கேட்டால் கிடைக்கும்
சமீப காலமாய் கேட்டால் கிடைக்கும் குறித்து நிறைய ரோட்டரி சங்க கூட்டங்களில் கடந்த ஒரு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட குழுவில் பேசி விட்டேன். குழுவில் பேசி வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன் பின்னர் நம்மைப் போலவே அக்குழுவில் உள்ள சில பேர் தனியே போராடி வருவதும், அது குறித்து பேசுவது அதிகமாகியிருக்கிறது. நாம கேட்டு என்ன ஆயிடப் போவுது என்ற எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் தழைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமாய் இருக்கிறது. நேற்றிரவு போரூர் வரை ஓலா ஆட்டோவில் சென்றேன். டாக்ஸி வந்தது பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் டிரைவர் பேசிக் கொண்டு வந்தார். இன்னைக்கு கவலைப் பட்டு என்ன சார் பண்றது? ஆரம்ப காலத்துல ஒழுங்கா மீட்டர் போட்டு ஓட்டியிருந்தா இந்த கார், டாக்ஸியெல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது என்றார். மீட்டருக்கு மேல் யாரிடமும் கேட்க முடிவதில்லை. அப்படியே கேட்டால் உடனடியாய் கம்பெனிக்கு போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்து விடுகிறார்கள் என்றார். சந்தோஷமாய் இருந்தது.. மீட்டர் போட்டு, சைதாப்பேட்டையிலிருந்து போரூருக்கு 131 ரூபாய் ஆனது. அதே தூரத்திற்கு இரவு ஓலா டாக்ஸியில் 101.ஆட்டோவில் 12.50 டாக்ஸியில் 10 ரூபாய். கிலோ மீட்டருக்கு. இந்த ஓலா, ஊபர் போன்றவர்கள் இந்த ட்ரைவர்களுக்கு கொடுக்கும் இன்செண்டீவ் பற்றி ஆராய வேண்டும். எப்படி கட்டுப்படியாகிறது என்றே தெரியவில்லை நிச்சயம் அந்த காசு நம்மிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது. எப்படி வலிக்காம எடுக்குறாங்க என்பதை பற்றி கேட்க ஆரம்பித்திருக்கிறேன். வெயிட்டீஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஃபன்றி பட இயக்குனர் நாகராஜ் இயக்கிய புதிய படம். சாய்ரட். மராத்தியில் கிட்டத்தட்ட 35 கோடிக்கு மேல் வசூலாகி, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. பிவிஆரில் படம் ஸ்பெஷல் ஷோ போட்டால் புல்லாகிவிடுமள்வுக்கு மராத்தி படம் ஓடுவது நாகராஜ் எனும் ப்ராண்டும், இணையத்தில் படம் பற்றி பேசுவதும் காரணமென்று நினைக்கிறேன். கிராமத்தில் வரும் பதின்ம வயது காதல் பாட்டீல் எனும் மேல் ஜாதி பெண்ணுக்கும், மீனவ சமுதாயத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெண் டாமினெண்ட், ஐ லவ்யூவே அவள் தான் கூறுகிறாள். பையனுக்கு பெண்ணுக்குமிடையே பரிமாறப்படும் பார்வைகள், பின்னணியிசை, பாடல்கள் எல்லாம் செம்ம. குட்டிக் குட்டி ஷாட்களில் அவர்களின் ரியாக்ஷன்கள் அட்டகாசம்.முக்கியமாய் ஒரு காட்சியில் காதல் கைகூடிவிட்டதை ரயில் ஓடும் சத்தத்தோடு, அதற்கு இசைந்து ஆடும் ஆட்டம்,
பெண்கள் குளிக்கும் போது தெரிந்தே குதித்து காதலியை பார்த்துக் கொண்டே கரையேறும் காட்சிகள் எல்லாம் க்யூட் கவிதை. அந்த பெண் தான் எவ்வளவு அழகு. அந்த கண்களும், உதடுகளிலும் தெரியும் காதல், சோகம், ஆதிக்கம் எல்லாமே க்ளாஸ்.. உயர்ஜாதியின் திமிர், அதிகார நடை, ட்ராக்டர் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் ஓட்டும் லாவகம், காதலை சொல்ல்லும் காட்சிகள் முதல், க்ளைமேக்ஸ் வரை நாயகி நம் கண்களைவிட்டு, மனதை விட்டு அவரை விலக்கவே முடியவில்லை.
