கேட்டால்
கிடைக்கும்
கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள்
டெலவரியின் போது ஐம்பதிலிருந்து சில இடங்களில் 100 ரூபாய் வரை கூட சிலிண்டர் பில்லுக்கு
மேலாக வாங்குகிறார்கள். கேஸ் விலை ஏற ஏற இதுவும் ஏறி கொண்டேதானிருக்கிறது. ஆரம்ப காலங்களில்
பாவம் இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வருகிறார்களே என்ற பரிதாபத்தில் கொடுத்தது போக,
இன்றைக்கு கொடுக்காவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்கிற பயம் ஏற்படும் அளவிற்கு மாறியிருக்கிறது.
ஆனால் சட்டப்படி நாம் டெலிவரி செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுக்க தேவையேயில்லை. நாம்
சிலிண்டருக்கு கொடுக்கும் விலையிலேயே அவர்களுக்கான டெலிவரி சார்ஜும் சேர்த்துத்தான்
வாங்குகிறார்கள். இதே சிலிண்டரை நேரிடையாய் ஏஜென்சியிடம் போய் நீங்களே வாங்கி வந்தால்
டெலிவரி சார்ஜ் குறைத்துத்தான் பணம் வாங்க வேண்டும். டெலிவரி செய்கிறவர்களுக்கு பணம்
கொடுக்காவிடில் சிலிண்டரை கொடுக்காமல் போய்விடுவார்கள் என்ற பயம் தான் நாம் பணம் கொடுப்பதற்கு
காரணம். ஆனால் உங்களுக்கு பில்லான சிலிண்டரை நீங்க வாங்க மறுத்தால் அதை உடனடியாய் எல்லாம்
வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாது. உங்கள் வீட்டில் ஆள் இல்லை என்று எழுதி கொடுக்க
முடியும் என்றாலும், அதற்கான சிலிப் ஒட்டியிருக்க வேண்டும், நமக்கு தெரியப்படுத்தியிருக்க
வேண்டும். அதையும் மீறி தரவில்லையென்றால் ஒரே ஒரு மெயில் மற்றும் கால் உங்கள் ஏரியா
ரீஜினல் ஆபீஸுக்கு ஒர் புகார். நிச்சயம் உங்கள் புகாருக்கு பலன் கிடைத்துவிடும். புதிய
கேஸ் கனெக்ஷனை நீங்கள் ஆன்லைனில்யே புக் செய்து கொள்ளலாம். அடுப்பு வாங்கணும், இடுப்ப
வாங்கணும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை. அதே போல உங்களுடய ரீஃபில்லை ஆன்லைனிலேயெ புக்
செய்து கொள்ளலாம். எக்ஸ்ட்ரா காசு இல்லாமல். அன்லைனில் பணம் கட்டிவிட்டால் அவர்கள்
டெலிவரி செய்தே ஆக வேண்டும். என்னடா அவனவன்
லட்சம் கோடின்னு கொள்ளையடிக்கிறான் அவனையெல்லாம் கேட்க வக்கில்லை. இப்படி அஞ்சுக்கும்
பத்துக்கும் வேலை செய்யுற கூலியாட்களின் வயிற்றில் அடிக்க வழி சொல்கிறேனே என்று என்னை
திட்டுவீர்களானால், அதுதான் நம் தவறே.. நீ
கொடுக்கிறவன் கிட்ட வாங்கிக்க என்று டெலிவரி ஆட்களின் சம்பளக் குறைவுக்கு அவன் முதலாளி
சொல்லும் காரணம். டெலிவரி சார்ஜ் ஏற்றி தாருங்கள்
என்று எண்ணை கம்பெனியிடம் கேட்டால் நான் கொடுக்குற காசு நீ அவனுக்கு சம்பளமா தரது கூட
இல்லை. அதான் அவன் கஸ்டமர் கிட்ட வாங்கிக்கிறானே என்பது கம்பெனி காரணம். இப்படி நாம்
நம் உரிமை தெரிந்தோ, தெரியாமலேயோ கேள்வி கேட்காமல் விட்டதினால் கிடைக்கும் பலன். ஊழல்.
நம்மிடம் கொள்ளை. இன்று கேள்வி கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கான பதில் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அழியாத கோலங்கள் – சாருஹாசன்
அனுபவத்திற்கு வயது தேவையில்லை.
