Thottal Thodarum

Jul 11, 2016

கொத்து பரோட்டா - 11/07/16

OzhivuDivasatheKali
கதை கதையென்று தேடிக் கொண்டிருக்கிறோம்.. கதை நம்முள்ளேயே கொட்டிக் கிடக்கிறது என்பது இப்படம் உ.கை.நெ.கனி. ஐந்து நடு வயதுக்காரர்கள். நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்யூனிட்டி. நாட்டில் தேர்தல் அன்று விடுமுறையாதலால் யாருமில்லாத ஒரு கெஸ்ட் அவுஸில் ஒன்று சேர்ந்து தண்ணியடித்து கொண்டாட ப்ளான் செய்து கிளம்புகிறார்கள். அங்கேயே இருக்கும் வாட்ச்மேன் மற்றும் ஒரு சமையற்காரியை வைத்து கோழி சமைத்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். படம் முழுக்க, இவர்களின் பேச்சுக்கள் மற்றும் குடி தரும் சுகாபனுவத்திலிருந்து மோசமான அனுபவம் வரை. கிட்டத்தட்ட நிறைய காட்சிகள் ஸ்டெடி ப்ரேமாகவோ, அல்லது லேசான பேனிங்குடனோ ஆன காட்சிகள். இரண்டாம் பாதி முழுக்க ஒரே ஷாட். அட்டகாசம் என்றால் அதற்கு இதுதான் உதாரணம். நடிப்பு, வசனங்கள், படமாக்கியவிதம் என கிட்டத்தட்ட கேண்டிட்டாய் நம்மை நாமே காணும் வாய்ப்பு. அரசியல், ஆண் ஆதிக்கம், ஜாதி, வேலை, பெண், காமம், காழ்ப்புணர்ச்சி, நட்பு,  எளியோரை பழிவாங்கும் மன வியாதி. பணம் கொடுக்கும் திமிர், பதவி, பவர் என பேசாத விஷயமில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமேக்ஸ் நம்மை அப்படியே  ஒரு குலுக்கு குலுக்கி, மல்லாக்கப் போட்டு நெஞ்சில் மிதிப்பது போல இருக்கிறது. யாராவது ஒரு கேரக்டர் நடிக்கிறது என சொல்லவே முடியாது. சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள், பாடி லேங்குவேஜ்கள் எல்லாவற்றையும் க்ளோசப் இல்லாமல், நம்மை கவனிக்க வைத்த விதம். சமையற்கார பெண்ணின் கோபத்தை வெளிப்படுத்துமிடம், குடியின் போது பேசும் விஷயம் எவ்வளவு விபரீதமாய் போகும் என்பது போல பல விஷயங்கள்..  சமீபத்தில் பார்த்த மாஸ்டர் பீஸ் படம்.. டோண்ட் மிஸ்.. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
எங்கள் ஏரியாவில் ஆக்ட் இல்லாத காரணத்தினால் யூ ப்ராட்பேண்டை தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியேயில்லை. ஏர்டெல்காரன் ஆள் இல்லாத ஊரில் அவன் சொன்னதுதான் ரேட் என்பதால் ஏரியாவுக்கு ஒரு ரேட் என வைத்து கொள்ளையடிக்க, யூ ப்ராட் பேண்டுக்கு மாறினேன். முதல் மூன்று மாதங்கள் ஹனிமூன் ப்ரீயட். அவ்வப்போது டிஸ்கனெக்‌ஷன்கள், போன் கால்க்ள் என போனாலும் சுகமாய் போனது. கடந்த மாதம் ஒரு நாள் திடீரென கட்டாக, தொடர் போன்கள், லோக்கல் ஏரியா ஆட்களின் நம்பர்கள் எல்லாம் திரட்டி போனில் மிரட்டாத மிரட்டெல்லாம் மிரட்டி லைன் மீண்டு வந்து ரெண்டு நாட்களில் மீண்டும் இடி இடித்து ஓ.எல்.டி காலியாகிவிட்டது . கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை நோ இண்டெர்நெட். அதே தரத்தில் ரிலையன்ஸ் ஜியோவை ஹாட்ஸ்பாட்டாய் வைத்து ஒப்பேற்றினாலும், மீண்டும் தொடர்ந்த போராட்டத்திற்கு பயனில்லாமல் போக, ஹைதராபாத்தில் போன் பேசுகிறவனுக்கு இங்கே என்ன எளவு நடக்கிறது என்று புரியாததால் பொத்தாம் பொதுவாய் நான்கிலிருந்து எட்டு வேலை மணி நேரங்களில் உங்கள் பழுது சரி செய்யப்படும் என்பதை ரோபோ கணக்காய் சொல்லிக் கொண்டிருந்தான். சரி இது ஆகறதில்லை என்று நேற்று நேரே யூ ப்ராட்பேண்ட் அலுவலகத்துக்கு ரைட் விட்டேன். அரை மணி நேர ரைட்டில் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாமே க்ளியர். கேட்டால் கிடைக்கும். மீண்டும் நேற்று மதியத்திலிருந்து லைன் கட்.. என் போராட்டம் தொடர்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
குறும்படங்களில் பெரிய நடிகர்களை வைத்து எடுத்து கல்லாக் கட்டுவது சமீபத்திய பாலிவுட் வழக்கமாகியிருக்கிறது. ஒரு விதத்தில் இது நல்லதும் கூட, ஏனென்றால் குறும்படங்களை வெகு ஜன மக்கள் பார்க்கும் பழக்கம் அதிகமாகக்கூடும். ராதிகா ஆப்தேவின் குறும்படம் ஹிட்டித்தபின் இப்போது பியா பாஜ்பாய் நடிப்பில் “The Virgins" என்கிற குறும்படம் வெளியாகியிருக்கிறது. கல்யாணத்துக்கு தயாராக இருக்கும் தம்பதிகள் இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒழுங்கு பையனான மாப்பிள்ளைக்கு அவளது முன்னாள் காதலுடனான உறவு குறித்து சந்தேகமெல்லாம் இல்லை. ஜஸ்ட் அவள் வர்ஜினா என்பதுதான். அவன் வர்ஜின் என்கிறான் அதனால் இருவருக்குமிடையே ஆன குழப்பம். அவள் தன் கணவனை முதல் நாள் இரவில் எப்படி ஏமாற்றலாம் என்று தோழியுடன் யோசிக்க, மாப்பிள்ளையோ வேறு விதமாய் யோசிக்கிறான். அப்புறம் என்ன நடந்தது என்பதை விலாவாரியாய் சொல்லியிருக்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சீட்டிங் பண்ணா வெளிய சொல்லாதேங்கிறது நல்ல விஷயமா இல்லையா?

