காதல்
என்கிற பெயரில் ஸ்டாக்கிங் அதாவது பெண்களை பின் தொடர்ந்து, கம்பெல் செய்து, மனரீதியாய்,
உடல் ரீதியாய் துன்புறுத்தி, செய்யடுவது தான் காதல். என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தும் சினிமாக்களைப் பற்றி
பேச அம்பேத்கார் பெரியார் ஸ்டடி சர்க்கிளின் சார்ப்பாக அழைத்திருந்தார்கள். சுவாதியில்
ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் நடந்த ஒருதலைக் காதல் கொலைகளைப் பார்க்கும் போது இது
நிச்சயம் தீவிரமாய் பேச வேண்டிய ஒரு விஷயம். ஆனால் அதை சினிமாவை மட்டுமே குறிவைத்து
பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சென்னை போன்ற இடங்களில் கூட ஆண் பெண் இணைக்கமாய் பழக்கக் கூடிய சமூதாய நிலை
இன்னும் ஏற்படாத நிலையில், நகரமில்லாத ஊர்களில் ஆணும் பெண்ணும் பேசுவதே ஆச்சர்யம் மிகுந்த
விஷயமாய் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணை காதல் செய்ய அவளை பின் தொடர்ந்து இம்ப்ரஸ் செய்து, தன் காதலை சொல்வது தான் சரி என்கிற எண்ணம் இருப்பதும், அதை அவள் ஏற்க மறுக்கும் போது அதை தோல்வியாய்,
அவமானமாய் பார்க்கும் மனநிலைக்கு ஆண் தள்ளப்படுவதால் நடக்கும் குற்றங்களும் பார்க்கும்
போது, சினிமா தான் இவர்களை கெடுப்பதாய் மனம்
பதைக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரை, இதற்கான மாற்றம் நம் வீட்டிலிருந்து வர வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி.
குடும்பத்தில் பெண்களுக்கு கொடுக்கும் முக்யத்துவம். சக பெண்களை ஆசா பாசம் உள்ள மனுஷியாய் மதிப்பது.
நம் குழந்தைகளுக்கு எப்படி குட் டச் பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோமோ அது போல, நம் குழந்தைகளின் இம்மாதிரியான வன்முறைகளுக்கு இடமாகும் போது,
சட்டரீதியாய் நடவடிக்கை எடுக்க, பெற்றோராய் அவர்களுக்கு ஆதரவாய் நிற்பதும், வன்முறையில்
இறங்கும் போது ஆம்பளைப் புள்ள அப்படித்தான் இருப்பான் பொம்பளை புள்ள நீ ஒழுங்கா இருந்தா
அவன் ஏன் இப்படி பண்ணுறான் என்று அந்த ஆண் மகனைப் பெற்ற அம்மாவே சப்போர்ட் செய்யாமல்
இருக்க அவர்களுக்கு இது தவறு, தண்டனைக்குரிய செயல் என்று சொல்லித்தர வேண்டும். ஆனால்
இந்த மாற்றங்கள் மெதுவாய்த்தான் வரும். நாம் சோர்வடையக்கூடாது. தொடர்ந்து செயல் பட்டுக்
கொண்டே வரும். எப்படி பெண்களுக்கு எதிரான விதவை திருமணம், சதி, போன்றவைகள் மாறியதோ
அது போல மாறும். மாற்றம் வேண்டுமெனில் இருக்கிற
சிஸ்டத்தோடு இயங்கினாலேயன்றி மாற்றத்தை கொண்டு வர முடியாது. முயல்வோம். பெண்ணை, பெண்மையை போற்றவெல்லாம் வேண்டாம். சக உயிரனமாய்,
எல்லா உரிமைகளையும் கொடுத்து மதிக்க கற்றுக் கொள்வோம், கற்றுக் கொடுப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் - பதாகன்
இண்ட்ரோவர்டான
இளைஞன். அவனுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது. தினமும் அந்தப் பெண்ணை தூரத்திலிருந்து பார்த்து
வருவதை அவனின் தாத்தா கவனித்து, அவன் சார்பாக பெண் கேட்கிறார். பார்மல் பெண் பார்க்கும்
சம்பவத்திற்கு முதல் நாள் அவன் வீட்டில் ஒர் கட்டெறும்பு அவனை கடித்துவிடுகிறது. அதனால்
அவனது முகம் மிக கோரமாய் காட்சியளிக்கும் படியாக மாறிவிட, அப்பெண்ணின் பெற்றோர்கள்
பெண் தர மறுத்து வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கல். கோபத்தில்
அந்த கட்டெறும்பைத் தேடி கொல்ல முயற்சிக்கிறான். அப்போது வரும் செய்தி தான் க்ளைமேக்ஸ்..
