கொத்து பரோட்டா -25/07/16
டெ ல்லியில் 14 வயது தலித் பெண்ணை இரண்டாவது முறையாய் கடத்தி கற்பழித்திருக்கிறார்கள். அதில் அப்பெண் இறந்து போயிருக்கிறாள். இது வரை எந்த மீடியாவும் பெரிதாய் கூவியதாய் தெரியவில்லை. அதே போல கபாலி பட வெளியீட்டன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆலந்தூர் வழியாய் போய்க் கொண்டிருந்த போது உச்சா வர வேறு வழியில்லாமல் ரோட்டோரம் நின்று அடிக்கும் வேலையில் அங்கே ஏதோ ஒரு சத்தம் வர, என்னவென்று பார்த்த போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும் படி அலறியிருக்கிறார். உடனே அங்கே களத்தில் இறங்கிய போது அங்கே மூன்று வேற்று மாநில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை களைய முயற்சித்துக் கொண்டிருக்க, தடுக்கப் போன இந்த இளைஞரை மூங்கில் கழி கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இந்த சந்தடியில் அப்பெண் அவர்களிடமிருந்து விலக, அங்கே பாஸ் செய்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் துணைக்கு வர, மூவரும் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் அடித்த அடியினால் கிடைத்த காயத்தை பேஸ்புக்கில் போட்டு இதனால் தான்பெருமை கொள்வதாகவும் போட்டிருந்தார். அப்பெண் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரவில்லை என்றும் சொல்லியிருந்தார்...