last 15 mins laugh riot. Motta rajendran kalakal ‪#‎DhillikuDhuddu‬

ஹிப்போக்கிரேட்டுகளின் உச்சம் கொண்ட ஊர் நம்ம தமிழ்நாடு உ.தா. பெரியார் வளர்த்தெடுத்த மாநிலம். நாங்க பேருல கூட ஜாதி பாக்குறதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுல்தான்
ஷாருக்கின் சென்னை எக்ஸ்பிரசிலிருந்து அவரது மசாலா படங்களை பார்க்க தவிர்க்கிறேன். அதே வரிச்சையின் இனி சல்மானையும் வைக்க வேண்டும். சுல்தான் ட்ரைலரை பார்த்த போது அஹா.. என்றிருந்த என் ஆர்வம் படம் பார்த்த பின் அஹான் என்றானது. அதிலும் முதல் பாதி முழுவதும் ஐம்பது வயசு சல்மானும் பாதி வயசு அனுஷ்காவும் லவ்வும் கொடுமையெல்லாம் தூக்க மாத்திரை. மொக்கை பாடல் வேறு. சரி இடைவேளைக்கு பிறகு பார்த்தால் அதே டெம்ப்ளேட் தோல்வியடைந்தவன் எழுச்சியடையும் வசனங்கள், தொடர் தோல்வி, அல்லது வெற்றி, க்ளைமேக்ஸில் உருக்கும் வசனம், க்ளைமேக்ஸில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்புக்கு சென்று ஜெயிப்பது என அக்மார்க் டெம்ப்ளேட் ஸ்போர்ட்ஸ் படம். ஆனால் அபத்த காட்சிகளின் கூடாரம். ஒரு காட்சியில் சல்மானை பார்க்க போகும் ஸ்போர்ட் நிகழ்ச்சி நடத்துகிறவர் அவரின் உடல் கட்டுக் குலைந்து இருப்பதை அவரின் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே ஸ்கீரினில் ஒரு ட்ராக்டர் கரெக்டாய் ஆபீஸ் வாசலில் ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொள்ள, உடனே சுல்தானை கூப்பிடுங்கப்பா என்று அழைக்கும் காட்சியும் அக்காட்சியை எடுத்த அபத்தமும் நாம் பார்ப்பது ஹிந்தி படம் தானா? என்ற சந்தேகத்தை வரவழைக்கும் காட்சிகளில் ஒன்று. இன்னொரு காட்சியில் சுல்தானுக்கு ஸ்பான்ஸர் செய்யும் குக்கர் கம்பெனி அவரின் முதல் சண்டை ஹிட்டானவுடன், ஒரு தம்பதி கடையினுள் வந்து சுல்தான் வாலி குக்கர் இருக்கான்னு கேட்கும் காட்சி அமெச்சூர்தனத்தின் உச்சம். இப்படியாய் சுல்தான். மிடியலை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தில்லுக்கு துட்டு
சந்தானம் தன்னை ஹீரோவாய் நிலை நிறுத்திக் கொள்ள உடல், உடை, பாவனை எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டாலும் தன் ஸ்டைலான நக்கல் நையாண்டியை விடவில்லை. பணக்காரப் பெண் லோயர் மிடில் களாஸ் காதல், அதனால் பிரச்சனை. திடீரென கதை ரூட்டு மாறி பேய்க்கதையாய் பயணிக்கிறது. க்ளைமேக்ஸில் நிஜ பேய்க்கும், போலி பேய்க்குமிடையே நடக்கும் மொட்டை ராஜேந்திரன் வகையரா வயிற்றை பதம் பார்க்கிறது. மற்றபடி ஆங்காங்கே சந்தானம் ப்ராண்ட் நகைச்சுவை. தில்லுக்கு துட்டு கல்லாவை கட்டு..
#@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
The elderly Italian man went to his parish priest and asked if the priest would hear his confession. "Of course, my son," said the priest. "Well, Father, at the beginning of World War Two, a beautiful woman knocked on my door and asked me to hide her from the Germans; I hid her in my attic, and they never found her." "That's a wonderful thing, my son, and nothing that you need to confess," said the priest. "It's worse, Father; I was weak, and told her that she had to pay for rent of the attic with her sexual favors," continued the old man. "Well, it was a very difficult time, and you took a large risk -you would have suffered terribly at their hands if the Germans had found you hiding her; I know that God, in his wisdom and mercy, will balance the good and the evil, and judge you kindly," said the priest. "Thanks, Father," said the old man. "That's a load off of my mind. Can I ask another question?" "Of course, my son," said the priest. The old man asked, "Do I need to tell her that the war is over?".

Post a Comment

No comments: