசம். முடிவு சோகமாய் இருந்தாலும் க்ளாஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
குளிக்காதவர்கள் புத்தக கண்காட்சிக்கு போனால் வியர்வையில் குளித்துவிட்டு வரலாம். அற்புதமான அமைப்பு

Starting to book fare.. Nanbargale. Jakkirathai 

பிரபலமானவர்களின் கருத்து விவாதிக்கப் படுவதில் ஆச்சர்யமொன்றுமில்லை.

அஞ்சலியின் சில நுணுக்கமான பார்வைகள் க்ளாஸ்

வாழ்வனுபவம் இல்லாதவர்களின் கருத்தை கொண்டாடுகிறவர்களின் வயது 25க்குட்பட்டவர்களாய் இருக்கும் போது அது உண்மையான அனுபவமாகாது

Last 15 mins total laugh riot all the best to the team @VVStudioz @iamvishnuvishal ‪#‎VVV
@@@@@@@@@@@@@@@@@@
புத்தக கண்காட்சி ஆரம்பித்து நாளாகிவிட்டதே என்று நேற்று கிளம்பினேன். பார்க்கிங் போட்டபின் தான் சொன்னார்கள் மரப்பாலம் உடைந்துவிட்டதால் மீண்டும் வெளியே வந்து புத்தக கண்காட்சியினர் அமைத்திருந்த வேன்களில் பயணம். ஹூயூமிடிட்டி அதிகமாய் இருந்ததால் வெளியவே வேர்த்து வழிய ஆரம்பித்தது.உள்ளே நுழைந்த மாத்திரத்தில் மூச்சடைக்கும் காற்றில்லா அமுக்கும் வெப்பம் நம்மை சூழ வேர்த்து கொட்ட ஆரம்பித்ததுதான். எதிர் வரும் அத்தனை பேரும் குளித்தெழுந்துதான் வந்து கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு அவ்வளவாக வேர்வை இருக்காது என்பார்கள். வந்திருந்த அத்தனை பெண்களும் வேர்வையில் குளித்திருந்தார்கள். கடைக்காரர்கள் பாடு படு திண்டாட்டம். வியாபாரத்தையும் பார்த்தாக் வேண்டுமென்ற கட்டாயம்.  இருந்த ஒரு மணி நேரத்தில் ரெண்டு வரிசை கூட பார்க்க முடியவில்லை. நானும் பாலாஜி கோபாலும் வெளியே ரெண்டு மணி நேரம் நின்று வேறு வேறு சினிமா டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட்டேன். இதற்குள் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்திருக்கிறேன். என்ன மாதிரியான அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. சற்றேனும் காற்றோட்டம் உள்ளபடியாய் அரங்கை அமைக்கக்கூடாதா யுவர் ஆனர்..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A guy stuck his head into a barbershop and asked, "How long before I can get a haircut?" The barber looked around the shop full of customers and said, "About 2 hours." The guy left. A few days later, the same guy stuck his head in the door and asked, "How long before I can get a haircut?" The barber looked around at the shop and said, "About 3 hours." The guy left. A week later, the same guy stuck his head in the shop and asked, "How long before I can get a haircut?" The barber looked around the shop and said, "About an hour and a half." The guy left. The barber turned to his friend and said, "Hey, Bob, do me a favor, follow him and see where he goes. He keeps asking how long he has to wait for a haircut, but he never comes back." A little while later, Bob returned to the shop, laughing hysterically. The barber asked, "So, where does he go when he leaves?" Bob looked up, wiped the tears from his eyes and said, "Your house!"
கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

" வசூல் ரீதியாய் நெகட்டிவ் விஷயங்களை மறைக்க செய்யும் உட்டாலக்கடி பப்ளிச்சிட்டியாய்த்தான் தோன்றுகிறது. "


இதான் இறைவி விமர்சனமா ?