Posts

Showing posts from August, 2016

கொத்து பரோட்டா - 01/08/16

Image
என் ட்வீட்டிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் போன், ஈமெயில், பேஸ்புக், டிவிட்டர், நேரில் என கிடைத்த கேப்பில் எல்லாம் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள். நன்றி. பாம்ப பிடிச் சா அரஸ்ட் பண்ணுவாங்களா என்ன? 350 பாம்புகளை பிடித்த பிடாரர்களை கைதாம்... ஜெயிலுக்கு போகணுங்கிறதுக்காக சும்மா நின்னுட்டு இருந்தவரை குத்தி கொன்னுருக்கான் ஒருத்தன். சாவு எப்படியெல்லாம் வருது பாருங்க மக்களே  குழந்தை திருமணத்தையும், ஜல்லிக்கட்டையும் இணைச்சு பேசியிருக்கிற நீதிபதிய நினைச்சா.. அவரு குறீயீட்டுல பேசுறவரோன்னு தோணுது @@@@@@@@@@@@@@@@@@@ யாருக்கு விருது கொடுத்தாலும் அதைப் பற்றி ஆளாளுக்கு மாற்றி மாற்றி ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொல்வது என்பது இணைய உலகின் வழக்கமாய் போய்விட்டது. அப்படியான ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதிப்  பிரச்சனையாய் வேறு மாற்றிவிடப்படுகிறது. கடைசியில் தலித், ப்ராமணன், தேவன் என படித்தவர்கள் தான் ஜாதியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கபாலிக்கு பிறகு தலித்தியம் பற்றி பேசுவது ஃபேஷனாகிவிட்டிருக்கிறது என்றே கூட சொல்ல ...