Thottal Thodarum

Jul 4, 2016

கொத்து பரோட்டா -04/07/16

நேற்று உறியடி, ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, அம்மா கணக்கு படங்களைப் பற்றிய கருத்துபதிவு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பாஸ்கர் சக்தி, ஷான் போன்றோருடன் ராஜா மந்திரி இயக்குனரும் வந்திருந்து பேசினார். உறியடி இயக்குனருக்கு உடல் நலமில்லாததால் வர முடியவில்லை என்றாலும் அப்படத்தை அவர் எடுக்க, வெளியிட, எத்தனை மாற்றங்கள் போராட்டங்களை தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்து என்பதை நண்பர் என்கிற முறையில் சொன்னேன். அதே போல ராஜா மந்திரி ஸ்கிரிப்டை முழுக்க ஒரே மணி நேரத்தில் காபி டேயில் படித்ததையும், பின்பு அக்கதைக்கு விவாதம் செய்ததையும் நினைவு கூர்ந்தேன். ஒரு நாள் கூத்து படம் ஏன் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை முழுக்க, கேட்டுவிட்டு, கிளம்பும் போது அப்படத்தின் திரைக்கதை எழுதிய சங்கர தாஸ் வந்து பேசினார். அவரும் நானும் ஏற்கனவே போனவாரம் இயக்குனன் குறும்பட வெளியீட்டில் சந்தித்திருந்தோம்.சீரியஸான விவாதமாய் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாய் சென்றது விழா. அமைத்து நடத்திய விஜயனுக்கும் அவரது பொறுமைக்கும் வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@
அவளும் நானும்- குறும்படம்
ரொம்பவும் சிம்பிளான கதை. ஓவர் பொஸஸிவ்னெஸினால் பிரிய முற்பட்ட காதலியை வரவழைத்து, பேசி கரைக்க முயற்சித்து. அதே பொஸஸிவ்னெஸினால் இணைவது. கிட்டத்தட்ட சோலோ நடிப்பு முயற்சியில் அரவிந்த் ராஜகோபால். சோகமாய், காதல் தோல்வியில் உழல்பவனாய், உள்ளூக்குள்ளே எங்கிருந்தாலும் வாழ்க என்பது போல ரியாக்ட் செய்து கொண்டு பேசினாலும் க்ளைமேக்ஸில் புத்திசாலித்தனமாய் அவளை கவிழ்த்துவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்வது என பல விதமான ரியாக்‌ஷன்கள், வசன மாடுலேஷன்களை முயற்சித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் பாடி லேங்குவேஜும், முக பாவனைகளில் பயிற்சியும் எடுத்தால் சிறப்பாக பேசப்படுவார். கதாநாயகி ஸ்ரீவைஷ்னவி சிரிக்கும் போது நன்றாக இருந்தாலும் ஏதோ கொஞ்சம் நெருடலாய் தான் இருக்கிறார். அரவிந்த் பாலாஜியின் ஒளிப்பதிவு குட். ஏழு நிமிட ஷார்ட் பிலிமில் வசனம் மட்டுமே பிரதானமாய் இருக்கும் இந்த படத்தை எழுதி நடித்திருப்பவர் அரவிந்த் ராஜகோபால். இயக்கம் ராகவ். தயாரித்து எடிட்டிட்டிருப்பவர் ஸ்ரீதர் வெங்கடேசன். ஆங்காங்கே வசனங்கள் இயல்பு. இன்னும் கொஞ்சம் முயன்றால் நிச்சயம் சுவாரஸ்யபடம் ஒன்று ரெடியாகிவிடும் வாழ்த்துக்கள் டீம்
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நியூஸுக்காக மக்கள் அலைந்த காலத்திலிருந்து நியூஸுக்காக சேனல்கள் அலையும் காலத்திருக்கிறோம்.

Hats off to tamilnadu police

பத்தாயிரம் செலவு பண்ணி கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு வந்த திருமண ஜோடி டைவர்ஸ் பண்ணா நம்ம காசை திருப்பி தருவாங்களா?

என்ன இன்னும் சந்துல இளையராஜா/ ரஹ்மான் சண்டை ஆரம்பிகவேயில்லை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுவாதி கொலை வழக்கும் தான் டாக் ஆஃப் தி டவுன். முக்கியமாய் முகநூலில் இருப்பவர்களில் பலர்.. இப்படி கண்டுபிடித்திருக்கலாம். அப்படி கண்டுபிடித்திருக்கலாம் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு அவரவர் கற்பனைக் குதிரையை தட்டி விட்டது படு காமெடி. இவங்களின் இம்சை குறையவாவது இக்கேஸ் முடிவது சந்தோஷம். செய்தி சேனல்களோ அதை விட மோசம். இருக்குற ஏழு சேனல்களும் ஆளாளுக்கு என்னவோ கூடவே இருந்து பார்த்தார்ப் போல  விவரணைகள். பொய்கள். யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்கிற எண்ணம் தானே.. பார்வையாளர்களை தக்க வைக்க சுவாதியின் ஒன்பதாம் நாள் காரியக் காட்சிகளை எல்லாம் எடுத்தது படு அபத்தம். இருக்குற கோபத்துக்கு ராம்குமார்ட்ட சொல்லி இவங்களையும் ரெண்டு போடு போடச் சொல்லணும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
House Of Cards
கதையாய் பார்த்தால் சாதாரணமான அரசியல்வாதியின் கதைதான். பதவி, பணம், பவர் எல்லாவற்றையும் வைத்து ஆடும் ஆடு புலி ஆட்டம். அதில் வைஸ் ப்ரெசிடெண்ட் பதவிக்கு காய் நகர்த்து ஃபராங்க் உட்டின் ஆட்டம் தான் பிரதானம். எப்படி எல்லாம் அரசியல் செய்கிறார். யாரையாரை பகடையாக்குகிறார். எப்படி மேனுபுலேட் செய்கிறார் என பதை பதைக்க வைக்கும் டென்ஷனோடு கதை சொல்கிறார்கள். ப்ராஙுட்டாக கெவின் ஸ்பேசி. அட்டகாசமான நடிப்பு. எந்த வித டென்ஷனும் ஆகாமல் ஒவ்வொரு காயாய் நகர்த்தும் விதமாகட்டும், பேசியே ஆளை கணித்து கவிழ்க்குமிடமாகட்டும் மனுஷன் அசத்துகிறார். அவரின் மனைவிக்கும் அவருக்குமிடையேயான உறவு. தடாலடியாய் காங்கிரஸ்மென் கெவின் மூலம் பெரிய இடத்தை அடையும் இளம் பத்திரிக்கைக்காரி, அவர்களுக்கிடையே ஆன செக்சுவல் உறவு. அதை தன் பெண்டாட்டியிடம் சொல்லிவிட்டே செய்யும் கணவன் மனைவியின் அண்டர்ஸ்டேண்டிங். ஒவ்வொரு காயாய் நகர்த்தி, தேவையென்றால் ஆள் வைத்தெல்லாம் கொல்லாமல் தானே கீழிறங்கி கொன்றாவது தான் ஆசைப் படும் இடத்தை அடைய போராடும் குணம். அட்டகாசம். நல்ல சைக்காலாஜிக்கல் அரசியல் சீரிஸ். டோண்ட் மிஸ்.. முதல் சீசன் முடிந்திருக்கிறது. ரெண்டாவது சீசன். பார்க்க ஆரம்பித்தாயிற்று.. டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஏன் ஹாலிவுட் படங்கள் எல்லாம் ஒரே சூப்பர் மேனும், ஸபைடர் மேனுமாய் உலகைகாப்பாற்றும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று யோசித்த போது ஒன்று தோன்றியது. அவர்களின் டிவி சீரீஸே படத்துக்கு ஈடாக இருக்கும் பட்ட்சத்தில் நம்மூரில் எப்படி பெண்களை தியேட்டர் சைடில் இழந்திருக்கிறோமோ அது போல நல்ல கண்டெண்ட் பார்க்கும் ஆட்கள் டிவி சீரிஸ் பக்கம் ஒதுங்கியிருக்க, இளைஞர்களை வளைக்கும் சூப்பர் ஹீரோ படங்களை அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ctrl Alt Del
தமிழ் டிவி சீரியல் போல இல்லாமல் வெப் சீரீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கொஞ்சம் டெம்ப்ளேட்டான இளைஞர்கள் அவர்களின் திருமணம், மற்றும் உறவுகளை குறித்துத்தான் என்றாலும் அழகழகான பெண்கள், ஸ்லீக்கி டயலாக், பட்ஜெட் தான் என்றாலும் நீட்டான ப்ரெசெண்டேஷன் என கலக்குகிறார்கள். வழக்கம் போல கல்யாணமானவன் தெலுங்கனாகவே இருக்கிறான். இப்போதுதான் ரெண்டு எபிசோட் போயிருக்கிறது. பார்ப்போம். மீதி எப்படி போகுமென்று..  விளம்பரதாரராய் கிட்காட்டை பிடித்திருப்பதால் ஒவ்வொரு எபிசோடுக்கும் யாராவது ஒரு கேரக்டர் கிட்கேட்டா என்று கேட்டபடி சாப்பிடுவதைத் தவிர வெரி ப்ரொபஷனல். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜாக்ஸன் துரை
பேய்க்கும் பேய்க்குமான சண்டையை மனுசன் ரெண்டு பேர் போய் சரி பண்ணுவதுதான் கதை. அட. சுவாரஸ்யமான் முடிச்சாய் இருக்கிறதே என்று நினைத்தால் அதன் பிறகு நடக்கும் விபரீததுக்கு நான் பொறுப்பல்ல. கருணாகரன், யோகிபாபு ஆகியோரின் காமெடி ஆங்காங்கே எடுபட்டாலும், இடைவேளைக்கு பிறகு வரும் பேய் சத்யராஜ், அவரின் நாட்டுப்பற்று ப்ளாஷ்பேக் எல்லாம் அரத பழசு. அங்கேயும் இங்கேயும் எல்லாரும் ஓடுறாங்களே தவிர படம் நகருவேனானெங்கிறது.   
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Whats 72? 

69 with three people watching. 

Post a Comment

No comments: