கொத்து பரோட்டா -2.0-5
கேட்டால் கிடைக்கும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் டெலவரியின் போது ஐம்பதிலிருந்து சில இடங்களில் 100 ரூபாய் வரை கூட சிலிண்டர் பில்லுக்கு மேலாக வாங்குகிறார்கள். கேஸ் விலை ஏற ஏற இதுவும் ஏறி கொண்டேதானிருக்கிறது. ஆரம்ப காலங்களில் பாவம் இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வருகிறார்களே என்ற பரிதாபத்தில் கொடுத்தது போக, இன்றைக்கு கொடுக்காவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்கிற பயம் ஏற்படும் அளவிற்கு மாறியிருக்கிறது. ஆனால் சட்டப்படி நாம் டெலிவரி செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுக்க தேவையேயில்லை. நாம் சிலிண்டருக்கு கொடுக்கும் விலையிலேயே அவர்களுக்கான டெலிவரி சார்ஜும் சேர்த்துத்தான் வாங்குகிறார்கள். இதே சிலிண்டரை நேரிடையாய் ஏஜென்சியிடம் போய் நீங்களே வாங்கி வந்தால் டெலிவரி சார்ஜ் குறைத்துத்தான் பணம் வாங்க வேண்டும். டெலிவரி செய்கிறவர்களுக்கு பணம் கொடுக்காவிடில் சிலிண்டரை கொடுக்காமல் போய்விடுவார்கள் என்ற பயம் தான் நாம் பணம் கொடுப்பதற்கு காரணம். ஆனால் உங்களுக்கு பில்லான சிலிண்டரை நீங்க வாங்க மறுத்தால் அதை உடனடியாய் எல்லாம் வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாது. உங்கள் வீட்டில் ஆள் இல்லை என்று எழுதி கொடுக்க முட...