நகரங்களின் டாப் ஆங்கிள் கேண்டிட் ஷாட்கள், கரட்டாண்டி போல ஊனமுற்ற நண்பன், கதாநாயகியுடன் உடன் வலம் வரும் சுமார் பெண், ஊர் விட்டு ஓடி வந்து பஸ்ஸிலும், பஸ் ஸ்டாண்டிலும், காமன் பாத்ரூமில் குளித்து சினிமா தியேட்டரில் தூங்கி, வாழும் காட்சிகள், க்ளைமேக் என காதல் படத்தை மராத்தியில் எடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், காதல் படத்தில் பேசாத சில விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். முக்கியமாய் பணக்கார புத்திசாலி பெண், ஆவரேஜ் ஆண் ஊரை விட்டு ஓடி போய் எப்படி அவ்வளவு சுலபமாய் வாழ்ந்துவிட முடியும். அவர்களிடையே நடக்கும் ஊடல், கோபம், சந்தேகம், இன்செக்யூரிட்டி அவர்களுக்குள் ஏற்படும் கைகலப்பு, பொறுமையின்மை, தப்பு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எல்லாவற்றையும் படம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும் அதை அழகாய் சொல்லியதிலும், க்ளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தாலும் காட்சியை அமைத்த விதம், அக்கொலைகளை பின்னனியிசையில்லாமல் அமைதியாய், காட்சிப்படுத்திய விதம், குழந்தையின் ரத்தம் தோய்ந்த கால்களின் பதிவு எல்லாம் அழுத்தமான முத்திரை பதித்து நம் மனதை பிசைந்து ஊடுருவ ஆரம்பிக்க வைத்ததில் நம்மூர் காதலை விட ரெண்டு படி உயர்ந்த படைப்பை தந்திருக்கிறார் நாகராஜ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாள் கூத்து
ஒர் முதிர்கன்னி, ரேடியோ ஆர்ஜே, ஐடி பெண் இவர்களுடய திருமணப் பிரச்சனைதான் படம். ஆரம்ப காட்சிகளில் சட்டென நம்மை கதைக்குள் இழுக்கும் லாவகத்தோடு படத்தை ஆரம்பித்தவர அதன் பிறகு பத்து பதினந்து நிமிடங்கள் ஆகியும் கேரட்கர் இண்ட்ரொடெக்ஷனை மட்டுமே செய்து சுறுசுறுப்பை குறைத்துவிடுகிறார். படம் நெடுக ஏன் இவர்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதை அழுத்தமாய் அவரவர் கேரக்டர்கள் மூலம் விளக்கினால் எங்கே டிவி சீரியல் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் உணர்வு பூர்வமாய் நம்மை நெகிழ வைக்க கூட சிட்சுவேஷன் இருந்தும், மேலோட்டமாய் திரைக்கதை தாண்டிவிடுவதால் யாருடய கஷ்டமும் நமக்கு ஒட்ட மாட்டேன் என்கிறது. மியா ஜார்ஜின் கதையில் மட்டும் கொஞ்சம் டீடெயில் இருக்கிறது. அவரது ந்டிப்பென்று இல்லாமல் அனைத்த் நடிகர்களிடமும், நல்ல பெர்மாமென்ஸை வாங்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷிமிருந்து தவிர. ஏன் மியாவின் அப்பா அவருக்கு வரும் வரன்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறார்? தினேஷ் தான் செட்டிலாக வேண்டும் என்று சொன்னாலும் அதன் பின்னால் இருக்கும் அவரது இன்செக்யூரிட்டி தான் அவரை அப்படி சொல்ல வைக்கிறது என்றாலும், அவரது காதலி நிவேதா ஏன் இப்படி குழம்ப வேண்டும்?. ஆர்ஜே, மீடியாவில் பிரபலமான பெண் இருந்து கல்யாணம் ஆகவில்லை. ஏன்? என்ன காரணம்? அவருக்கும் ஆர்.ஜே ரமேஷுக்குமிடையே என்ன விதமான உறவு? எப்படி சட்டென அவருடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு நெருக்கம்? என படம் நிறைய கேட்கவிகள் அக்கேரக்டர்களைப் பற்றியே உலவிக் கொண்டிருப்பதால் ஒன்ற முடியாமல் போய் விடுகிறது. க்ளைமேக்ஸை வழக்கமாக வைக்கக்கூடாது என்கிற முடிவோடு இருந்திருக்கிறார் நெல்சன். பாஸிட்டிவான முடிவாக இல்லாவிட்டாலும் கேரக்டர்களில் அழுத்தமோ, முரணோ சரியாக காட்டப்படாதினால் யார் யாரை கல்யாணம் பண்ண எனக்கென்ன என தோன்ற வைக்கிறது. ஒளிப்பதிவும், நடிகர்களின் நடிப்பும், ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் மற்றும் பின்னணியிசை, பெண்களைச் சுற்றி நடக்கும் கதைக்களன் எல்லாமே ஆவரேஜான திரைக்கதையால் மனதில் நிற்காமல் போய் விட்டது என்பது வருத்தமே
