கொத்து பரோட்டா -2.0 -12
இந்திய
அளவில் மிகச் சில படங்களே ஆழ் மனச் சிக்கலைப் பற்றி பேசியிருக்கிறது. அப்படி பேசிய
படங்கள் பெரும்பாலும், மனசிக்கலை பைத்தியம் என்பது போலவே ட்ரீட் செய்திருக்கிறது. அதை
மிக அழகாய், நட்போடு, அழுத்தமாய் சொல்லி பயணித்திருக்கும் படம் தான் இந்த டியர் ஜிந்தகி. கைரா எனும் “ஹாட் “ பெண்ணின் மறக்க முடியாத உறுத்தும்
இளம்பிராய வாழ்க்கையை, நிறைவேறாத காதல்கள், டெம்ப்ளேட் பெற்றோர் மற்றும் உறவினர்கள்,
சிறந்த சினிமாட்டோகிராபர் ஆக வாய்ப்பும், அங்கீகாரமும் தேடியலையும் ப்ரெஷர் எல்லாம்
சேர்ந்து பல எமோஷனல் கதம்பமாய் வளைய வருகிறவளின் கதை இது. இவருக்கும் அவரது சைக்கியாட்ரிஸ்ட்
டாக்டர். கானுக்குமிடையே நடக்கும் சம்பாஷணைகள், அவர்களுக்கிடையே ஆன உறவின் நெருக்கம்.
அந்த சம்பாஷணைகள் மூலம் தெளிவடையும் தருணங்கள். கிடைக்கும் உறவுகள். அது கொடுக்கும்
மொனாட்டனி என போகிறது கதை. இரண்டு சிறந்த நடிகர்கள் நடிக்கும் போது அவர்களுக்குள் நடக்கும்
போட்டியாகட்டும், விட்டுக் கொடுக்குமிடமாகட்டும் க்ளாஸ். ஷாருக் ஒரு பக்கம் கலக்குகிறார்
என்றால் இன்னொரு பக்கம் இந்த சின்னப் பொண்ணு அலியா.. என்னா ஒரு எக்ஸ்பிரஷன்ஸ்.. வாவ்.. படிப்பு, கல்யாணம் தவிர ப்ரொபஷனலாய் வளைய வர மார்டர்ன்
பெண்ணுடய குடும்பத்தில் இருக்கும் குழப்பம். சினிமாவில் அதிகமான பேர் ஓர் பாலினத்தவராய்
இருப்பார்கள் என்ற பொது புத்தியில் தன் பெண்ணிடமே “நீ லெஸ்பியனா?” என்று கேட்குமிடம்,
அதை ஸ்பெல்லிங் மாற்றிச் சொல்லும் இன்னொசென்ஸ், பாட்டு பாடிக் கொண்டேயிருக்கும் புது
காதலனை பார்த்த மாத்திரத்தில் இம்ப்ரஸ் ஆகி, பின்பு அவனின் பாட்டே எதிர்யாய் போய் நிற்குமிடம்,
கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து நிகழ்காலத்தில் குழம்பி, அட்டகாசமான எதிர்காலத்தை
பாழாக்கிக்காதே என்பதை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் கெளரி ஷிண்டே.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்து ரெண்ட்ரொரு
நாளுக்கு பிறகு, வீட்டிலோ, வெளியிலோ, சந்தோஷமோ, கோபமோ, விரக்தியோ ஏதோ ஒரு மனநிலையை
நாம் கடந்திருப்போம். அப்படி கடக்கும் சடக் நிமிடங்களில் உங்கள் மண்டைக்குள் டாக்டர்
கானின் குரல் ஒலிக்காமல் இருக்காது. அது தான் படத்தின் வெற்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Little Things –
Web series
Girl In The City வெப் சீரீஸில் நடித்த ஸ்பிரிங் முடி பெண்ணான
மிதிலா பால்கர் தான் இதிலும் கதாநாயகி. காவ்யா, துருவ் இருவரும் மும்பையில் ஒரே ப்ளாட்டில்
லிவின்னில் வாழ்ந்து வரும் காதலர்கள். இருவருக்கும் வேறு வேறு ஆசை அபிலாஷைகள் இருந்தாலும்
அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கும் தினப் பிரச்சனைகள் தான் கதை. மிகச் சாதாரணமாய்
தோன்றும் சம்பவங்கள் தான் இவர்களின் இயல்பான நடிப்பு மற்றும் ரைட்டிங்கினால் க்யூட்டாகிப்
போகிறது. கேம் ஆஃப் த்ரோன், பார்ட்டி, சாப்பாடு,
வேலை, அதனால் வரும் ப்ரெஷர் டே டுடே ப்ரச்சனைகளை இளமை துள்ளலோடு அனுகியிருக்கிறார்கள்.
ஒரு எபிசோடில் மெடிக்கல் ஷாப்பில் “ஃபையர் அண்ட் ஐஸ்” என்கிற ஒரு காண்டமை துருவ் வாங்குகிறான்.
அதற்கு அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகள். வழியில் அவர்கள் சந்திக்கும் வெளியூர்
நண்பன் காண்டம் வாங்கப் போவதாய் சொல்ல, அதை அவனிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதன்
பின் விளைவுகள் பற்றி சொல்லும் பைனல் டச் காட்சி ஹிலாரியஸ் என்றால், பைனல் எபிசோடில்
அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் காட்சி.. ரொமாண்டிக். கதையின் நாயகன் துருவை தனுஷ் என்று கிண்டலடிக்கிறார்கள்.