ஆனால் ஆண்டு அனுபவிக்க வயது தேவை. அத்தகைய அனுபவத்தை அசைப் போட்டுக் கொண்டாட க்ரட்ஜ்
இல்லாத மனசு வேண்டும். பெரும்பாலான பெருசுகளுக்கு இது வாய்ப்பதில்லை. இவருக்கு வாய்த்திருக்கிறது.
மனுஷன் கொண்டாடியிருக்கிறார். பேஸ்புக்கில் இவர் எழுதிய காலத்திலேயே வாசகர்களால் வரவேற்கப்பட்ட
எழுத்து. புத்தக வடிவில் இன்னும் அட்டகாசம். ஒவ்வொரு எபிசோடும் ஒரு விதமான நாஸ்டால்ஜியா
எழுதிய அவருக்கும் நமக்கும். எளிய நடை, ஊடே வரும் நகைச்சுவை, சர்காஸம். முகத்தில் அரையும்
உண்மை என படு சுவாரஸ்யமான புத்தகம். இவர் முத்துராம லிங்க தேவருக்கு, இமானுவேலுக்கு
வக்கீலாய் ஆஜரானது. அப்பாவின் மூலமாய் கிடைத்த சினிமா ஆளுமைகளின் நட்பு. இவரது காதல்.
இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க சாருஹாசனுக்கும், அவரது அப்பாவுக்குமிடையே நடந்த சம்பாஷணை..
“எனக்கு கல்யாணம் , குடும்பம், இதிலெல்லாம் நம்பிக்கையில்லை”
“You need sex.. you are born because your parents had sex..”
“if you are worried about my sex, I know where to find it.. and when to find it!”
“You need sex.. you are born because your parents had sex..”
“if you are worried about my sex, I know where to find it.. and when to find it!”
நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாத்தனம்.. நாங்க பண்ணி வச்சாத்தான் அதுக்கு பேர் கல்யாணம்” என்கிறார். சாருஹாசன் அப்பா.
கமல் வசனமெழுதும் படங்களில் வரும் ஷார்ப்னெஸ் எங்கிருந்து என்று இப்போது புரிகிறது.
பயர் படத்திற்கான எதிர்ப்பு இருந்த காலத்தில் அதற்கு ஆதரவாய் இவரும் பாலுமகேந்திராவும் கலந்து கொண்டு பேசிய பேச்சு படு சுவாரஸ்யம். விழாவின் முடிவில் பாலு மகேந்திரா இவரிடம் சொன்னது..”உங்களுக்குள்ள ஒரு குட்டிப்பையன் ஒளிந்து கொண்டிருக்கிறான் அவனை மட்டும் தப்பியோட விட்டுராதீங்க” என்றாராம். சாருஹாசன் எனும் என்பது சொச்ச முதியவரிடம் குறும்பு கொப்பளிக்கும் குட்டிப்பையன் , இளமை துள்ளாடும் இளைஞன், யூத்ஃபுல்லான லஜ்ஜையின்றி வளைய வரும் பெருசு. என கலந்து கட்டிய பொக்கே இந்த அழியாத கோலங்கள். டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடந்த சில வருடங்களாய் இந்தியாவில் அமெரிக்க சீரியல்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதில் முதன்மை கேம் ஆப் த்ரோன். நம்முர் மகாபாரதத்தின் போலத்தான். ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் போது கேள்விப்பட்டு மொத்த சீசனையும் டவுன்லோடிட்டு பார்த்தாகிவிட்டது. நம்மூர் சீரியல் போல தெனம் மூணு சீனை வச்சிட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் பழிவாங்காம விடமாட்டேன் என்கிற பஞ்ச் டயலாக்கெல்லாம் இல்லாமல் சினிமாவை விட ஒரு படி மேலே போய் டெக்னிகலாகவும், கண்டெண்ட்டகாவும் மிரட்டி வருகிறார்கள். அதில் மேற்ச் சொன்ன சீரியலின் ரேஞ்சே வேறு. நெட்ப்ளிக்ஸ் வந்த பிறகு நிறைய சீரியல்கள், டாக்குமெண்டரிகள் என பல விஷயங்கள் ஓப்பனாக, இன்றைக்கு தமிழ் சேனல்களுக்கு போட்டியாய் ஆங்கில சாட்டிலைட் சேனல்கள் ஹெச்.