கொத்து பரோட்டா - 2.0- 1
ப்ளெக்ஸு நல்லது பாண்டிச்சேரி பக்கம் நுழையும் போதெல்லாம் முக்குக்கு முக்கு கண்ணில் படும் ப்ளெக்ஸுகளைப் பார்த்தால் பற்றியெறியும். பத்தாவது பெயிலானல் கூட காது பக்கம் செல்லை வைத்துக் கொண்டு, கேமராவை பார்த்தபடி “பத்தாவதை பத்தாமல் ஆக்கிய குலக் கொழுந்தே” என்று ரங்கசாமி, அல்லது நாராயணசாமியுடனான பேனர் வைத்திருப்பார்கள். மதுரைப் பக்கம் இம்மாதிரியெல்லாம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என்று தனி கண்டெண்ட். இப்படியான ப்ளெக்ஸுக்கு எதிர்பாளனான என்னையே “ப்ளெக்ஷ் நல்லதுன்னு” சொல்ல வச்ச சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. எச்.ஐ.வியாய் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சார்ந்த ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேனென உறுதி பத்திரமும் எழுதிக் கொடுத்திருக்கிறார். யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்கிற தைரியத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண்ணும் பார்த்து, நாளும் குறித்தாயிற்று. நண்பர்களின் திருமண வாழ்த்து ப்ளெக்ஸில் மணமகள் -மகன் போட்டோ போட்டிருக்க, அதைப் பார்த்த மருத்துவமனை ஊழியை ‘அடடா இவன் அவனில்லை இவனுக்கு கல்ய...