கொத்து பரோட்டா 2.0-10
கொத்து பரோட்டா 2.0-10 நாடே ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அமெரிக்காவுக்கு ஒர் 9/11 போல, நம்மூருக்கு ஒரு 9/11. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால். கருப்புப் பணத்தை, ஐ.எஸ்.ஐயினால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க ஊடுருவப்பட்டிருக்கும் கள்ளப் பணத்தை , வரிக்குள்ளேயே வராத பாரலல் மணியை கணக்குக்குள் கொண்டு வர, விலை வாசி குறைய, ரியல் எஸ்டேட் மார்கெட் சீர் பட, நாட்டின் பொருளாதாரம் மேம்பட, என ஆயிரம் ப்ளஸ்கள் இந்த அறிவிப்பால் நடக்கும் என்கிற பாஸிட்டிவ் உணர்வு முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கத்தான் செய்தது. அம்பானிக்களுக்கும் அதானிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாத மோடி அரசு என ஒரு பக்கம் இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் கோஷமிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரெண்டொரு நாள் கஷ்டப்பட தயாராக இருக்க மாட்டோமா? என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கு...