டியில் அமெரிக்காவில் ஒளிபாரப்பாகும் அதே நேரத்தில் இங்கே என போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. சினிமாவை மிஞ்சிய வயலென்ஸ், செக்ஸ் ட்ரக்ஸ் போன்றவைகளின் ஆதிக்கம் அதிகம். அதிலும் கேம் ஆப் த்ரோனில் யாராவது ஒரு புதுப் பெண்ணைக் காட்டினால் இவளை நிர்வாணமாய் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள் அவளை அக்கதையில் உள்ள எவனோ முடித்திருப்பான். இது போன்ற விஷயங்கள் உறுத்தினாலும், அபாரமான திரைக்கதை, வசனம், மேக்கிங், நடிப்பு என பெரும் பட்ஜெட்டுகளில் நம்மை அசர அடிக்கத்தான் செய்கிறார்கள். பெரிய திரையில் ஏன் சூப்பர் ஹீரோ கதைகள் மட்டுமே பெருமளவில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள் என்பதற்கு காரணம் இளைஞர்கள், குறிப்பாய் குழந்தைகள் இவர்கள் தான் டார்கெட். நல்ல தரமுள்ள விஷயங்கள் டிவியை ஆக்கிரமித்திருக்கிறதும் ஒர் காரணம் தான். சில நல்ல டிவி சீரிஸ்கள் பற்றி தொடர்ந்து எழுத எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Yellow Festival – மஞ்சள் நீராட்டு விழா
எங்கே வயதுக்கு வந்தது தெரிந்துவிட்டால்
படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்பது போன்ற பயத்தில் தான் வயதுக்கு வந்ததையே சொல்லாத
மகள். தான் வயதுக்கு வந்த போது பெற்றோர்களிடையே ஆன பிரிவால் சடங்கு கழிக்கப்படாமல்
ஊராரால் ஒதுக்கி வைக்கபட்ட தாய். சடங்கு செய்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க, மகளுக்கோ
ஸ்கூல் கல்சுரல் தான் முக்கியமாய் படுகிறது. அழுகிறாள். ஆகாத்தியம் செய்கிறாள். ஏன் தற்கொலை செய்து கொள்ளக்கூட தயாராகிறாள் முடிவு
என்ன என்பது தான் இக்குறும்படத்தின் கதை
தென் மாவட்டங்களில் நிறைய மஞ்சள்
நீராட்டு விழா ப்ளெக்ஸுகளை பார்த்திருப்பீர்கள். நிறைய படங்களில் அந்நிகழ்வில் நடக்கும்
கடா வெட்டி, குடி, கொண்டாட்டங்களை பார்த்திருப்பீர்கள். ஏன் கலந்து கொண்டு கூட இருந்திருப்பீர்கள்.
என்ன இது காட்டுமிராண்டித்தனம். பெண்களுக்கு ஏற்படுகின்ற பயாலஜிக்கல் மாற்றங்களை இப்படி
ஊர் கூடி போஸ்டர் அடித்து அவமானப்படுத்துவார்களா? என்று கொதிப்பவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள். மஞ்சள் நீராட்டு விழா என்பது சென்னை போன்ற நகரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்
ரகசிய குடும்ப விழாவாக போய்விட்டது. ஆனால்
இக்குறும்படம் மஞ்சள் நீராட்டு விழாவைப் பற்றி பேசுகிறது. அதன் கலாச்சாரம், முக்யத்துவத்தைப்
பற்றி பேசுகிறது. பாரதி கண்ணன், தீபா ஷங்கர், நேகா மேனன், ரங்கம்மா பாட்டி என எல்லோரும்
படு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். இம்ரான் அஹமதின் அழகான டோண்ட் ஒளிப்பதிவு, கார்த்திக்
ராஜாவின் அருமையான பின்னணியிசை, லெனின் அவர்களின் கிரிஸ்ப் எடிட்டிங். ஆங்கானே கொஞ்சம் போதனையாய் இருந்தாலும், உனக்கு
பிடிக்காதது என்பதை மத்தவங்களுக்கு பிடிக்கிறாப் போல சொல்லு என்று கதையில் வரும் பாட்டி
சொல்வது போல, நெகிழவாய் திரைக்கதை வசனமெழுதி
மனதில் நிற்கிறார் இயக்குனர் கமல் சேது. நிறைய விருதுகளை பெற்ற இக்குறும்படம் நிச்சயம்
பாராட்டப்பட வேண்டிய ஒரு பதிவு. https://www.youtube.com/watch?v=6Oem1cV6vBk
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை-
பிரியாணி என்று யோசனை வந்துவிட்டால்
வெஜ் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, தமிழ் முஸ்லிம் பிரியாணி என லிஸ்ட் போய்க் கொண்டேயிருக்கும்.