லீனியராய் சொன்னால் சாதாரணமாகத் தெரியும் கதையை
படு சுவாரஸ்யமாக்கியது வைத்தது நான்லீனியர் ஸ்க்ரீன்ப்ளே, விக்னேஷின் எடிட்டிங், கே.ஜி.வெங்கடேஷின்
ஒளிப்பதிவு, நிர்மல் ராஜின் இசையும் தான் காரணம். எழுதி இயக்கியவர் ரமேஷ். தாத்தா அரந்தை
மணியன், பேரன் சித்தார்த், நாயகி மிஷா கோஷல் ஆகியோரின் ஸ்கிரின் ப்ரெஸென்ஸ்.. குட்..
இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்ததை
மறுக்க முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=LNe3fX5tvD4
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Breaking Bad
2013
ஆம் ஆண்டு கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டில் அதிகப்பட்ச விமர்சகர்களால் பாராட்டுப் பெற்றது.
அமெரிக்க டெலிவிஷன் வரலாற்றிலேயே இந்த சீரியலின் கடைசி எபிசோட் அன்று அதிகபட்ச பார்வையாளர்களை
கவர்ந்தது. ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது என்பது போன்ற பல பெருமைகள் இந்த சீரீஸுக்கு
உண்டு. ஜனவரி 2008 -செப்டம்பர் 2013 வரை ஐந்து சீசன்கள் ஏபிசி நெட்வொர்க்கில் வெளியானது.
வின்சி கிலிகன் என்பவர் உருவாக்கிய சீரிஸ். கதை இது தான். வால்டர் வொயிட் எனும் சாதாரண ஹை ஸ்கூல் கெமிஸ்டரி
டீச்சர். அவருக்கு ஒரு மாற்று திறனாளியான மகனும், கர்பத்துடனான மனைவி ஸ்கைலரும் உண்டு. பெரிதாய் ஏதும் ஆசைப்படாத உழைக்கும் சாதாரணனான வொயிட்டின்
வாழ்க்கையில் திடீரென ஒரு அதிர்ச்சி. எந்த விதமான புகைக்கும் பழக்கமும் இல்லாத அவருக்கு
லங்க் கேன்சர். ஆடித்தான் போகிறார். இனி தன் குடும்பம் எப்படி சர்வைவ் ஆகும்? அதற்கான
பணத்திற்கு எங்கு போகும்? பிறக்கப் போகும் குழந்தைக்கும், வளர்ந்து நிற்கும் மகனுக்கும்
என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி. தான் சாவதற்குள் எப்படியாவது பணம் சம்பாரிக்க வேண்டுமென்று விழைகிறார். அப்போதுதான்
அவருடய மாணவனான ஜெஸ்ஸி பிங்க் மேனை சந்திக்கிறார். அவன் ’மெத்தம்பெட்டமைன்’ எனும் கிரிஸ்டல்
வகை போதை பொருளை சிறு அளவில் தயாரித்து விற்றுக் கொண்டிருக்க, துரித பணம் சம்பாதிக்க,
அவனுடன் சேர்ந்து நல்ல தரமான போதை வஸ்துவை தயாரித்து விற்க ஆரம்பிக்கிறார். பிடித்தது
புலி வால். அது நேர்மையான கெமிஸ்டரி வாத்தியாரை போதை பொருட்களை தயாரிப்பவனாக மாற்றியது
மட்டுமல்லாமல் அதன் பின்னணியில் உள்ள குற்ற காரியங்களையும் வழியேயில்லாமல் செய்ய விழைய,
அதீத பணம் ஒரு புறம். தான் செய்யும் ரகசிய காரியம் தன் குடும்பத்துக்கு தெரியக் கூடாது
என்ற பயம் ஒரு புறம். இன்னொரு பக்கம் ட்ரக் என்போர்ஸ்மெண்ட்டில் போலீஸ் அதிகாரியாய்
