கொத்து பரோட்டா -2.0-17
கொத்து பரோட்டா -2.0-17 சென்னை டூ கோவா நண்பர்களோடு பயணம். இது வரை ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஒட்டு மொத்தமாய் பயணித்ததில்லை. முதல் முறை அதுவும் கோவாவிற்கு எனும் போது சுவாரஸ்யம் அதிகமாகவேயிருந்து. அந்த சுவாரஸ்யத்தை சென்னை டூ ஆற்காடு டோல் ரோடு நாசமாக்கியது படு மோசமான ரோடுகள். ஒவ்வொரு டோலிலும் இந்த ரோட்டுக்கெல்லாம் காசு வாங்குறீங்களே இது நியாயமா? என்று கேட்டதற்கு எதிர் முனையிலிருந்து பதிலில்லை. பெரும்பாலும் நார்த் ஈஸ்ட் முகங்கள். எல்லா டோல்களிலும் பேடிஎம். டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் வாங்குகிறார்கள். கார்டு பரிவர்தனைக்கு கொஞ்சம் நேரமெடுக்கிறது. ஆற்காடுக்கு பிறகு ரோடு அருமை. அப்படியே பெங்களூர் போகாமல் நைஸ் ரோடுக்கு வழியே போக டோலுக்கு 155 ரூபாய் கொடுத்தோம். பேரே நைஸாக இருக்கிறதே ரோடும் அதே போல என்று எண்ணியது எங்கள் தவறு. பாதி ரோடு கொஞ்சம் ஏறு மாறாகத்தான் இருந்தது. பாதிக்கு பிறகு நிஜமாகவே நைஸ் ரோடு. தும்கூரிலிருந்து ஹூப்ளி வழியாய் போக முடிவெடுத்தது வண்டியை விட்டோம். அட..அட..அட.. அட்டகாசமான வெண்ணை ரோடு. காரோட்டிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் சாலை என்றே சொல்ல வேண்டும். ட்ராவலை விரும்புக...