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நாம் பார்த்து பழகிய காதல் கதை தான் என்றாலும், ரிங்குவின் கண்கள் மனதை விட்டு அகல மாட்டேனென்கிறது. #Sairat
டெக்கி ஹாரர் படங்களிலிருந்து விலகி எக்ஸார்சிஸ்ட் கால கதையோடு கூடிய பேய்ப்பட வரிசைதான் #Conjuring2
all the best @sandeepkishan8 for ur #OkkaAmmayiThappa
nihilistic - rejecting all religious and moral principles in the belief that life is meaningless. இதுல எதைடா அதுல பாத்தீங்க.. அவ்வ்வ்வ்
nihilistic இந்த மாதிரி வார்த்தைகளை தேடி கண்டுபிடிச்சி, அதுக்கு அர்த்தம் சொல்றா மாதிரி இந்த படம் அந்த படம்னு அடிக்குற கூத்து இருக்கே.. அவ்வ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Conjuring 2
டெக்கியான பேய்ப்படங்கள் வலம் வரும் காலத்தில் கொஞ்சம் ஓல்ட் எக்ஸார்ஸிஸ்ட் போல பாதிரிமார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேய் விரட்டி, கொஞ்சம் ஓல்ட் ஸ்கூல் டைப்பில் கதையோடு வ்ந்து நம்மை பயமுறுத்திய படம் தான் கான்சூரிங்..முதல் பாகம். அது பண்ணிய வசூல் இரண்டாவது பாகத்திற்கான டிமாண்டை ஏற்படுத்திவிட, அதே போன்ற கதையமைப்புடன் வந்திருக்கும் படம் தான். படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்திற்கு லட்சம் தடவை பார்த்த பயமுறுத்தும் காட்சிகளுக்கான முஸ்தீப்புகளை மட்டுமே கொண்டிருக்க, நடுவில் கொஞ்சம் அசந்தால் தூக்கம் வரும் அளவிற்கு தான் படமிருந்தது. க்ளைமேக்ஸின் போது செண்டிமெண்டலாகவும், எமோஷனலாகவும் மாற்றி, ஒரிஜினல் பேய் யார் என்று தெரியும் காட்சி வரை சத்தமும், விஷுவலுமாய் ஒரு மாதிரி உட்டாலக்கடி செய்து உட்கார வைத்துவிட்டார்கள். டோண்ட் கம்பேர் 1
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A family is at the dinner table. The son asks the father, “Dad, how many kinds of boobs are there?” The father, surprised, answers, “Well, son, a woman goes through three phases. In her 20s, a woman’s breasts are like melons, round and firm. In her 30s and 40s, they are like pears, still nice, hanging a bit. After 50, they are like onions.” “Onions?” the son asks. “Yes. You see them and they make you cry.” This infuriated his wife and daughter. The daughter asks, “Mom, how many different kinds of willies are there?” The mother smiles and says, “Well, dear, a man goes through three phases also. In his 20s, his willy is like an oak tree, mighty and hard. In his 30s and 40s, it’s like a birch, flexible but reliable. After his 50s, it’s like a Christmas tree.” “A Christmas tree?” the daughter asks. “Yes, dead from the root up and the balls are just for decoration.”
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
" the balls are just for decoration "
அண்ணே . . . ஹி ஹி ஹி . . .
Post a Comment