இடைவெளி
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் எழுதவேயில்லை. ஏனிந்த இடைவெளி?. அடுத்த திரைப்படத்துக்கான கதை விவாத வேலை, எழுத்து என போய்க் கொண்டிருந்தாலும், கொத்து பரோட்டாவை மட்டுமாவது எழுதி விடுவேன். அதை எழுதவில்லை என்றதும் நிறைய வெளிநாட்டு வாழ் வாசகர்கள் மெயில் அனுப்பியிருந்தார்கள். (அட நிஜமாத்தான் சொல்றேங்க..). முக்கியமாய் நான் ஏன் எழுதவில்லை? எனக்கு ஏதாவது பிரச்சனையா? உடல் நலமில்லையா? என்றெல்லாம் அன்பு தோய்ந்த கேள்விகள். கொத்து பரோட்டா பத்தி அடுத்த வாரம் முதல் குமுதம் இதழில் வெளிவர இருக்கிறது. கொஞ்சம் செப்பனிட்ட வர்ஷனாய். அதனால் தான் எழுதவில்லை. இதனடுவே ஒரு தொடர் எழுத வேறு ப்ளான். விரைவில் எல்லாம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அன்புக்கும் நன்றி. கொத்து பரோட்டா 2.0 வுடன் உங்களை சந்திக்கிறேன்.
Comments
From starting every Friday I have read your review of new movie.after that only Monday received Kothuporota with review.now you stopped all those things.
நலம் நன்றி.