நல்ல பிகரோடு சுற்றும் சுமார் பையன் எனும் அர்த்தத்தில். https://www.youtube.com/watch?v=YoFoKZ9HgfQ&t=6s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெரும்பாலான
பத்திரிக்கைகளில் வரும் பிரபலமானவர்களின் பேட்டிகள் பல சமயம் எடிட்டோரியல் காரணமாய்
மொக்கையாகிவிடுவது உண்டு. இணையத்தில் வரும் காணொளி பேட்டிகளில் இது வேறு விதமான இம்சையை
கொடுப்பதுண்டு. பேட்டி எடுத்தவரும், கொடுப்பவரும் ரெண்டு பக்கமும் மொக்கையாய் இருந்துவிட,
ஃபார்வர்ட் செய்து பார்க்கும் நிலை வரலாம். ஆனால் வெகு சில சமயங்களில் இம்மாதிரியான
இணைய இண்டர்வியூக்கள் சுவாரஸ்யம். பேட்டி எடுப்பவரும், கொடுப்பவரும் சுதந்திரமாய் பேசுமிடங்கள்
சுவாரஸ்யம். அதுவும் பேட்டிக் கொடுப்பவர் நம் மனதிற்கு இனியவராய் இருந்தால் இன்னும்
ஒரு படி மேலே.. அப்படியொரு பேட்டி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமினுடயது. பேட்டியெடுத்தவர்
மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீதர் பிள்ளை. இண்டர்ஸ்டிங் கான்வர்ஷேஷன். https://www.youtube.com/watch?v=3VBYBN__a_0
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
சமீப
காலமாய் கேட்டால்
கிடைக்கும் குறித்து
நிறைய ரோட்டரி
சங்க கூட்டங்களில் கடந்த
ஒரு
வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட
குழுவில் பேசி
விட்டேன். குழுவில்
பேசி வருகிறேன்.
நல்ல வரவேற்பு
கிடைக்கிறது. அதன்
பின்னர் நம்மைப்
போலவே அக்குழுவில் உள்ள
சில பேர்
தனியே போராடி
வருவதும், அது
குறித்து பேசுவது
அதிகமாகியிருக்கிறது. நாம கேட்டு
என்ன ஆயிடப்
போவுது என்ற
எண்ணம் தற்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து கேட்டால்
கிடைக்கும் என்ற
எண்ணம் தழைக்க
ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமாய் இருக்கிறது.
நேற்றிரவு போரூர்
வரை ஓலா
ஆட்டோவில் சென்றேன்.
டாக்ஸி வந்தது
பற்றியும், தன்
வாழ்க்கையைப் பற்றியும்
டிரைவர் பேசிக்
கொண்டு வந்தார்.
இன்னைக்கு கவலைப்
பட்டு என்ன
சார் பண்றது?
ஆரம்ப காலத்துல
ஒழுங்கா மீட்டர்
போட்டு ஓட்டியிருந்தா இந்த
கார், டாக்ஸியெல்லாம் வந்திருக்கவே
வந்திருக்காது என்றார்.
மீட்டருக்கு மேல்
யாரிடமும் கேட்க
முடிவதில்லை. அப்படியே
கேட்டால் உடனடியாய்
கம்பெனிக்கு போன்
செய்து கம்ப்ளெயிண்ட் செய்து
விடுகிறார்கள் என்றார்.
சந்தோஷமாய் இருந்தது..
மீட்டர் போட்டு,
சைதாப்பேட்டையிலிருந்து போரூருக்கு 131 ரூபாய்
ஆனது. அதே
தூரத்திற்கு இரவு
ஓலா டாக்ஸியில் 101.ஆட்டோவில்
12.50 டாக்ஸியில் 10 ரூபாய்.
கிலோ மீட்டருக்கு. இந்த
ஓலா, ஊபர்
போன்றவர்கள் இந்த
ட்ரைவர்களுக்கு கொடுக்கும் இன்செண்டீவ்
பற்றி ஆராய
வேண்டும். 15 டிரிப் எடுத்தால் 5000 ரூபாய்
இன்செண்டிவாம். அதில் தினப்படி ஆகும் கலெக்ஷன் கழித்தது போக, 20 சதவிகிதம்
ஓலாவின் கமிஷனாய் எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாய் 2000 ரூபாய்க்கு வண்டி 15
டிரிப்பில் ஓடியிருந்தால், 5000-2000 போக 3000 ரூபாய். அதில் 20 சதவிகிதம் என்றால்
600 ரூபாய். இது எப்படி கட்டுப்படியாகிறது
என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் பீக் அவர்
சார்ஜ் தொகை கூட கணக்கில் வைக்கப் படுகிறது என்றால்
நிச்சயம் அந்த
காசு நம்மிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது.
எப்படி வலிக்காம
எடுக்குறாங்க என்பதை
பற்றி கேட்க
ஆரம்பித்திருக்கிறேன். யாராச்சும் தெரிந்தால்
சொல்ல்லுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Post a Comment
1 comment:
Both Ola and Ober where investing and doing promo.. Soon they will start pulling money from us..
Post a Comment