இருக்கும் தன் சகலைக்கு தெரியாமல் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். என கதை போக.. ஒரு
கட்டத்தில் அவனது கேன்சர் குணமாக ஆரம்பிக்கிறது. ஆனால் புலி வாலை விட முடியாமல் அவன்
படும் போராட்டம். அவனது எமோஷனல் வீக்னெஸ்சான ஜெஸ்ஸி பிங்க்மேனின் கேரக்டரால் படும்
அவதிகள். இந்த மெத் மருத்தின் பின்னணியில் இருக்கும் போதை மருந்து நெட்வொர்க். அதன்
துரோகங்கள். பழிவாங்கல். சட்ட ரீதியான சிக்கல்கள். போதையுலகிலும், போலீஸ் வட்டாரத்திலும்
ஹைசென்பர்க் என உருவகப்படுத்தப்படும் பிம்பம். இப்படி எல்லா விஷயங்களிலிருந்தும் இருக்கவும்
முடியாமல், வெளிவரவும் முடியாமல் அடையும் மன உளைச்சல். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும்
ஜெஸ்ஸியால் ஏற்படுத்தப்படும் டெக்னிக்கல் குளறுபடிகளை
சிம்பிள் கெமிக்கல் ஜித்துக்கள் தப்பிக்கும்
ஐடியாக்கள். அருமையான எமோஷனல் சீன்கள். அதீத
வயலென்ஸ். கொஞ்சம் கம்போஸ்டான செக்ஸ். என பார்க்க
ஆரம்பித்தால் நம்மை விடாது கட்டிப் போட்டுவிடும் சீரியல். ப்ராயன் க்ரான்ஸ்டனின் அபாரமான
நடிப்பு. அருமையான கேரக்டர்கள். விஷுவல்ஸ். மேக்கிங். க்ரைம் திரில்லர் வகையறாக்களின்
மேல் அதீத காதல் உள்ளவராக இருந்தால் இந்த சீரீஸ் ஒரு விடாது கருப்பு. ஐந்து சீசனையும்
பார்க்காமல் விடாது. நெட்ப்ளிக்ஸில் தற்போது கிடைக்கிறது. என்ஜாய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அம்மணி
ஃபீல்
குட் வகைப் படங்கள் ஒரு வகையென்றால் நிஜ வாழ்க்கையின் பக்கத்தில் நடக்கும் சம்பவங்களை
வைத்து வரும் படங்கள் இன்னொரு வகை. அதில் ரெண்டாவது வகையில் வரும் இந்த அம்மணி. சாலம்மா
எனும் கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் ஆயாதான் படத்தின் கதாநாயகி. ஆனால் அவள் வீட்டில் யார் ஆதரவும் இல்லாமல் வாழும்
அம்மிணி எனும் பிராமண மூதாட்டி தான் கதையின் நாயகி. கொஞ்சமே கொஞ்சம் நீட்டி முழக்கினாலும்
டிவி சீரியல் மேட்டர் என்று சொல்லிவிடக்கூடிய கதை தான். அதை குட்டிக் குட்டியான காட்சிகளால்
சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன். ரயில் தண்டவாளம். ரயில்
பின்னணியில் இருக்கும் வீடு. இயல்பான வசனங்கள். மருமகளாய் நடித்திருக்கும் அந்த இரு
பெண்களின் தேர்வு. அம்மிணி பாட்டியின் கேரக்டரைஷேஷன். கேயின் பின்னணி மற்றும் சாருகேசியில்
அமைந்த “மழை இங்கில்லையே” ஒரு அட்டகாசப் பாடல். இப்படியான எல்லா பாஸிட்டிவ் விஷயங்களை
மீறி, படத்தின் நீளத்துக்காக வரும் ரோபோ சங்கர் குத்து பாட்டு, கொஞ்சம் நீட்டி முழக்கப்படும்
குடும்ப காட்சிகள், கன்வின்ஸிங் இல்லாத க்ளைமேக்ஸ்
மட்டுமே கொஞ்சம் இடறுகிறது. பட்.. கொரிய படங்களைப் பாருங்கள். ஈரானிய படங்களைப் பாருங்கள்.
வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்படும் கதைகளை எவ்வளவு அருமையாய் எடுக்கிறார்கள் என்று பக்கம்
பக்கமாய் எழுதுகிறவர்கள் கூட போய் பார்த்ததாய் தெரியவில்லை. காரணம் திரையிட திரையில்லாமை
ஒரு புறம். அப்படியே திரையிட்ட அரங்குகளில்
சேரும் கூட்டமும் ஒரு காரணம். நான் பார்த்த முதல் நாள் காட்சியில் மொத்தமே முப்பது
பேருக்கு மேல் இல்லை. பாப்கார்ன் விக்காத எந்த படத்தையும் தியேட்டர்காரர்கள் வைத்திருக்க
விரும்புவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
கேட்டால் கிடைக்கும்
மேக்ஸில்
தீபாவளி பர்சேஸ். பில் போடுமிடத்தில் நான் மிகவும் எதிர்பார்த்த பஞ்சாயத்து. துணிகளை
கொடுக்கும் பைகளுக்கு பணம் கேட்கும் படலம். நான் கொடுக்க மாட்டேன் என்றேன். ”இல்லை
சார்.. கவர்மெண்ட் ரூல்” என்றார். “எது பைய விலை விக்கணும்ங்கிறதா?” என்பது சரியான
பதிலில்லை. “அரசு ப்ளாஸ்டிக் உபயோகிப்பதை தடுக்கத்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
ஒன்று பையை மக்கள் கொண்டு வருவார்கள். அல்லது உங்களைப் போன்ற பெரு வியாபாரிகள் அதற்கான
மாற்றை கொண்டு வந்து ப்ளாஸ்டிக்கை ஒழிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தான். நீங்க ப்ளாஸ்டிக்கை
ஒழிக்கணும்னு நினைச்சா.. துணிப்பையையோ, அல்லது சணல் பையையோ தயாரிச்சு. அதுக்கு காசு
வாங்கியிருந்தாகூட இந்தனை வருஷத்துல ப்ளாஸ்டிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழிச்சிருக்கலாம்.
பட்.. ஒரு ரூபாய் வாங்க ஆரம்பிச்சு, இன்னைக்கு ஏழு ரூபா வரைக்கும் அதுவும் டேக்ஸோட
வாங்குறீங்க. இதுல ரெண்டு பக்கத்துல உங்க விளம்பரம் வேற. ஸோ.. காசு கொடுத்துதான் பைய
வாங்கணும்னா.. உங்க விளம்பரம் இல்லாம கொடுங்க.. இல்லை துணிப்பையை விலைக்கு கொடுங்க.
அதுவும் இல்லைன்னா.. பையை ப்ரீயா கொடுங்க.. எதுவுமே முடியாதுன்னா நான் இந்த துணிகளை
வாங்கப் போறது இல்லை” என்றேன். சுற்றியுள்ள மக்களிடமிருந்து ஏகோபித்த குரலில் “கேளுங்க..சார்..
கேளுங்க சார்..” என்ற உற்சாக குரல் வர, “எல்லாத்துக்கு
யாராவது வந்து கேட்கணும்னு ஏன் காத்திருக்கீங்க? நீங்களும் கேளுங்க கிடைக்கும் என்றேன்.
கிட்டத்தட்ட நான் பில் போட்டு வெளியே வரும் வரை அனைவரின் ப்ளாஸ்டிக் பைக்கு விலையில்லாததாய்
ஆனது. கேட்டால் கிடைக்கும் நம்புங்கள்.
Post a Comment
6 comments:
well written
Central govt 500, 1000 unga karuthu enna. I expected. Mooche vidala ?
Did you stop writing in kumudam?
Did you stop writing in kumudam?
@sriabhaya hasthan its from kumudam only
Breaking Bad Paarthachu, Romba Thanks, Worth watching I like Aaron Paul (Jessy Pinkman) character.
Suggest me another one Cable.
Post a Comment