அதில் அதிமுக்யத்துவம் வாய்ந்தது ஹைதராபாத் பிரியாணி. இங்கே சென்னையில் ஏகப்பட்ட கடைகளில்
ஹைதராபாதி பிரியாணி என்று போட்டிருந்தாலும் வழக்கம் போல முஸ்லிம் பிரியாணிதான். இந்த
பிரியாணி கும்பலில் ஹைதராபாதி என்பது எக்ஸ்க்ளூசிவ். நல்ல பிரியாணி அரிசியில் கொஞ்சம்
கூட எண்ணெயே இல்லாமல், , கீழே ஒரு லேயர் பிரியாணி ரைஸ், நடுவே நல்ல மசாலாக்களோடு, மட்டனோ,
சிக்கனோ வைக்கப்பட்டிருக்க, அதன் மேல் மேலும் கொஞ்சம் பிரியாணி ரைஸ் போட்டு, அதன் மேல்
கொஞ்சமே கொஞ்சம் ஃப்ரைட் துருவிய ஆனியன் டாப்பிங். கூட தொட்டுக்கொள்ள மிர்ச்சி சட்னி,
தண்ணியாய் மோராகவும் இல்லாமல் தயிராகவும் இல்லாத பச்சை மிளகாய் போட்ட ரைய்த்தா. இதோடுதான்
தருவார்கள். பாவர்சி என்றால் செஃப் என்று அர்த்தமாம். ஹைதராபாத்தில் பாரடைஸ் போன்ற
பேர் பெற்றவர்கள் இருக்க இந்த பாவர்ஸி எல்லாரையும் அடித்து தூளாக்கிய கதை ஒன்று உண்டு.
இந்த பிரியாணியை நம் சென்னைக்காரர்கள் பெரும்பாலும் சாப்பிடத் தெரியாமல் சாப்பிட்டு
அப்படி ஒன்ணும் சிலாக்கியமா இல்லை என்பார்கள். நடுவே பீஸோடு எடுத்துப் போட்டு மேல்
லேயர் சாதத்தையும், கீழ் லேயர் சாதத்தையும் கறிமசாலோடு கலந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான்
டிவைனுக்கான அர்த்தம் உங்களுக்கு புரிபடும். ஹைதராபாத்தில் க்ரீன், ப்ளூ, ரெட் என ஏகப்பட்ட
பாவர்சிக்கள் இருந்தாலும் ஆர்.டி.சி ரோட்டில் உள்ள பாவர்சி தான் ஒரிஜினல். ஸோ.. ஹைதராபாத்
போனால் தேடிப் போயாவது சாப்பிட்டு விடுங்கள்.
குமுதம் -26/10/16
Post a Comment
2 comments:
ஹைதிராபாத் பிரியாணி - சஞ்சீவ் கபூரே யுடியுபுல கத்து கொடுக்குறாரு. மட்டனை வேகவைக்காமல் எல்லா மசாலாவையும் (மிளகாய்க தூள் / பிரியாணி தூள் தேவை அல்ல ) கூடவே ௨௦ பச்சை மிளகாயை போட்டு - குண்டானில் போட்டு மேலே அறுபது சதவீதம் வெந்த அரிசியை போட்டு அலுமினியம் பேப்பர் போட்டு மூடிவிவேண்டும். முதல் 15 நிமிஷம் நேரடி தீயிலும் அடுத்த அரை மணி நேரம் ஒரு டவாவுக்கு மேலும் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு முக்கால் மணி நேரம் கழித்து திறந்தாள் பிரியாணி ரெடி..
இது ஒரு வகை
இன்னொரு வகை தம் பண்ணாமல் கிளறி விட வேண்டியிருக்கும்.
ஆச்சர்யம் மட்டன் வெந்து விடுவதுதான் (நார்மலா வேகவச்சா குக்கரில் 7 விசில் விடவேண்டியிருக்கும்)
You mentioned you have downloaded Game of Thrones. Mind if you could share where and how much you paid to download? I would like to watch the series as well.
Post a Comment