கொத்து பரோட்டா 2.0-21
கொத்து பரோட்டா 2.0-21 The Walking Dead அமெரிக்க கேபிள் டிவி சேனல்களில் அதிகபட்சமான பார்வையாளர்களை கடந்த ஆறு வருடமாய் கொண்டிருக்கும் சீரிஸ். 2003ல் காமிக்ஸ் சீரியஸாய் வந்த கதை. 2010ல் அதை அடிப்படையாய் வைத்து டிவி சீரீஸ் ஆனது. கதையென்று பார்த்தால் சிம்பிள் தான். ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு டெபுடி ஷெரீப் நம் கதை நாயகன் ரிக். ஒரு கடத்தலை பிடிக்க போகும்போது குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் கோமாவில் இருக்கிறான். கண் முழித்து பார்க்கும் போது ஜார்ஜியா மட்டுமல்ல நாட்டில் உள்ள பெரும்பாலனவர்கள் ஜோம்பிக்களாய் மாறியிருக்க, காணாமல் போன தன் மனைவி, மகளை தேட ஆரம்பிக்கிறான். தினம் தினம் ஜோம்பிக்களிடமிருந்து தப்பிப்பது ஒருவிதமான டென்ஷன் என்றால் இன்னொருபக்கம் சர்வைவலுக்காக மனிதர்களை எதிர் கொள்வதும், அவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் ஒரு பக்கமென பரபர நிமிடங்கள் ஒவ்வொரு எபிசோடிலும். மனிதர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என கண்டறிவதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் இருப்பதே சவாலான உலகம். அதில் தன் மனைவி, மகளை கண்டு பிடிக்கிறான். அங்கே இருக்கும் குழுவுக்கு பொறுப்பேற்று தலைவனாகிறான்....