கொத்து பரோட்டா 2.0-14
கொத்து பரோட்டா -2.0-14 செல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து கலாய்த்தே அதற்கான டி.ஆர்.பியை ஏற்றிவிட்டிருக்க, தமிழ், தெலுங்கு, கன்னடமென எல்லாம் மொழிகளிலும், யாராவது மார்கெட் போன நடிகையை வைத்து இதோ போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் மதிய நேர டி.ஆர்.பிக்கு செம்ம போட்டி. இதில் பங்கு பெரும் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளோர். ஆரம்ப காலத்தில் நான் கூட ஆட்களை செட் செய்து எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீ டிவி அலுவலகத்துக்கு போன போதுதான் தெரிந்தது, மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்களாகவே முன் வந்து ரிஜிஸ்டர் செய்து கொண்டும், சம்பந்தபட்ட இரண்டு தரப்பும் சேனல் வாசலிலேயே சண்டைப் போட்டுக் கொள்வதையும் நேரில் பார்த்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார விஷயமே அடல்டரி, செக்ஸ், ரெண்டு பொண்டாட்டி, மூணு புருஷன் என்பது போன்ற உறவு சிக்கல்கள் தான் பெரும்பாலும். எனக்கு பயமே இதைப் பார்க்கும் மக்களின் மனநிலையை பற்றித்தான். ஏற்கனவே எல்லாவிதமான நெகட்டிவ் விஷயங்களை டிவி சீரியலே நம் வீட்டு ஆண்/பெண் மனதில் அழுத்தமாய் ...